செலவு செய்யாமல் வாழும் அதிசய மனிதர்


இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் நகரைச் சேர்ந்தவர் மார்க்பாயல் (31). கடந்த 2 வருடமாக இவர் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்து வருகிறார். இவர் இங்கிலாந்தின் பிரீசைக்கிள் அமைப்பு வழங்கிய “கேரவன்” வேனில் தங்கியுள்ளார்.

அந்த வேனை அங்குள்ள ஒரு பண்ணை அருகே நிறுத்தியுள்ளார். தேவையான உணவு பொருட்களை தானே பயிரிட்டு வளர்க்கிறார். விறகு அடுப்பு மூலம் சமையல் செய்கிறார். தனக்கு தேவையான மின்சாரத்தை சூரியஒளி மூலம் தயாரித்து கொள்கிறார். துணியை குளிர்ந்த நீரில் ஊற வைத்து கையால் துவைத்து சுத்தம் செய்து கொள்கிறார்.

“இன்கம்மிங்” வசதியுடைய செல்போனையும், சூரிய ஒளியில் இயங்கும் லேப்டாப் கம்ப்யூட்டரையும் பயன்படுத்துகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக வேகன் என்ற இடத்தில் தங்கியிருந்தார். அங்கு அவரது மனதில் உதித்ததுதான் பணம் தேவையில்லாத உலகை உருவாக்க வேண்டும் என்ற திட்டம் உதித்தது.

இது குறித்து கூறியதாவது:-

நண்பர்களுடன் உலகில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசுவேன். அப்போது, சுற்றுச்சூழல் பாதிப்பு, தொழிற்சாலைகளினால் மனிதனுக்கு ஏற்படும் பிரச்சினைகள், உலகநாடுகளிடையே சண்டைகள் குறித்து ஆலோசனை நடத்துவோம்.

இவை அனைத்தும் மனித இனத்துக்கு துன்பம் இழைப்பவை. பணம் சம்பாதிக்கதான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, பணமில்லாமல் வாழ கற்றுக்கொடுக்கவே இந்த வாழ்வை மேற்கொண்டேன். அன்றாடம் தேவைப்படும் பொருட்களை தானே தயாரித்து கொண்டு வாழ்கிறேன் என்றார்.
courtesy.malaimalar

நம் எல்லோரும் யோசிக்க வேண்டிய விஷயம் இது

http://karurkirukkan.blogspot.com/

No comments: