ஏர் இந்தியா

30000 அடி உயரத்தில் 106 பயணிகளை அம்போவென விட்டு மோதிக் கொண்ட ஏர் இந்தியா விமானிகள்! , இந்த செய்தியை படிக்கையில் உங்களுக்கு என்ன தோன்றுகிறது , இந்த செய்தியை வெளிநாட்டினர் படிக்கையில் நம் இந்தியாவை பற்றி என்ன நினைக்கதோன்றும் ? , விமானத்தில் உள்ள பணியாளர்களுக்குள் பிரச்சினை இருந்தால் விமானம் தரை இறங்கியது அவர்களது பிரச்சனையை வைத்துகொள்ளவேண்டியதுதானே ? இவர்களின் சிறுபிள்ளை தனமான செயலால் நம்முடைய பெயர் மோசமாகிக்கொண்டே போகிறது !
ஏற்கனவே உலக நாடுகளில் நம் இந்தியாவின் பெயர் மிகவும் மோசமாக இருக்கிறது ,(பாதுகாப்பு குறைபாடு காரணமாக , இந்தியாவிற்கு செல்லவேண்டாம் என்று அமெரிக்கா தனது நாடு மக்களுக்கு கூறியது நினைவிருக்கலாம் ).

ஏர் இந்தியாவில் இது போல பலமுறை தவறுகள் நடக்கிறது , இது போல செயல்கள் தடுக்காமல் விட்டால் சர்வதேச அளவில் இந்தியாவின் பெயர் மோசமாக வாய்ப்பு உள்ளது.

No comments: