“நான் ஒரு முழு ரஜினி ரசிகன்”சூப்பர் ஸ்டாருக்கு சினிமா, அரசியல், தொழில்துறை என பல துறைகளில் – அகில இந்திய அளவில் - பல வி.வி.ஐ.பி.க்கள் – ரசிகர்களாக இருப்பது நமக்கெல்லாம் தெரிந்ததே.

சந்தர்ப்பம் வரும்போது அது பற்றிய செய்தி அவ்வப்போது வெளியே வரும். தற்போதும் அப்படி ஒரு செய்தி கசிந்துள்ளது.

சமீபத்தில் ஒரு வி.வி.ஐ.பி. சூப்பர் ஸ்டாரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தியேட்டருக்கு தன் நண்பர்களுடன் சென்று ரோபோவை ரசித்ததாகவும் கூறியிருக்கிறார்.

இன்றைக்கு மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப துறையில் INFOSYS மற்றும் TCS க்கு ஈடாக புகழ் பெற்று விளங்கும் HCL குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான ஷிவ் நாடார் தான் அவர். அகில இந்திய அளவில் தொழில் துறையில் உயர்ந்து விளங்கும் திரு.ஷிவ் நாடார் நம் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு 21/11/2010 அன்று ET Now தொலைக்காட்சிக்கு அவர் அளித்த விரிவான பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் தாம் என்றும், ரோபோ திரைப்படத்தை தமது நண்பர்கள் (HCL-Founders) சுமார் 15 பேருடன் தியேட்டருக்கு சென்று ரசித்ததாகவும் கூறியிருக்கிறார்.

இந்தியாவின் ஐ.டி. மற்றும் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கும் ஒரு பெரிய மனிதர், கொடை வள்ளல் சூப்பர் ஸ்டாரின் ரசிகராக இருப்பது நமக்கெல்லாம் பெருமையே.

கடும் உழைப்பால் முன்னேறி இன்று தொழில் துறையில் கொடிகட்டி பறக்கும் திரு.ஷிவ் நாடாருக்கு ஒரு சாதாரண பஸ் கண்டகடராக வாழ்க்கை துவங்கி – மொழி தெரியாத ஒரு மாநிலத்தில் தஞ்சம் புகுந்து, தனது கடும் உழைப்பாலும் அற்பணிப்பாலும் – அதே மாநிலத்தில் ஒரு முன்னணி நடிகராகி – இன்று நாடே போற்றும் சூப்பர் ஸ்டாராக – இந்திய சினிமாவின் அடையாளமாக வாழ்ந்துவரும் – எளிமையின் சிகரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பிடித்துப் போனதில் ஆச்சரியமில்லை தான்!!!


Source: http://economictimes.indiatimes.com/opinion/interviews/We-expect-to-touch-6-billion-in-3-years-Shiv-Nadar-HCL-Tech/articleshow/6965172.cms?curpg=3


courtesy : OnlySuperstar.com

No comments: