தமிழக மின் வாரியம் புது முயற்சி


"ஓபி' அடிக்காமல் பணிபுரியும் சிறந்த ஊழியருக்கு, மாதந்தோறும் கவுரவப் பரிசு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. திவாலாகும் மின் வாரியத்தை சீரமைக்க, இந்த புதிய திட்டத்தை, மின் வாரியம் அறிமுகப் படுத்தியுள்ளது.

தமிழக மின்துறை உயரதிகாரிகள், பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, மின் வாரியத்தின் அனைத்து ஊழியர்களுக்கும், 40 கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன.தினமும் வருகைப் பதிவேடு பராமரித்தல், சரியான மீட்டர்கள் பொருத்தி, 100 சதவீதம் கணக்கிடுதல், 100 சதவீத வசூல், பிரச்னைகள் குறித்து உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி, நிலைமையை சரி செய்தல் உள்ளிட்ட, பல்வேறு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன.

புதிய திட்டம்:

இதற்கிடையில், மின் வாரியத்தில் உள்ள, அனைத்து வகை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடையே, பணியில் சிறப்பாக செயல்படும் ஒருவரை மாதம்தோறும் தேர்ந்தெடுத்து, அவருக்கு, பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதல் நிபந்தனையே, "ஓபி' அடிக்காமல், ஒழுங்காக அலுவலகத்திற்கு வர வேண்டும்; அடிக்கடி விடுமுறை எடுக்கக் கூடாது; அலுவலக நேரத்தை வீணடிக்காமல், ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தான்.


நிறுவனத்திற்கு நன்மதிப்பை தேடித் தருபவர்' (வேல்யூ கிரியேட்டர்ஸ் ஆப் ஆர்கனைசேஷன்) என்ற பெயரில், இந்த திட்டம் செயல்படும். இதற்காக, மின்துறை உற்பத்திப் பிரிவு இயக்குனர் தலைமையில், தேர்வுக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியினர், ஒவ்வொரு பிரிவு வாரியாக வரும் பரிந்துரை பட்டியலில் உள்ளவர்களில், மாதந்தோறும் ஒருவரை தேர்ந்தெடுப்பர். தேர்வாகும் நபருக்கு, மாதத்தின் கடைசி பணி நாளில், பரிசும், சான்றிதழும் தரப்படும்.

தற்கொலை - ஏன் ?


டுத்த 15 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்கும் என்ற செய்தி வெளியான அதே நாளில் வெளியான செய்தி இது. இந்தியாவில் கடந்த ஆண்டு 1,34,599 பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கின்றனர்!

 தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் அளித்திருக்கும் இந்தக் கணக்கின்படி பார்த்தால், நம் நாட்டில் சராசரியாக ஒரு நாளைக்கு 368 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதாவது, ஒரு மணி நேரத்துக்கு 15 பேர்!இந்தக் கணக்கில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு. தற்கொலை செய்துகொண்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது, நாட்டில் பொருளா தார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். நாட்டிலேயே அதிகமான தற்கொலைகள் பதிவாகி இருக்கும் முதல் இரு இடங்கள் நாட்டின் மென்பொருள் தலைநகரங்களான பெங்களூரு மற்றும் சென்னை. இதேபோல, நாட்டின் ஆயத்தஆடைக் கேந்திரமான திருப்பூரிலும் தற்கொலைகள் அதிகம் பதிவாகி இருக்கின்றன.
தற்கொலை செய்துகொண்டவர்களில் 41 சதவிகிதத்தினர் சுயதொழிலில் இருந்தவர்கள். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், மாணவர்கள் தற்கொலை விகிதம் பெரிய அளவில் அதிகரித்து இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்குள் கிட்டத்தட்ட 26 சதவிகிதம்!
இது அரசு சொல்லும் கணக்கு. அரசு ஏற்க மறுக்கும் இன்னொரு கணக்கும் உண்டு. இந்தியாவில் அரை மணி நேரத் துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார். கடந்த 16 ஆண்டுகளில் வரலாற்றிலேயே அதிகமான தற்கொலைகள் பதிவான இடமாக உருவெடுத்திருக்கிறது மகாராஷ்டிரத்தின் விதர்பா. இங்கு தற்கொலை செய்துகொள்பவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் விவசாயிகள்.
பெங்களூரு பொறியாளர்கள், திருப்பூர் தொழிலாளிகள், விதர்பா விவசாயிகள், டெல்லி மாணவர்கள்... இந்தத் தற்கொலைகள் அனைத்தையும் ஒரே நேர்க்கோட்டில் பார்க்க முடியுமா? அடுத்த வேளைக்கே வழி தெரியாத விதர்பா விவசாயத் தொழிலாளி யின் தற்கொலையும் உச்சபட்ச ஊதிய விகிதத்தை அனுபவிக்கும் பெங்களூரு பொறியாளனின் தற்கொலையும் உணர்த் தும் செய்தி என்ன?
காலை 5 மணிக்கு எழும் ஒரு விவசாயி மாலை 6 மணிக்கு வயல் வேலை முடித்து இரவு 10 மணிக்குப் படுக்கைக்குச் செல்கிறார். காலை 6 மணிக்கு எழும் ஒரு தொழிலாளி ஆலை வேலை முடித்து படுக்கைக்குச் செல்ல இரவு 11 மணி ஆகிறது. காலை 7 மணிக்கு எழும் ஒரு பொறியாளன் இரவு வீட்டிலும் தன் கணினி முன் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நேரம் இரவு 12 மணியைக் கடக்கிறது. மாணவர்கள் யார்? இவர்களைக் கவனித்துக்கொண்டிருக்கும் இவர்களுடைய பிள்ளைகள்!
இந்தியர்களுக்கு இப்போது எல்லாம் தூங்கவே நேரம் இல்லை. மனிதத்தன்மைஅற்ற இந்தியப் பொருளாதாரத்தை இதற்குக் காரணமாக நீங்கள் சொல்லலாம். உண்மைதான். ஆனால், அதைத் தாண்டி இன்னொரு காரணமும் உண்டு. இந்தியர்களுக்கு வாழ்க்கை என்பது பிழைப்பாக மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறது. பண அடிப்படையிலான, பொருளாதார அடிப்படையிலான வளர்ச்சி மட்டுமே இங்கு ஆரோக்கியமான வாழ்க்கையின் குறியீடாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு நல்ல உணவைச் சாப்பிடுவது, நல்ல இசையைக் கேட்பது, நல்ல புத்தகத்தை வாசிப்பது, நல்ல திரைப்படத்தைப் பார்ப்பது, விருப்பமான இடங்களுக்கு விருப்பமானவர்களுடன் செல்வது... எல்லாமே இந்தியர்களுக்கு அந்நியமாகிக்கொண்டிருக் கின்றன!
அதேசமயம், ஒருபுறம் ஒரு நாளில் தங்கள் சுய சந்தோஷத்துக்கு எனச் சில நிமிஷங்களை ஒதுக்கிக்கொள்ள முடியாத இந்தியர்கள், மறுபுறம் கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் நிஜ உலகுக்கு அப்பாற்பட்ட மெய்நிகர் (Virtual World) உலகில் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சியும் செல்பேசியும்  இணையமும் அந்த உலகத்தில் வசிக்க அவர்களுக்குப் போதுமானவையாக இருக்கின்றன. நுகர்வுக் கலாசாரம் அந்த வாழ்க்கையைமேலும் இனிமையானதாக்குகிறது.


தன் தந்தையுடன் 10 நிமிஷம் அமர்ந்து பேச முடியாதவர்களுக்கு ஃபேஸ்புக்கில் முகம் தெரியாதவர்களுடன் மணிக்கணக் கில் சம்பாஷணையில் ஈடுபடுவது எப்படிச் சாத்தியமாகிறது? தன் மனைவியுடன் உறவுகொள்வதைத் தவிர்ப்பவர்களை இணையத்தில் வரும் நீலப்படங்கள் எப்படி திருப்திப்படுத்துகின்றன?
தான் பங்கேற்காமல், தனக்குப் பங்களிக் கும் உறவுகள் நிரம்பிய ஓர் உலகத்தை  இந்தியர்கள் எதிர்பார்க்கிறார்கள். பணமும் தொழில்நுட்பமும் அந்த மாய உலகத்தை அவர்களுக்குச் சாத்தியமாக்குகின்றன. திடீரென ஒரு நாள் நிஜ உலகம் தன் தாக்குதலைத் தொடுக்கும்போது அதை எதிர்கொள்ள முடியாதவர்களாகிவிடு கிறார்கள். அறநெறிகள், இயற்கை, கடவுள்... எல்லாவற்றாலும் கைவிடப்பட்டவர்களாகி விடுகிறார்கள். தனிமையும் பகிர்ந்துகொள்ள முடியாத சோகமும் தற்கொலையை நோக்கி அவர்களைத் தள்ளுகின்றன.

புகழ்பெற்ற பிரெஞ்சு திரைப்படமான 'ஃபயர் வித் இன்’னின்  இறுதிக் காட்சியில் அதன் கதாநாயகன் ஆலேன் லெர்வா துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட பின்னர், அவன் சொல்வதுபோல திரையில் தோன்றும் வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன.  
''நீங்கள் என்னை நேசிக்காததால், நான் உங்களை நேசிக்காததால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். நம்முடைய உறவுகள் கோழைத்தனமாக இருந்ததால், நம் உறவுகளைப் பிணைப்பதற்காக நான் தற்கொலை செய்துகொள்கிறேன். உங்கள் மீது அழிக்க முடியாத கறையை நான் விட்டுச் செல்வேன்!''ஆமாம்... அந்தக் கறையுடன்தான் இந்தக் கட்டுரையை நீங்கள் படித்து முடிக்கிறீர்கள்!source.vikadan

ஏ.டி.எம். அக்கவுன்டில் பணத்தை பாதுகாப்பது எப்படி?


முன்பெல்லாம் ரொக்கமாகப் பணத்தை கையில் வைத்துக் கொள்ள பயப்படுவார்கள். ஆனால் இப்போது டெபிட் கார்டுகளை வைத்திருக்கதான் அதிகம் பயப்பட வேண்டிருக்கிறது! காரணம், சமீப காலமாக பலருடைய பேங்க் அக்கவுன்டில் இருந்து அவர்களுக்குத் தெரியாமல் பணம் சூறையாடப்பட்டு விடுவதுதான்!
ஏ.டி.எம். கார்டில் இருக்கும் தகவல்களை 'ஸ்கிம்மர்’ எனும் கருவி மூலம் அபகரித்து, அதைக் கொண்டு போலி கார்டுகளை உருவாக்கி, பணத்தை எடுத்து விடுகிறார்கள் சில சமூக விரோத சக்திகள். குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் இத்தகைய நவீன கொள்ளைகள் அதிகமாக நடந்து வந்தாலும், மற்ற இடங்களிலும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
அதனால்  பணத்தைப் பறிகொடுப்பதற்கு முன்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் இழப்பைச் சந்திக்க வேண்டியதிருக்காது.
கவனிக்க வேண்டியவை..!
வழக்கத்திற்கு மாறாக ஏ.டி.எம். இயந்திரத்தின் முன்பக்கத்திலிருந்து ஏதாவது வயர்கள் வெளியே செல்வதைப் பார்த்தால் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தாதீர்கள்.
பின் நம்பரை டைப் செய்யும்போது, அதை யாரும் பார்க்காதபடி மறைத்துக் கொள்ளுங்கள்.
பரிமாற்ற ரசீதுகளை ஏ.டி.எம். இயந்திர அறையிலோ அல்லது அருகிலோ தூக்கி எறியாமல் கையோடு எடுத்துச் செல்லுங்கள்.
ஏ.டி.எம். இயந்திரத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு வங்கியைத் தவிர, அறிமுகம் இல்லாத வெளிநபரிடம் எந்த உதவியையும் கோர வேண்டாம்.
ஏ.டி.எம். சென்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட மெஷின்கள் இருந்து ஏதாவது ஒன்று வேலை செய்யாமல் இருந்தால், மற்றதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. காரணம், மற்ற மெஷின்களை தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்து, 'ஸ்கிம்மர்’ கருவி பொருத்தப் பட்ட மெஷினை பயன்படுத்தும் வகையில் சமூக விரோதிகள் நமக்கு வலை விரித்திருக்கலாம்.
ஏ.டி.எம். இயந்திரத்தைச் சுற்றி சந்தேகப்படும்படியான விஷயங்கள் அல்லது நடமாட்டங்கள் ஏதேனும் இருந்தாலோ அல்லது உங்களது கணக்கில் நீங்கள் செய்யாத  பரிமாற்றங்கள் இருந்தாலோ உங்களது வங்கிக்கும், காவல் துறைக்கும் முதலில் தெரியப்படுத்துங்கள்.
ஓட்டல்கள், கடைகள் போன்ற இடங்களில் பில்லை டெபிட் கார்டு மூலம் செலுத்தும் போது ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். ஏனெனில், நீங்கள் கார்டை கொடுத்து விட்டு உட்கார்ந்துவிட்டால்,  அதை ஸ்கிம்மர் பொருத்திய மெஷினில் ஸ்வைப் செய்தாலும் தெரியாமல் போய்விடும். அதன் மூலம் நம் ஏ.டி.எம். கார்டு தொடர்பான விஷயங்கள் நமக்கே தெரியாமல் திருடு போக வாய்ப்பிருக்கிறது.  
உங்களது செல்போன் மற்றும் இ-மெயில் மூலம் உங்களது வங்கி பரிமாற்றங்களை அறிவிக்கும் எஸ்.எம்.எஸ். அல்லது மெயில்களைப் பெறும் வகையில் வங்கியுடன் தொடர்புபடுத்தி வையுங்கள்.
தொலைபேசி மூலம் உங்களது வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டு வரும் அழைப்புகளை ஏற்று, விவரங்களைத் தராதீர்கள்.
ஏ.டி.எம். பயன்பாடுகளில் ஏற்படும் இழப்புக்கு உச்சவரம்பு உண்டு. அதுபற்றி வங்கியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுவரை நாம் பார்த்தது, நம் ஏ.டி.எம். கார்டை எப்படி பத்திரமாக வைத்துக் கொள்வது என்பது பற்றி. இனி பார்க்கப் போவது, ஏ.டி.எம். கார்டால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு எப்படி தீர்வு காண்பது என்பது பற்றி.
நமது கார்டின் மூலம் பணம் திருடு போகாமல் இருக்க, ரகசிய எண்ணை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஏ.டி.எம். மெஷின் மூலமாகவே நம்பரை மிக எளிதாக எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். உங்களது பிறந்த தேதி, மாதம், வருடம், மற்றும் வாகன எண்களை பின் நம்பராக கட்டாயம் வைக்காதீர்கள்.
ஏ.டி.எம்-ல் இருந்து நீங்கள் பணம் எடுப்பதை வேறு யாரேனும் உற்றுக் கவனிப்பதாக உங்களுக்குத் தோன்றினால், ஏ.டி.எம். சென்டரில் இருந்து வெளியே வருவதற்கு முன்பு உங்களது பின் நம்பரை மாற்றி விட்டு வெளிவருவது நல்லது.
பணம் வராமல் போனால்..!
ஏ.டி.எம். சென்டருக்குச் சென்று ரகசிய எண்ணை சரியாகப் பதிவு செய்தவுடன், பணம் வந்துவிடும். அப்படி வராமல் கணக்கில் எடுக்கப் பட்டதாக காண்பித்தால், பதற்றப்படாமல் உங்களது வங்கிச் சேவைப் பிரிவிற்கு உடனே போன் செய்து, உங்கள் பெயர், முகவரி, வங்கிக் கணக்கு எண், நீங்கள் பயன்படுத்திய ஏ.டி.எம். நம்பர், ஏ.டி.எம். சென்டர் இருக்கும் இடம், பணப் பரிவர்த்தனை நடந்த நேரம், தேதி மற்றும் நீங்கள் பயன்படுத்திய ஏ.டி.எம். எந்த வங்கியினுடயது என்ற முழுத் தகவலையும் தெரிவியுங்கள். முடிந்தால் பணம் எடுக்கப் பட்டதாக காட்டும் ரசீதை வங்கியில் கொடுத்தால் உங்களது பிரச்னை இன்னும் வேகமாக தீர வாய்ப்பிருக்கிறது.
ஏ.டி.எம். இயந்திரங்களில் தவறாக கழிக்கப்பட்ட தொகையை, ஏழு நாட்களுக்குள் வாடிக்கையாளர்களுக்குத் திருப்பித் தரவேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏழு நாட்களைத் தாண்டிச் செல்லும் பட்சத்தில் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டும் என கூறியுள்ளது.

கார்டு மாட்டிக் கொண்டால்..?
உங்கள் ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை மூன்று முறைக்கு மேல் தவறாக டைப் செய்தால், கார்டு மெஷினுக்குள்ளேயே மாட்டிக் கொள்ளும். இப்படி நடந்தால் பதற்றப்படாமல், உங்களது வங்கிச் சேவைப் பிரிவுக்கு உடனே போன் செய்து நடந்ததைச் சொல்லுங்கள். உங்கள் புகாரின் அடிப்படை யில், அந்த கார்டை வேறு யாரும் தவறாகப் பயன் படுத்தாதபடி 'பிளாக்’ செய்து விடுவார்கள். அதன் பின்னர், நீங்கள் வங்கிக்குச் சென்று நடந்த விஷயத்தை விவரமாக எழுதித் தரலாம்.
நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்-ல் உங்கள் கார்டு மாட்டியிருந்தால் ஓரிரு நாட்களி லேயே புதிய கார்டு திரும்பவும் கிடைக்க வாய்ப்புண்டு. மற்ற வங்கியின் ஏ.டி.எம். எனில் குறைந்தது பதினைந்து நாட்களாவது ஆகும். கார்டு தொலைந்தாலும் ஏறக்குறைய இதே நடைமுறைதான். புதிய கார்டு தரும்போது அதற்கு வங்கிகள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கின்றன.
ஆன்லைன் பிரச்னையின்போது..!
பொதுவாக ஆன்லைன் மூலமாக பணப் பரிமாற்றம் செய்யும்போது, கார்டு நம்பர், பெயர், கார்டின் முடிவுக் காலம், சி.வி.வி. நம்பர் போன்ற தகவல்களும், பணம் பெறுபவர்களின் வங்கிக் கணக்கு எண், வங்கியின் பெயரும் ஆன்லைனில் உள்ள படிவத்தில் கேட்கப்படும். அதைச் சரியாகப் பூர்த்தி செய்தால் மட்டுமே பணப் பரிமாற்றம் ஒழுங்காக நடைபெறும். தவறான தகவல்களைத் தந்திருந்தாலோ, மாற்றித் தந்திருந்தாலோ பணப் பரிமாற்றம் நடக்காமல் போவதுடன், வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை இழப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
செ.கார்த்திகேயன்
ஏ.டி.எம். வரலாறு!
.டி.எம். இயந்திரத்தை உருவாக்கியவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்டு பேரோன் (John Shepherd Barron). ஒருமுறை வங்கியிலிருந்து தனது பணத்தை எடுக்க முடியாமல் திணறினார் ஜான் ஷெப்பர்டு. வங்கியின் அலுவலக நேரம் முடிந்ததே இதற்கு காரணம். வங்கியிலிருக்கும் நம் பணத்தை, நாம் விரும்பும்போது எடுக்கும் வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஜான் ஷெப்பர்டு நினைத்தார். காசு போட்டால் சாக்லேட் தரும் இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பணத்தை வழங்கும் ஏ.டி.எம். இயந்திரத்தின் மாதிரியை உருவாக்கினார். அவர் உருவாக்கிய ஏ.டி.எம். இயந்திரம் 1967-ல் வடக்கு லண்டனில் வைக்கப்பட்டது. அதன் பெயர், டிலாரூ (De La Ru) ஆட்டோமேட்டிக் கேஷ் சிஸ்டம்!
அன்றைய ஏ.டி.எம். மெஷினில் பணத்திற்கு விஷேச காசோலைகள் பயன்படுத்தப்பட்டன. காசோலைகளை இயந்திரத்தில் வைப்பதற்கு முன்பாக 14 இலக்கம் கொண்ட ரகசிய எண்ணை தெரிவிக்க வேண்டும். 14 இலக்க எண்ணை நினைவில் வைத்துக் கொள்வது கடினமாக இருப்பதாக ஷெப்பர்டின் மனைவி கரோலின் தெரிவிக்க, எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும்படி நான்கு இலக்க ரகசிய எண்ணை உருவாக்கினார். இன்றுவரை அந்த முறையே தொடர்கிறது.
மீபத்தில் சென்னையில் நடந்த ஏ.டி.எம். பண அபகரிப்பு குறித்து வங்கி மோசடித் தடுப்பு பிரிவின் உதவி கமிஷனர் ஜான்ரோஸிடம் கேட்டோம். ''சென்னையில் மட்டும் இதுவரை தங்களது ஏ.டி.எம். கார்டிலிருந்து பணம் திருடு போயிருப்பதாக 212 பேர் புகார் செய்துள்ளனர். போலி ஏ.டி.எம். கார்டுகளின் மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம். மூலம் கொள்ளையடிப்பவர்கள் பெரும்பாலும் பெட்ரோல் பங்க், ஓட்டல் மற்றும் பொருள் வாங்கக்கூடிய இடங்களையே குறி வைத்து மோசடி செய்கிறார்கள். அங்கிருக்கும் பணியாளர்களிடம் இவர்கள் தயாரித்த 'ஸ்கிம்மர்’ இயந்திரத்தைக் கொடுத்து, அந்த மெஷினிலும் கார்டை தேய்க்கச் சொல்கிறார்கள். இதற்கு இவர்கள் கொடுக்கும் கூலி கார்டு ஒன்றுக்கு 1,000 ரூபாய். இப்படி தேய்க்கும்போது பின் நம்பர் உள்பட கார்டு குறித்த தகவல்கள் அனைத்தும் அந்த மெஷினில் பதிவாகிவிடுகிறது. இதை வைத்து போலி ஏ.டி.எம். கார்டுகளை தயார் செய்து பணத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள். ஏ.டி.எம். கார்டின் பின் நம்பரை அடிக்கடி மாற்றினால், உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்'' என்றார்.
இப்படியும் ஒரு வழியா!
முறைகேடு செய்ய நினைப்பவர்கள் முன்னதாகவே, ஏ.டி.எம். மெஷினில் கார்டு வெளிவரும் துவாரத்தில், மடித்த துண்டுக் காகிதம் அல்லது பிளாஸ்டிக் அட்டையைக் கொண்டு செயற்கையாக அடைப்பை ஏற்படுத்தி விடுவார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் உள்ளே செலுத்தும்போது சுலபமாகச் சென்ற ஏ.டி.எம். கார்டு வெளியே வராமல் உள்ளேயே தங்கிவிடும். செயற்கை தடையை கவனிக்க இயலாத வாடிக்கையாளர்கள், கார்டு உள்ளே சிக்கிக் கொண்டதாக நினைத்து விடுவார்கள்.
அப்போது வெளியிலிருக்கும் ஒருவர் உதவிக்கு வருவதுபோல வந்து நமது பின் நம்பரை மீண்டும் டைப் செய்யச் சொல்வார்கள். அதன்பிறகு சிறிது நேரம் ஏதேதோ முயற்சிப்பதுபோல நடித்து கார்டு வரவில்லை என்று கைவிரித்து நம்மை அனுப்பிவிடுவார். பின்னர் அவர் நமது கார்டை வெளியே எடுத்து பணத்தை உருவி விடுவார்!
 - source.vikadan

எல்லாம் நன்மைக்கே

நமக்கு நல்லதைத்தான் செய்வார் பகவான்; நாம் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். எது நடந்தாலும் இது பகவான் சித்தம் என்று ஆறுதல் பெற வேண்டும்; அது, நல்லதாகவே முடியும்.

ஒரு ராஜாவும், மந்திரியும் இருந்தனர். ஒரு நாள் மாம்பழம் நறுக்கினார் ராஜா. அப்போது, அவரது விரல் ஒன்று கத்திபட்டு, துண்டாகி கீழே விழுந்து விட்டது. பக்கத்திலிருந்த மந்திரி, "எல்லாம் நன்மைக்குத் தான்...' என்றார். ராஜாவுக்குக் கோபம் வந்து விட்டது. விரல் துண்டாகி விட்டது; இவர், எல்லாம் நன்மைக்குத்தான் என்கிறாரே என்று கோபப்பட்டு, மந்திரியை சிறையிலிட்டார். மந்திரியும் எல்லாம் நன்மைக்குத் தான் என்று சொல்லிவிட்டு, சிறைக்குச் சென்றார்.

ஒரு நாள் தனியாக காட்டுக்குச் சென்றார் ராஜா. அங்கே சிலர் நர பலி கொடுப்பதற்காக ஆளைத் தேடிக் கொண்டிருந்தனர். ராஜாவைப் பார்த்ததும், அவரை இழுத்துக் கொண்டு தங்கள் தலைவனிடம் சென்றனர். ராஜாவை ஒவ்வொரு அங்கமாக பரிசோதித்தான் தலைவன். ராஜாவுக்கு ஒரு விரல் இல்லாததை பார்த்து, இப்படி அங்கஹீனம் உள்ளவன் நரபலிக்கு பிரயோஜனமில்லை என்று ராஜாவை, "ஓடிப்போ' என்று விட்டு விட்டான்; ராஜாவுக்கு சந்தோஷம்.

அன்று, "எல்லாம் நன்மைக்கு தான் என்று மந்திரி சொன்னது எவ்வளவு உண்மையாகி விட்டது! நாம் அவரை சிறையிலடைத்தது தவறு. உடனே, அவரை விடுதலை செய்து, மன்னிப்பு கேட்க வேண்டும்...' என்று எண்ணி, உடனே சிறைச்சாலைக்கு வந்து மந்திரியிடம் விவரம் சொல்லி, அவரை விடுதலை செய்தான். 

அப்போது, மந்திரியை பார்த்து, "உங்களை சிறையிலடைக்கும் போது, வருத்தப்படாமல், எல்லாம் நன்மைக்கே என்று சொன்னீர்களே... அது எப்படி?' என்று கேட்டான். அதற்கு மந்திரி, "தாங்கள் என்னை சிறையில் அடைக்காமல் இருந்திருந்தால் நானும், உங்களுடன் காட்டுக்கு வந்திருப்பேன். நரபலி கொடுப்பவர்கள் என்னையும் பிடித்து 
போயிருப்பர். 

"எனக்கு அங்கஹீனம் எதுவும் இல்லாததால், என்னை நரபலி கொடுத்திருப்பர். தாங்கள் என்னை சிறையிலிட்டதால், நான் உங்களோடு வராமல் தப்பினேன். அதனால், எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று எண்ணினேன். இப்போதாவது புரிந்ததா? எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்றும், எல்லாம் அவன் செயல் என்றும் நினைக்க வேண்டும்...' என்றார் மந்திரி.
ராஜாவும், "நீங்கள் சொல்வதும் சரி தான்...' என்றார்.

அதனால், நமக்கு எப்போது என்ன நடக்க வேண்டும் என்றுள்ளதோ, அப்போது, அது நடந்து விடும்.
***

Macy's Thanksgiving Day Parade - photos


பாராசிட்டமால் மாத்திரை சாப்பிட்டால் மரணம்:


தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைய ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று அந்நகர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதைவிட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது.

ஆதார்-தேசிய அடையாள அட்டை -ஏன்? எதற்கு ?

நாடு முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. ஏற்கனவே குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வருமானவரி கணக்கு அட்டை என நாடு முழுவதும் ஒரே மாதிரியான அடையாள அட்டைகள் இருந்தாலும் அவை ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணமாக இல்லை. அதிலும் குடும்ப அட்டை போன்றவற்றை பலர் சொந்த ஊரில் ஒன்று, பிழைக்கும் ஊரில் ஒன்று என்று வைத்திருக்கிறார்கள்.

அதிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிமுகமான பிறகு வெளியூரில் உள்ள சொந்தக்காரர்களுக்கு எல்லாம் குடும்ப அட்டை வாங்கி வைத்திருக்கிறார்கள் அரசியல் பிரமுகர்கள்.  இது போன்ற காரணங்களால் அரசின் திட்டங்களை சிலர் மட்டுமே பலமுறை அனுபவிக்கும் நிலைமை நீடிக்கிறது. அதுமட்டுமின்றி ஊரின், நாட்டின் உண்மையான மக்கள் தொகை கணக்கு தெரியாத நிலை. இதற்கெல்லாம் மாற்றாகதான்  தேசிய அடையாள அட்டை இருக்கும்.

காரணம் தேசிய அடையாள அட்டையில் வெறும், பெயர், முகவரி, புகைப்படும் மட்டுமின்றி அடையாள அட்டைக்கு உரியவரின் கை விரல்களின் ரேகை, கருவிழி ஆகியவை பதியப்படும். இதன் மூலம் ஒரே ஆள் பல அட்டைகள் பெறுவது முற்றிலுமாக தடுக்கப்படும். இந்த அட்டையை வழங்க ஒரேமாதிரியான அடையாளத்திற்கான இந்திய தேசிய ஆணையம் (யுஐடிஏஐ) என்ற நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த நந்தன் நீல்கனி இந்த ஆணையத்தின் தலைவராக இருக்கிறார். 

நீண்ட நாள் விவாதத்தில் இருந்த இந்த விவகாரம், சரியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அடையாள அட்டையை வழங்கும் பணியை தொடங்கியது. இப்பணி இப்போது நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து இப்பணி நடைபெறுகிறது. அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவோ, அடையாள அட்டை பெறவோ கட்டணம் ஏதும் கிடையாது. குடிமகனுக்கு ஆதாரமாக பயன்படுவதால் இதனை ஆதார் அட்டை என்றும், அட்டை ஆணையத்தின் ஆங்கில சுருக்கமாக யுடாய் என்றும் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். 

அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது  விண்ணப்பத்துடன், இருப்பிடம், அடையாள சான்றுகளை அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேரில் செல்ல வேண்டும். அவரது இடது கையில் நான்கு விரல்களின் ரேகையும், இரண்டு கைகளின் பெருவிரல் ரேகையும் நகலெடுக்கப்படும். மேலும் கண்ணின் கருவிழியும் பதிவு செய்யப்படும். இவை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. புகைப்படம் எடுக்கப்படும். 

விண்ணப்பங்கள், அடையாள அட்டை வழங்கும் துறைக்கு அனுப்பப்பட்டு அவர்கள் அவற்றை சரிப்பார்த்த பின்னர் அஞ்சலகங்கள் மூலம் வினியோகம் செய்யப்படும். விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்களுக்கு 14 இலக்க வரிசை எண் கொண்ட ஒப்புகை சீட்டு வழங்கப்படும். இந்த எண்ணை கொண்டு விண்ணப்ப பரிசீலனை நிலவரத்தை தெரிந்துக் கொள்ள முடியும். அதற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 1800-180-1947 என்ற இலவச தொடர்பு எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில்.... அஞ்சல் துறை மூலம் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பணி அக்டோபர் 25ம் தேதி சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் நவம்பர் 1ம் தேதி முதல்  ராஜாஜி சாலை பொது அஞ்சலகம், மயிலாப்பூர், பூங்காநகர், தி.நகர் தலைமை அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டது. மேலும் 21ம் தேதி முதல் மாவட்டத்திற்கு ஒரு தலைமை அஞ்சலகங்களில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கும். பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் இப்பணிகள் விரிவுபடுத்தப்படும். விண்ணப்பித்த 45 முதல் 60 நாட்களுக்குள் அஞ்சல் துறை மூலமாக விண்ணப்பதாரருக்கு அடையாள அட்டை அனுப்பி வைக்க முடியும். 

ஆனால், அதற்கு முன்பே சென்னையில் இந்திய வங்கி கிளைகள் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது.  அதையடுத்துதான் அஞ்சல் துறை மூலம் தொடங்கியுள்ளனர். அங்கும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 60 பேர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விரல் ரேகை பதிவு, கருவிழிப்பதிவு, புகைப்படம் எடுத்தல் ஆவணங்களை சரிபார்த்தல் போன்ற பணிகளாலும், அஞ்சலக ஊழியர்களே கூடுதலாக இப்பணியை கவனிக்க வேண்டி உள்ளதால் இந்த நிலைமை.  

இப்படி குறைந்த எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெற வேண்டிய நிலை, ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதியில் முழுமையாக அடையாள அட்டையை வழங்க நீண்ட கால அவகாசம் தேவைப்படும். அதிலும் பல இடங்களில் அஞ்சலகங்களை மூடிவிட்டனர். இந்நிலையில், மார்ச் 2012க்கும் தமிழகத்தில் 2 லட்சம் விண்ணப்பங்களை பெற  அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.இதை சரி செய்ய தனியார் நிறுவனங்களையும், 
வேலையில்லா பட்டதாரிகளையும் இப்பணியில் ஈடுபடுத்த ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக  சென்னையின் பல்வேறு இடங்களில் இப்பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு  பயிற்சி அளிக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியுள்ளது. இப்பயிற்சியில் முதல் கட்டமாக 250 பேர் பயிற்சி பெற்று வருகினறனர். அப்பணிகள் முடிந்ததும் முழு அளவில் அடையாள அட்டை வழங்கும் பணி வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்மை அட்டை
நாடு முழுவதும் இந்த அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு அரசின் உதவிகள், சலுகைகள் பெற  விண்ணப்பிக்க இதுவே முதன்மையான அடையாள அட்டையாக இருக்கும். சமையல் எரியவாயு இணைப்பு பெற, வங்கி கணக்கு தொடங்க, தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை பெற, பள்ளி கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, வாக்காளர் அடையாள அட்டை பெற, குடும்ப அட்டை பெற அனைத்துக்கும் இதவே முதன்மையான தேவையாக இருக்கும். 

அதுமட்டுமின்றி அடிக்கடி வீடு மாறும்போது குடும்ப அட்டை, எரிவாயு இணைப்புகளை எளிதில் மாற்றிக் கொள்ள உதவியாக இருக்கும் என்கிறார்கள்.  ரயில்வே டிக்கெட்டுக்கும் தேவைப்படும்! ஆன்லைனில், தட்கலில் ரயில்வே முன்பதிவு செய்ய ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, அரசு வழங்கும் அடையாள அட்டை, பாஸ்போர்ட்,  வருமானவரி நிரந்தர கணக்கு எண்,  தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் புகைப்படத்துடன் கூடிய கணக்குப்புத்தகம் என ஏதாவது ஒரு ஆவணத்தை ரயில்வே கேட்கிறது. தேசிய அடையாள அட்டை வந்தபிறகு ஓரே ஒரு ஆவணமாக பயன்படுத்தப்போவதாக ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால் நாடு முழுவதும் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்திய பிறகு இந்த முடிவு அமலுக்கு வரும்.

அடையாள அட்டையில் என்ன இருக்கும்

தேசிய அடையாள அட்டையின் மேல் புறத்தில் உள்ள புகைப்படம், பெயர், 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் மட்டுமின்றி உள்ளே சிப் ஒன்று இருக்கும். அது 2 பகுதிகளை கொண்டதாக இருக்கும். ஒன்றில் கைரேகைப்பதிவுகள், கருவிழிப்பதிவு, பிறந்த தேதி போன்ற நிரந்தர தகவல்கள் இருக்கும். மாற்ற முடியாது. இன்னொரு பகுதியில் முகவரி, பணி, கல்வித்தகுதி வங்கி கணக்கு எண் போன்றவை இடம் பெற்றிருக்கும். அதனை வேண்டும்போது மாற்றிக் கொள்ளலாம். வங்கி கடன், கையிருப்பு அட்டை போன்று கையளவு அட்டையாக இருக்கும்.

தேவையான ஆவணங்கள்

தேசிய அடையாள அட்டை வாங்க 3 விதமான ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஒன்று அடையாளச் சான்றாகவும், இன்னொன்று முகவரிச் சான்றாகவும், மற்றொன்று வயதுச் சான்றாகவும் இருக்க வேண்டும். சில ஆவணங்கள் மூன்று தேவைக்கும் பொருந்தும். உதாரணமாக பாஸ்போர்ட், குடும்ப அட்டை போன்றவை.  

வாக்காளர் அடையாள அட்டை அடையாளம் மற்றும் முகவரி சான்று ஆவணமாக பயன்படும். இவை தவிர அடையாள சான்று ஆவணமாக, வருமானவரி நிரந்தர கணக்கு அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, வங்கி கணக்குப்புத்தகம், புகைப்படத்துடன் கூடிய வங்கி கடன் அல்லது கையிருப்பு அட்டை, அஞ்சலக அடையாள அட்டை, சான்றளிக்கும் தகுதி உடைய முதல் அல்லது இரண்டாம் நிலை அரசு அதிகாரி வழங்கும் அடையாள அட்டை விவசாய அடையாள அட்டை, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்ட அடையாள அட்டை, 

அரசு நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, தொலைபேசி மாதாந்திர கட்டண ரசீது, அஞ்சலக கணக்குப்புத்தகம், ஓய்வூதிய அடையாள அட்டை, துப்பாக்கி உரிமம், சுதந்திர போராட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை, மொழிப்போர் தியாகிகளுக்கான அடையாள அட்டை, மின்வாரிய ரசீது,  கடன் அட்டையின் 3 மாத விவர அறிக்கை, சாதி , இருப்பிடச் சான்றிதழ். சொத்து விற்பனை பத்திரம், வருமான வரிமதிப்பீடு என அடையாள சான்றுக்கு 17 ஆவணங்களில் ஒன்றும், முகவரி சான்றுக்கு 28 ஆவணங்களில் ஒன்றும் தரலாம்.

இப்படி குடும்பத்தலைவர், அல்லது பெரியவர் தவிர குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இவற்றில் ஏதாவது ஒரு சான்றை ஆவணமாக பயன்படுத்தாலம். அப்படி இல்லை என்றால் குடும்பத்தலைவர் உட்பட யாராவது ஒருவர் தேசிய அடையாள அட்டையை பெற்றிருந்தால் அதனை ஆவணமாக பயன்படுத்தலாம்.http://tamilnadupost.nic.in/


http://uidai.gov.in/
+++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த தவகல் அனைவருக்கு செல்ல இந்த பதிவை அனைவருக்கு ஷேர் செய்யவும் , ஒட்டு போடவும் 
++++++++++++++++++++++++++++++++++++

The 25 worst passwords of 2011


1. password
2. 123456
3. 12345678
4. qwerty
5. abc123
6. monkey
7. 1234567
8. letmein
9. trustno1
10. dragon
11. baseball
12. 111111
13. iloveyou
14. master
15. sunshine
16. ashley
17. bailey
18. passwOrd
19. shadow
20. 123123
21. 654321
22. superman
23. qazwsx
24. michael
25. football

பள்ளிக் கல்வித் துறையில் 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

பள்ளிக் கல்வித் துறை யில், ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், நூலகர்கள், ஆசிரி யரல்லா பணியாளர்கள், தலைமை ஆசிரியர்கள் என, மொத்தம் 56 ஆயிரத்து 853 பேரை நியமிக்க, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அவர்களை நியமிக்க, கல்வித் துறை முனைந்துள்ளது.

வழக்கு: மாநில அளவிலான பதவி மூப்பு மூலம், ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கடந்த ஆட்சியில் இவ்வழக்கில், அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்யாமல் இருந்தது. தற்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம் மூலம், பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை, ஜனவரி மாதம் வரும் எனத் தெரிகிறது.

இவ்வழக்கின் தீர்ப்பை பொறுத்து தான், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதா அல்லது போட்டித் தேர்வு மூலம் நியமிப்பதா என்பது தெரியவரும். எனினும், தற்போது கட்டாய கல்விச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன்படி, போட்டித் தேர்வு மூலம் தான், ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் முடிவு வரும் வரை, பள்ளிகளில் வழக்கமான சம்பள விகிதத்தில் நியமிக்கப்படும் ஆசிரியர்களை, பதிவு மூப்பு அடிப்படையிலேயே, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்களை பொறுத்தவரை, அந்தந்த துறைத் தலைவர் மூலம், அரசு வெளியிடும் வழிகாட்டுதலின் அடிப்படையில், நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர்.

பணியிட அறிவிப்பு விவரம்

♦  சிறப்பாசிரியராக நியமிக்கப்பட உள்ளவர்களில், தமிழாசிரியர்கள் 1,000 பேர் உட்பட, உடற்கல்வி ஆசிரியர்களும் அடங்குவர்.

♦  பகுதி நேர ஆசிரியர்களில் பெரும்பாலானோர், ஓவியம், தையல், கைவினை, உடற்கல்வி போன்ற பயிற்றுனர்களாக நியமிக்கப்படுகின்றனர். பள்ளியில் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமெனில், இதற்காக மாதம், 5,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். இரண்டு பள்ளிகளுக்கும் சேர்த்து ஒருவரே நியமிக்கப்பட்டால், அவருக்கு, ஆறு மணி நேர வேலைக்கு, 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். கிரேடு-3 தகுதிக்கு, நூலகர்கள் பணியிடங்கள் உயர்த்தப்பட உள் ளன. மேலும், புதிதாக 1,093 நூலகர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை நிரப்ப, வேலைவாய்ப்புத் துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
♦  ஆசிரியரல்லா பணியிடங்களான துப்புரவு பணியாளர்கள், 5,000 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும். இதில், 3,000 பணியிடங்கள் தான் ஒப்புதல் பெற்றவை. தற்போது,2,000 பணியிடங்கள் கூடுதலாக ஒப்பளிக்கப்பட்டுள் ளது.

♦  உதவி தொடக்க கல்வி அதிகாரி பணியில், 34 பேரை நியமிக்க, தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப் பதவிக்கு இதுவரை, 70 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 

♦  இட ஒதுக்கீடு முறையில் நிரப்பப்படாமல் உள்ள பின்னடைவு ஆசிரியர் பணியிடங்கள், 1,800 நிரப்பவும், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
பணியிடம்எண்ணிக்கை
இடைநிலை கல்வி ஆசிரியர்கள்7,907
பட்டதாரி ஆசிரியர்கள்15,525
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்5,869
சிறப்பாசிரியர்கள்1,538
வேளாண் பயிற்றுனர்கள்25
பகுதி நேர ஆசிரியர்கள்16,549
மேம்படுத்தப்படும் நூலகர் பணியிடம்260
புதிய நூலகர் பணியிடங்கள்1,093
ஆசிரியரல்லா ஊழியர்கள்5,000
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்831
உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்34
ஆசிரியர் பயிற்றுனர் சீனியர் விரிவுரையாளர்கள்34
இளநிலை உதவியாளர்கள் மற்றும் லேப் உதவியாளர்கள்388
பின்னடைவு பணியிடங்கள்1,800