சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வாழ்க வளமுடன்

நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


.சிறு வயதில் இருந்தே நான் தலைவரின் ரசிகன் , என் நண்பர்கள் அனைவர்க்கும் தெரியும் நான் தலைவரின் ரசிகன் என்பது , எனையறியாமல் எனக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு உண்டு , சிறு வயதில் நான் சோகமாக இருக்கும்போது நான் தலைவரின் படங்களையோ அல்லது பாட்டோ நான் கேட்டால் நான் என்னையறியாமல் நான் சோகத்தை மறந்து விடுவேன் , அது இன்று வரை தொடர்கிறது , இது உண்மை எதோ சும்மா கதை விடுறேன்னு நினைகாதீங்க ? இது உண்மை .
என் நண்பன் ஒரு நாள் நான் பேருந்தை விட்டு ரூமிற்கு போய் கொண்டு இருக்கும்போது என்னை பின்னாடி இருந்து பார்த்து இருக்கிறான் , பிறகு சொன்னான் , நீ நடந்து போறது ரஜினி மாதிரியே இருக்கு அப்டீன்னு சொன்னான் , அதிலிருந்து தான் தெரிந்தது எனக்கு என்னில் தலைவர் எந்த அளவுக்கு கலந்து இருக்கிறார் என்று , அவரை பற்றி சொல்ல தனியாக ஒரு வலைபூ கூட நான் ஒன்று ஆரம்பித்தேன்(www.rajinigantham.blogspot.com) ஆனால் அதை வேலை பளு காரணமாக தொடர முடியாமல் போய்விட்டது .

நட்பு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நம் சூப்பர் ஸ்டார் ஒரு உதாரணம்
குரு பக்தி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நம் சூப்பர் ஸ்டார் ஒரு உதாரணம்
அடுத்தவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதற்கு நம் சூப்பர் ஸ்டார் ஒரு உதாரணம்
எளிமை என்பதற்கு எடுத்துகாட்டு நம் சூப்பர் ஸ்டார் ஒரு உதாரணம்
எதார்த்தம் என்பதற்கும் எடுத்துகாட்டு நம் சூப்பர் ஸ்டார் ஒரு உதாரணம்
மேலும் தலைவரை பற்றி எழுத நிறைய உண்டு ,
எனக்கு தெரிந்து ரசிகனை தெய்வம் என்று சொன்ன முதல் நடிகன் நமது சூப்பர் ஸ்டார்
பணம் ,புகழ் எவ்வளவு வந்தாலும் +
ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நம் சூப்பர் ஸ்டார் ஒரு உதாரணம் .
(தலைவரை பற்றி எதாவது விட்டு போய் இருந்தால் நீங்கள் கூறவும் )
இந்த பிறந்த நாளில் இத்தகைய பெரும் பேரு பெற்ற நம் சூப்பர் ஸ்டார் திரு .ரஜினிகாந்த் அவர்களை நீண்ட நாள் ஆரோகியமான முறையில் எல்லா பெரும் பெற்று வள வேண்டும் என்று வாழ்த்தி ஆனடவனை பிரார்த்திப்போம்


(இது என்னுடைய நூறாவது இடுகை ,வித்தியாசமா எதாவது செய்யணும்னு யோசிச்சிட்டு இருந்தேன் , ஆனால் கரெக்டா தலைவருக்கு பிறந்த நாள் வந்து விட்டது அவரை வாழ்த்துவதற்கு இந்த இடுகை அமைந்ததை நினைத்து மிகவும் சந்தோசபடுகிறேன்..நிறைய எழுத வேண்டும் என்று ஆசை , ஆனால் வேலை பளு காரணமாக முடியாமல் படங்களை போட்டு சமாளித்து வருகிறேன் , இனி தினமும் எழுத முயற்சிக்கிறேன் )

தலைவரின் புகழ் சொல்லும் இனிய தளங்கள்
www.rajinifans.com
www.onlysuperstar.com
www.envazhi.com

நன்றி

3 comments:

அன்புடன் மணிகண்டன் said...

ஒரு உன்னத மனிதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

சிங்கக்குட்டி said...

உங்கள் பதிவும் தல படமும் அருமையாக இருக்கிறது.

நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள் :-)

BOSS said...

வாங்க சிங்க குட்டி
மிக்க நன்றி நண்பா ,
உங்களது வாழ்த்துக்கள் எனக்கு உண்மையிலேயே சக்தி அளிக்கின்றது .