கடந்த சனி, ஞாயிறு இரு நாட்களும் நடந்த இந்த ஆண்டு சிங்கப்பூர் வேலைவாய்ப்பு கண்காட்சியில் 5,000 வேலைகளுக்கு 150,000 விண்ணப்பங்கள் குவிந்தன.
டிபிஎஸ் வங்கியும் கத்தார் ஏர்வேஷும் மக்கள் அதிகமானோரை ஈர்த்துள்ளது. வங்கித் துறையும் சுற்றுப்பயணத்துறையும் 30,000க்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. மொத்த விண்ணப்பங்களில் 10 விழுக்காட்டை செந்தோசா ஒருங்கிணைந்த உல்லாசத் தளம் பெற்றது.
இந்த ஆண்டின் வேலை வாய்ப்புக் கண்காட்சியில் 500 நிறுவனங்கள் பங்கேற்றன. முதல் முறையாக பங்கேற்ற டிபிஎஸ் வங்கி 500 வேலைகளுக்கு ஆள் எடுத்தது.
ஏறக்குறைய வேலை தேடும் 60,000 பேர் இருநாள் கண்காட்சிக்குச் சென்றதாக ஏற்பாட்டுக் குழு கூறியது.
thanks.tamilmurasu
0 Comments