தமிழ்நாட்டின் தலை நகரம் , ஏன் தமிழ்நாட்டின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று ,தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் நகரம் , நம் ஊரில் பட்டி , தொட்டி , கிராமம் எல்லா ஊர்களில் இருந்தும் பிழைப்பதற்காக சென்னைக்கு மக்கள் சென்று கொண்டு இருகிறார்கள்,அதனால் சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாகி கொண்டே போகிறது , இட நெருக்கடி , வாகனங்கள் அதிகமாகி போனதால் , காற்று மாசு பட்டுக்கொண்டு இருக்கிறது , இவை எல்லாம் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டுஇருக்க , நாம் இப்பொது சென்னை மக்களை பற்றி பார்ப்போம்!
சென்னையில் பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.ஒருபுறம் குப்பத்தில் உள்ள மக்கள் , மறுபுறம் கடல் ஓரத்தில் உள்ள மக்கள் , நகருக்குள் வந்தால் நடுத்தர வர்க்கத்து மக்கள் மற்றும் வசதி படைத்த மக்கள் என்று அனைத்து தரப்பிலும் மக்கள் உள்ளார்கள் , சென்னையில் பலதரப்பட்ட ஜாதி , மதம் , மொழி பேசுகின்றவர்கள் வசித்து வருகிறார்கள்.ஆனால் அனைவரையும் நம் மக்கள் அன்போடு அரவணைத்து பழகிக்கொண்டு வருகிறார்கள் . கூலி தொழில் செய்பவர் முதல் பெரிய பணக்காரர் வரை அனைவரும் மிகவும் விரும்புவது சினிமா , அந்த சினிமா தொழில்சாலை உள்ள இடம் இந்த சென்னையில் தான் , கோடம்பாக்கம்,வடபழனி சென்றால் சினிமா இங்கு உருவாகி கொண்டு இருப்பதை பார்க்கலாம் ,
பல்வேறு மாநிலங்களில் இருந்து இங்கு வந்து பிழைப்பு நடத்தி கொண்டு இருக்கும் மக்களிடம் நம் மக்களும் அண்ணன் ,தம்பி , மாமன் , மச்சான் என்று அன்பாக பழகிக்கொண்டு இருப்பார்கள்.உண்மையில் நான் இதை பெருமைக்கு சொல்லவில்லை வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி பல்வேறு மொழி பேசுகின்றவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்களா ? எனக்கு தெரிந்த வரையில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் .உண்மையில் தமிழன் , தான் கஷ்டமான நிலைமையில் இருந்தாலும் உதவி என்று வருபவர்க்கு உதவி செய்கிறான் , இந்த நல்ல எண்ணம் நம்மிடம் இருக்கும் வரையில் தமிழனுக்கு அழிவே கிடையாது.
நாமே பலமுறை சொல்வது உண்டு நாம் ஏமாளி என்று , பிறருக்கு உதவி செய்துவிட்டு நாம் இல்லாமல் இருக்கிறோம் என்று , அப்படி இல்லை உதவி என்பது எந்தவித நோக்கமும் இல்லாமல் , எதிர்பார்ப்பு இல்லாமல் செய்வது , பிறருக்கு உதவி செய்வதால் நாம் என்றும் தாழ்ந்து விடப்போவது இல்லை .
உலகிலேயே மிகப்பெரிய இரண்டாவது கடற்கரை நம் சென்னையில் உள்ளது என்பது நாம் மிகவும் பெருமைப்பட்டு கொள்ளவேண்டிய ஒன்று , நாம் அதை சுத்தமாக வைத்து கொள்ளவேண்டியது நம்முடைய கடமை .தகவல் தொழில் நுட்ப்பத்தில் நாம் பெங்களுருக்கு போட்டியாக இருக்கிறோம் , நம் வளர்ச்சி மிக அபரிவிதமான வளர்ச்சி,இப்படி நாம் சென்னையை பற்றி நிறைய பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம் , இவ்வாறு வளர்ச்சிக்கு காரணம் சென்னையில் வசிக்கும் ஒவ்வொருவும் எதாவது ஒரு விதத்திலாவது காரணமாக இருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது.
சென்னையை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் சென்னை -
என்றைக்குமே THE BOSS OF INDIAN CITIES
(சென்னை மக்களை பற்றியும் , சென்னை பற்றியும் எழுத வேண்டும் என்பது என் ஆசை , நான் சொல்ல நினைத்த விஷயங்கள் சரியாக வந்ததா என்று தெரியவில்லை , இதில் ஏதும் தவறு இருந்தால் சொல்லுங்கள் , மேலும் உங்களது கருத்துகளை நான் மிகவும் எதிர்பார்கிறேன் )
நன்றி
6 Comments
Ungaluku therinchadhu avlo than boss...
மற்றவர்களை தாழ்வாக சொல்லவேண்டும் அல்லது யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது எனது எண்ணம் அல்ல !
தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் .நன்றி
நீங்கள் சென்னையில் வசிக்கிறீர்களா?
அல்லது சென்னையில் வசித்த்திருக்கிறீர்களா?
மேலே நான் கேட்டிருக்கும் கேள்விகள் சும்மா ஒரு க்யுரியாசிட்டிக்காகத்தான்.
விருப்பமிருந்தா பதில் சொல்லுங்க.
நான் உங்க பாலோயர் தான்.
நான் சென்னையில் வசித்தவன்
அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com
சென்னையைப் பற்றியும் சென்னை மக்களைப் பற்றியும் நெறைய எழுத நானும் ஆவலாக உள்ளேன்.
நன்றி அஷ்வின் ஜி அவர்களே