சிவாஜி படத்திற்கு விருது

by 10:13 AM 1 comments
சிவாஜி படத்திற்கு விருது கொடுத்து இருப்பது நம்மில் பலருக்கு ஆச்சர்யம் , ஏன் அந்த படத்திற்கு விருது , அப்படி என்ன அந்த படத்தில் ரஜினி நடித்து விட்டார் என்று ?

வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்கும் ஒருவர் தன் தாய் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் சம்பாதித்த பணத்தில் மக்களுக்கு நல்லது செய்கிறார் .
நாம் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் நம் தாய் நாட்டை காப்பாற்ற வேண்டும் , என்ற எண்ணம் மக்களுக்கு வர வேண்டும் என்ற நல்ல என்னத்திற்காக இந்த விருதை கொடுக்கலாம் .நம் வாழும்போது எவ்வளவுதான் சம்பாதித்தாலும் , இறந்த பின் நம் எதுவும் கொண்டு போக முடியாது என்ற விஷயத்தை நம் அனைவர்க்கும் ரஜினிகாந்த் மூலமாக எளிதில் அனைவரின் மனதில் பதியவைத்து விட்டார் இயக்குனர் , இந்த நல்ல விஷயத்திற்காக விருது கொடுக்கலாம்.


வெளிநாட்டில் இந்திய சினிமா என்றாலே ஹிந்தி சினிமாதான் என்ற ஒரு நிலையை மாற்றிய படம் , அமெரிக்காவில் டாப் டென் படங்களில் ஒன்றாக வந்தது இந்த படம் , இதன் மூலம் அமெரிக்க டாப் டென்னில் வந்த முதல தமிழ் படம் என்ற பெருமை இந்த படத்திற்கு , தமிழனின் பேரை உலகமெங்கும் பரவசெய்த பெருமை இந்த சிவாஜி படத்திற்கு உண்டு.இந்த ஒரு விஷயம் போதும் விருது கொடுக்க .
விதியை மதி இருந்தால் வெல்லலாம் என்பதை எடுத்து காட்டிய படம் , இது போல எவ்வளவோ நல்ல விஷயங்கள் உள்ளன , இந்த படத்திற்கு விருது கொடுக்க பல நல்ல காரணங்களை கூறலாம்.


( இந்த பதிவு யாருக்கும் போட்டியாகவோ , புண்படுத்தவோ அல்ல , இது யாருடைய மனதையும் புண் படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும் )
நன்றி

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

1 comments:

Jack said...

With such a scale, every tamil movie deserves an award. There is a T.Ranjendar movie called Veerasamy, I guess it was released on 2007. It should have been the best movie and TR should have been the best actor. As a MLA TR does so many good things to the society and provides heaps of advises for the young people.