தற்கொலை எண்ணம் தடுப்பது அவசியம்

''தற்கொலை எண்ணத்தில் இருந்து, விடுபட விரும்புபவர்களுக்காகவே அமைக்கப்பட் டுள்ள 24 மணி நேர இலவச டெலிபோன் சேவையை சினேகா வழங்கி வருகிறது. மாணவர்கள் மட்டுமல்ல; பெற் றோரும் கூட அழைக்கலாம்'' என 'சினேகா' இயக்குனர்,சாந்தி தெரிவித்துள்ளார்.

கயல்விழி கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தாள். பொதுத் தேர்வுகள் முடிந்துவிட்ட உற்சாகத்தில் இருப்பது போல் தோன்றுகிறது. கோடை விடுமுறையைக் கொண்டாடும் விதமாக, ஒட்டுமொத்த குடும்பமும் கூடி, குதூகலத்தில் இருந் தது. ஆனால், அவளுடைய வேதனை, அவளுக்கு மட்டும் தான் தெரியும். கணிதம், வேதியியல் இரண்டும் மிகக் கடினமாக இருந்தன. தேர்வு முடிவுகள் வெளியாகும்போது, எல்லாரும் என்ன நினைப்பர் என யோசிக் கும்போதே வயிற்றைப் பிசைகிறது. இப்படியாக, அவளது சிந்தனை ஓட்டம் நிலையில்லாமல் அல்லாடிக்கொண்டிருந்தது.

விடலைப் பருவம் என்பதே உணர்ச்சிப்பூர்வமான அனுபவங்கள் நிறைந்தது தான். ரோலர் - கோஸ்டர்கள் போல, ஏற்ற இறக்கங்கள் கொண்டதும் கூட. அந்த வகையில், பொதுத் தேர்வு முடிவுகள், இந்த விடலைகளின் வாழ்க்கையில் மிக முக் கிய பங்காற்றுகின்றன. பல சமயங்களில், பயமுறுத்தும் பூச் சாண்டிகளாகவும் இருக்கின்றன. நல்ல கல்லூரிகளில் இடம் கிடைப்பது, குறிப்பிட்ட சில துறைகளுக்கு அதிகரித்துவரும் போட்டி போன்றவை, தேர்வு முடிவுகள் பற்றிய பீதிக்கு முக்கிய காரணமாக அமைகின்றன. பக்கத்து வீட்டு பையன்களுடனான ஒப்பீடு, பெற்றோரின் அதீத எதிர்பார்ப்பு ஆகியவை, மாணவர்கள் மீது பெரும் சுமையாக இருந்து அழுத்துகின்றன.

தேர்வை ஒட்டி இந்த நிர் பந்தங்கள் என்றால், அதற்கு முன்னதாகவே குடும்ப சூழ்நிலை, வறுமை, உறவு முறை குழப்பம், பொருளாதாரச் சிக்கல், உடல்நிலையில் கோளாறு... என ஏகப்பட்ட வேதனைகள் அணிவகுத்து நிற்கலாம். இவற்றுக்கெல்லாம் உச்சகட்டமாகத் தான், தேர்வில் தோல்வியும் வந்து சேர்ந்துவிடுகிறது. இதன் விளைவாக மாணவர்கள், தனிமை, மன அழுத்தம், மன உளைச்சல், அவநம்பிக்கை ஆகியவற்றுக்கு ஆட்படுகின்றனர். அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு, தற்கொலை ஒன்று தான் தீர்வாகத் தெரிகிறது. இப்படி தேர்வில் தோல்வியால் மனமுடைந்து, தற்கொலை முயற்சியில் ஈடுபடும் மாணவர்கள் பற்றிய செய்திகளை நாளிதழ்களில் பார்க்கிறோம். இது பற்றிய புள்ளிவிபரங்கள், இந்தப் பிரச்னையின் தீவிரத்தை உணர்த்துகின்றன. 2006ம் ஆண்டு சென்னை மாநகரத்தில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட 2,427 பேரில் 768 பேர், 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் 226 பேர் மாணவர்கள்.

குடும்பத்தின் ஆறுதல், நண்பர்கள் சொல்லும் நாலு நல்ல வார்த்தைகள், 'தேர்வின் தோல்வியே வாழ்வின் தோல்வி யாகிவிடாது' என்ற உண்மையை உணர்தல் போன்றவையே, இந்த நெருக்கடியில் இருந்து மாணவர்களை மீட்டெடுக்கும். மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கான நல்ல வழி, உணர்ச்சிகளையும், வேதனைகளையும் வெளியே கொட்டிவிடுவது தான் என்பது, நிரூபிக்கப்பட்ட உண்மை. யாரேனும் அடுத்தவரிடம் நம் வேதனையைப் பகிர்ந்துகொண் டாலே பாதி துன்பம் பறந்தோடிவிடும் - பிரஷர் குக்கரில் இருந்து நீராவி வெளியேற்றப்படுவது போல.

அந்த அடுத்தவர், யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்: உறவினர், நண்பர், ஆசிரியர், பெற்றோர், அவ்வளவு ஏன்... சினேகா போன்ற தன் னார்வத் தொண்டு நிறுவனங்கள் கூட, இதுபோன்ற சோகத்தைச் சொல்லி அழ, ஆறுதல் மொழி சொல்லத் தயாராக இருக்கின் றன. தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட விரும்புபவர்களுக்காகவே அமைக்கப்பட் டுள்ள, 24 மணி நேர இலவச டெலிபோன் சேவையை சினேகா வழங்கி வருகிறது. மாணவர்கள் மட்டுமல்ல; பெற் றோரும் கூட அழைக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 2464 0050 என்ற எண்ணில் அழையுங்கள் அல்லது, 11, பார்க் வியூ ரோடு, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 என்ற முகவரிக்கு, காலை 8 மணி முதல் இரவு 10 மணிக்குள் நேரில் வாருங்கள். help@snehaindia.org என்ற முகவரிக்கு இ-மெயிலும் அனுப்பலாம்.


thanks-source.dinamalar.

Post a Comment

0 Comments