வீடியோ தயாரிப்பு நிறுவனத்தை வாங்கும் கூகுள்

யு ட்யூபில் யார் வேண்டுமானாலும் வீடியோக்களை அப்லோட் செய்து பார்க்கலாம் என்ற நிலை உள்ளது. விரைவில் இதற்கு சில வரைமுறைகள் கொண்டுவர உத்தேசித்துள்ளது கூகுள்.

தொழில்முறை நிறுவனம் மூலம் ஒருஜினல் வீடியோக்களை உருவாக்கி அவற்றை ட்யூப்பில் ஒளிபரப்பும் முயற்சியில் மும்முரமாக உள்ளது கூகுள். இதன் முதல் முயற்சியாக நெக்ஸ்ட் நியூ நெட்வொர்க் எனும் வீடியோ தயாரிப்பு நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுள்ளது.

புதிய குறும்படங்கள், திரைப்படங்களையும் கூட யு ட்யூபில் வெளியிடும் திட்டமும் உள்ளதாம். இதன் மூலம் அதிக விளம்பர வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூகுள் கருதுகிறது.

யு ட்யூபுக்காக கூகுள் வாங்கும் முதல் நிறுவனம் இது என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது


ஏர்போர்ட் ஸ்கேனர் முறையில் பிழை

ஏர்போர்ட்களில் தற்சமயம் பயன்படுத்தி வரும் முழு உடல் ஸ்கேனரில் மிகப் பெரிய பிழை இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள லியான் கைஃப்மேன் மற்றும் ஜோசப் டபிள்யூ.கேரிசன் என்ற இந்த விஞ்ஞானிகள் இந்த பாதுகாப்பு ஓட்டையை கண்டறிந்துள்ளனர். பாதுகாப்பு காரணம் கருதி விமானத்தில் பயணம் செய்ய வரும் அனைவரது முழு உடலையும் ஸ்கேன் செய்யும் புதிய ஸ்கேனரை அமெரிக்கா அண்மையில் அனைத்து விமான நிலையங்களிலும் நிறுவியது. இந்த ஸ்கேனர் மூலம் மனிதனின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலை அப்படியே படம் பிடித்து காட்டும் வண்ணம் இந்த ஸ்கேனர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பெண்களின் உடல் உறுப்புக்களை அப்படியே காண்பிக்கிறது என பலத்த எதிர்ப்பு ஒருபுறம் இருக்க, இந்த ஸ்கேனர் உடலை முழுமையாக ஸ்கேன் செய்வதில்லை என நிரூபித்துள்ளனர். உடலின் சில குறிப்பிட்ட பகுதிகள் இந்த ஸ்கேனரில் இருந்து தப்பிவிடுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் அடிவயிற்றில் 40 கிராம் வெடிமருந்தை மறைத்து வைத்து ஸ்கேன் செய்ததில் இந்த ஸ்கேனரால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதே போன்று கை அக்குளுக்கு அடியில் மறைத்து வைக்கும் பொருட்களையும் இந்த ஸ்கேனரால் கண்டுபிடிக்க முடியவில்லை என செய்முறை விளக்கம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது போன்ற உறுப்புகளில் சிறுகத்தி, வெடி மருந்து, மிக சிறிய கை துப்பாக்கிகள் என மறைத்து வைத்து விமானத்திற்குள் எடுத்துச் செல்ல முடியும் என நிரூபித்துள்ளனர். இது குறித்த தகவல் அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த ஸ்கேனரை மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஸ்கேனரை பயன்படுத்தினால் புற்றுநோய் பரவும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments