விஜய் அசத்தல் பேட்டி


பாலிவுட் ஸ்டார்கள்கூட ஃபேஸ்புக், டிவிட்டர் என்று தங்களோட ஒவ்வொரு மூவையும் பதிவு செய்றாங்க, நீங்கள் எப்படி?
நான் டிவிட்டர், ஃபேஸ்புக் இரண்டிலும் இருக்கேன். ஆனா என்னோட ஒவ்வொரு நடவடிக்கையையும் பதிவு செய்யமாட்டேன். ஒரு பார்வையாளனா  பார்க்குறதோட சரி. அப்புறம் ஃப்ரெண்ட்ஸ் என்ன எழுதியிருக்காங்க. எந்தப் படங்கள் நல்லாப் போகுதுனு பார்ப்பேன். டைரக்டர் ராஜா சொல்லித்தான் ஃபேஸ்புக்கே ஆரம்பிச்சேன்.
'வேலாயுத'த்தில் 'சொன்னால் புரியாது', 'ரத்தத்தின் ரத்தமே' என்று பாடல்கள் பரபரப்பு கிளப்புதே. கம்போஸிங்ல இசையமைப்பாளர்கள்கூட உட்காருவீங்களா?
என் படத்தில் வேலை பார்க்குற எல்லா டெக்னீஷியன்கள் மேலயும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. அதேபோலதான் இசையமைப்பாளர்கள் மேலயும் நம்பிக்கை வெச்சிருப்பேன். ஒரு தடவை ட்யூன் எப்படியிருக்குன்னு மட்டும் கேட்பேன். அப்புறம் பாடல் முழுசா தயாரான பிறகுதான் கேட்பேன். மற்றபடி கம்போஸிங்ல உட்கார மாட்டேன்.
சினிமா அல்லாத நண்பர்களைச் சந்திக்கும் பழக்கம் உண்டா?
காலேஜ் படிக்கும்போதே எனக்கு ஃப்ரெண்ட்ஸ் கூட்டம் அதிகம். சினிமாவுக்கு வந்த பிறகும் வாரம் ஒருமுறை எல்லாரும் மீட் பண்ணி அரட்டை அடிப்போம். அன்னிக்கு முழுக்க ஜாலியா இருக்கும். இப்ப கொஞ்ச நாளா சந்திக்கிற டைம் குறைஞ்சு போச்சு. சீக்கிரம் மீட் பண்ணணும்.
நிறைய வெளிநாடுகளுக்குப் போறீங்க. அதுல எந்த நாடு உங்களுக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது?


க்ளைமேட், மனுசங்க, சுறுசுறுப்பு இப்படி எல்லா விஷயத்திலும் என்னை ரொம்ப கவர்ந்தது அமெரிக்காதான். வெளிநாடுனு கேட்டதாலே சொன்னேன். மற்றபடி அங்க போயிட்டா எப்படா இந்தியா திரும்புவோம்னு இருக்கும். அதனாலதான் தாய்நாடுன்னு சொல்றோம்.
கால்ஷீட், லொகேஷன், டேக், ஆக்ஷன் இந்த விஷயங்களுக்கு இடையில் உங்களின் பொழுதுபோக்கு என்ன?
ட்ராவல் பண்றதுதான். இப்ப என்னோட நீலாங்கரை வீட்டிலிருந்து ஷூட்டிங் ஸ்பாட் போறதுக்குள்ள வெளியில நடக்குற விஷயங்களை ரொம்பவும் கவனிப்பேன். என்னை பாதிக்கிற விஷயங்களும் நடந்திருக்கு. காமெடியான விஷயங்களும் நடந்திருக்கு. பரபரப்பான ட்ராபிக் நெரிசலுக்கு நடுவிலும் சிக்னலைக்கூட பார்க்காமல் செல்போன்ல பேசிக்கிட்டே சிலர் நடந்து போவாங்க. ஹார்ன் அடிச்சா போதும், ஜெர்க் ஆகி பயந்துக்கிட்டே நடப்பாங்க. ஆனா பயத்தைக் காட்ட மாட்டாங்க. (அப்படியே எழுந்து நடித்துக் காண்பிக்கிறார்.)
'வேலாயுத'த்தில் நீங்களே ரசித்த பஞ்ச் டயலாக் எது?
டைரக்டர் ராஜா எழுதின பஞ்ச்ல ரொம்பவும் பிடிச்சது 'சும்மாவே நான் காட்டு காட்டுனு காட்டுவேன். இதுல நீ வேற காட்டு... காட்டுனு சொல்ற... காட்டாட்டி நல்லாவா இருக்கும்?' இந்த பஞ்ச்தான் நான் ரொம்ப ரசிச்சு பேசின பஞ்ச். காரணம், என்னோட இயல்பான குணத்துக்குப் பொருத்தமா இருந்தது.
உங்க குழந்தைகளுக்கு எப்படி நேரம் ஒதுக்குறீங்க...?
எல்லாம் அவங்க அம்மா சங்கீதாவின் பொறுப்பு. அவங்கள படிக்கச் சொல்றது, கவனிக்கிறது எல்லாம் அவங்கதான். எனக்கு அவங்ககூட விளையாட மட்டும்தான் ஆசை. கிடைக்குற கொஞ்ச நேரத்திலும் பசங்களை படிங்க... படிங்கனு சொன்னால் அப்புறம் என்கிட்டவே வர மாட்டாங்க. 
சஞ்சய், திவ்யா இவங்க ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்கனா வீடே ரகளையாகிடும். சமீபத்துல வந்த 'காஞ்சனா' படத்தைப் பார்த்துட்டு பையன் சஞ்சய், லாரன்ஸ் மாதிரியே முகத்துல மஞ்சள் பூசுன மாதிரி நடித்துக் காட்டினான் பாருங்க. நானே அசந்துட்டேன்! என் பொண்ணு திவ்யாதான் அவனோட ஒரே ஒரு ஆடியன்ஸ் (மனம் விட்டுச் சிரிக்கிறார்). "சரி, என்கிட்ட நீங்க கேள்வி கேட்டீங்க. இப்ப நான் இங்க என்னைப் பார்க்க வந்த டைரக்டர் ராஜாகிட்ட சில கேள்வி கேட்குறேன்" என்றபடி நம் மொபைலைப் பிடுங்கி, சும்மா விளையாட்டாக அதை மைக்காக மாற்றிக் கொண்டு கலாட்டாவை ஆரம்பித்தார் விஜய்.
விஜய் : நீங்களே ஹீரோ மாதிரிதான் இருக்கீங்க. எப்ப நடிக்கப் போறீங்க?
ராஜா : (முகத்தில் வெட்கச் சிரிப்பு)
எங்க வீட்டுக்கு ஒரு ஹீரோவே போதும் சார். நடிக்கிறது உங்க தொழில், படமெடுக்கிறது என் வேலை. இது போதும். (மீண்டும் சிரிப்பு)
விஜய் : 'வேலாயுதம்' படத்துல நான் சில இடத்துல நடிச்சது பத்தாதுன்னு உங்களுக்குத் தோணிச்சா?
நான் வேணா உள்ள போயிடுறேன், இவங்ககிட்ட உண்மையைச் சொல்லுங்க, என்று உள்ளே போக முயற்சித்தார். (ஒரே சிரிப்பு)
ராஜா : நீங்க இந்தப் படத்துக்காக எவ்வளவு முயற்சி செய்திருக்கீங்கன்னு பார்க்க, ஒரிஸாவில் எடுத்த ட்ரெயின் ஃபைட் ஒண்ணே போதும். அப்படி ஒரு உழைப்பு! ராஜா மேலும் புகழ ஆரம்பிக்க, 'போதும்ண்ணா' என்று புன்னகையுடன் கையெடுத்துக் கும்பிட்டபடி மீண்டும் நம்மிடம் வந்தார் விஜய்.
அஜித்தும், நீங்களும் ரொம்பவே நெருக்கமாக இருக்கீங்க. ஆனால் உங்க ரசிகர்களிடம் ஒரு பனிப்போர் இருந்துகிட்டே இருக்கே....
இப்போதாவது பரவாயில்லை. முன்னைவிட தேவலாம். எங்க ரெண்டு ரசிகர்களும் ரொம்ப மாறியிருக்காங்க. பட ரிலீஸ் நேரத்தில் அங்கங்க சின்னச்சின்ன பிரச்சினை வருது. கொஞ்ச நாள்ல அதுவும் மாறிடும். ஆனால் என்னைக் கேட்டால் ரசிகர்கள்கிட்ட அந்த த்ரில் இருக்கணும்னு சொல்வேன். சுமூகமான இந்த ரசிப்புத்தன்மை எங்களை இன்னும் உழைக்க வைக்கும்.

புதிய என்ஜீனியரிங் கல்லூரிகள் வேண்டாம்- மாநில அரசுகள் கோரிக்கை

20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பொறியியல் கல்வியில் படிப்பது என்பது பெரும் கனவாகவே இருந்து வந்தது. நிறைய மார்க் எடுக்க வேண்டும், நுழைவுத் தேர்வு எழுத வேண்டும், மிகக் குறைந்த அளவிலான கல்லூரிகளே, அதிலும் பெரும்பாலும் அரசுக் கல்லூரிகளே இருந்த நிலையில் அப்போது தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் உள்ளன. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது.விட்டால் தெருவுக்குத் தெரு பொறியியல் கல்லூரிகளைத் திறந்து விடுவார்கள் போல. அந்த அளவுக்கு புற்றீசல் போல தனியார் சுய நிதிக் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் வியாபித்து விட்டது. இதனால் பொறியியல் படிப்பு என்பது சாதாரண பி.காம், பி.ஏ. படிப்பு போல மாறி விட்டது. யாரைப் பார்த்தாலும் பிஇ படிப்பவராக இன்று காணப்படுகிறார். 

தேவைக்கும் அதிகமாகவே தற்போது கல்லூரிகள் இருப்பதாலும், கல்லூரிகள் அதிகரித்து, மாணவர்கள் குறைந்து விட்டதால், நிரம்பாமல் போகும் சீட்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது.

இந்த நிலையில் புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி தர வேண்டாம் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலுக்கு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பொறியியல் கல்லூரிகளில் இன்று லட்சக்கணக்கான மாணவர்கள் இடங்கள் உள்ளன. ஆனால் அதற்கேற்ற அளவில் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான கல்லூரிகளில் சீட்கள் முழுமையாக நிரம்புவதில்லை. 

இதையடுத்தே புதிய கல்லூரிகள் வேண்டாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து கவுன்சிலின் தலைவர் மந்தா கூறுகையில், தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, ஹரியானா, சட்டிஸ்கர் மாநில அரசுகள் இதுதொடர்பாக எங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளன. அதில், இனிமேல் தங்களது மாநிலங்களில் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி தர வேண்டாம் என்று அவர்கள் கோரியுள்ளனர் என்றார் அவர்.அதேபோல மகாராஷ்டிரா மாநிலமும் கூட கோரிக்கை வைத்துள்ளதாம். 2003-04ல் இந்தியாவில் 4.01 லட்சம் பொறியியல் மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறினர். இவர்களில் 35 சதவீதம் பேர் கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் ஆவர். 2004-05ல் 1,355 பொறியியல் கல்லூரிகளில் 4.6 லட்சம் பேர் சேர்ந்தனர். இவர்களில் 31 சதவீதம் பேர் கம்ப்யூட்டர் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள்.

2005-06ல் இது 5.2 லட்சமாக உயர்ந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழில்நுட்பக் கல்லூரிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.இந்தியாவில் தற்போது 3,393 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 14.85 லட்சம் மாணவர் இடங்கள் உள்ளன. இதில் மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடக, உ.பி.யில் மட்டும் 70 சதவீத கல்லூரிகள் உள்ளன. இந்த மாநிலங்களில் இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர் இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்தன.

பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில்தான் அதிக அளவிலான காலி சீட்கள் இருக்கின்றனவாம். பெருநகரங்களையொட்டியுள்ள கல்லூரிகளில் நிலைமை பரவாயில்லை. மேலும், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் ஆகிய பிரிவுகளுக்கு மாணவர்களிடையே இன்னும் நல்ல கிராக்கி உள்ளதாக மந்தா கூறுகிறார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உலகின் 700வது கோடி குழந்தை பிறந்தது

 உலகின் 700வது கோடி குழந்தை இன்று உ.பி. தலைநகர் லக்னோ அருகே பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் அது பிறந்துள்ளது.
முன்னதாக உலகின் 700வது கோடி குழந்தை லக்னோ அருகே மால் என்ற கிராமத்தில் பிறக்கும், அது பெண் குழந்தை என்று பிளான் இன்டர்நேஷனல் என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தப் பெண் குழந்தை, பெண் சிசுக் கொலைக்கு எதிரான அடையாளமாக விளங்கும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. இருப்பினும் தற்போது 700வது கோடி குழந்தை பிலிப்பைன்ஸில் பிறந்துள்ளது.

மணிலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த பெண் குழந்தை இன்று பிறந்தது. இக்குழந்தைக்கு டேனிகா மே கமாச்சோ என்று பெயரிட்டுள்ளனர் அவரது பெற்றோர். இக்குழந்தைப் பிறப்பையடுத்து மருத்துவமனையில் பெருமளவில் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் திரண்டிருந்தனர். நள்ளிரவைத் தாண்டிய நிலையில் குழந்தை டேனிகா பிறந்தாள்.

குழந்தையின் தாயாரான கேமிலி டலுரா, டேனிகாவை அணைத்தபடி கூறுகையில், இக்குழந்தை மிகவும் அழகாக உள்ளது. எனது மகள்தான் உலகின் 700வது கோடி குழந்தை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என்றார் பூரிப்புடன்.
2.5 கிலோ எடையுடன் உள்ள டேனிகா, டலுரா மற்றும் அவரது கணவர் பிளாரன்ட் கமாச்சோவுக்கு பிறந்த 2வது குழந்தையாகும்.

குழந்தை பிறந்ததும் ஐ.நா. அதிகாரிகள் குழு ஒன்று டேனிகாவின் பெற்றோரை சந்தித்து முறைப்படி இது 700வது கோடி குழந்தை என்று கூறி பரிசாக ஒரு சின்ன கேக்கையும் வழங்கி வாழ்த்தினராம்.

மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பலரும் கூட குழந்தைக்கு ஏராளமான பரிசுகளை அறிவித்துள்ளனர். குழந்தையின் எதிர்கால கல்விச் செலவு உள்ளிட்டவற்றை ஏற்பதாக ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு நிறுவனம் டேனிகாவின் பெற்றோருக்காக கடை ஒன்றை வைத்துத் தருவதாகவும் அறிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது இன்னொரு விசேஷமும் நடந்தது. உலகின் 600வது கோடி குழந்தையான போஸ்னியாவைச் சேர்ந்த லோரிஸ் மா குவரா என்ற 12 வயது சிறுவன் டேனிகா பிறப்பின்போது அந்த மருத்துவமனையில் இருந்தான். இவன் 1999ம் ஆண்டு போஸ்னியாவைச் சேர்ந்த அகதித் தம்பதியருக்குப் பிறந்தவன் ஆவான்.

இதுகுறித்து குவரா கூறுகையில், இந்த அழகான குழந்தையைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப் போலவே ஆரோக்கியமாகவும், தெம்பாகவும் இவளும் வளர்வாள், எல்லோராலும் நேசிக்கப்படுவாள் என்று நம்புகிறேன் என்றான் சிரித்தபடி.

உ.பியிலும் 700வது கோடி குழந்தை பிறந்தது!

இதற்கிடையே, உ.பி. மாநிலம் பக்பத் மாவட்டத்திலும் இதே சமயத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.
பக்பத் மாவட்டத்தில் உள்ள சுன்ஹேதா என்ற கிராமத்தைச் சேர்ந்த சச்சின், பிங்கி சர்கார் தம்பதிக்கு இன்று இக்குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையும், பிலிப்பைன்ஸில் பிறந்த குழந்தையும் உலகின் 700வது கோடி குழந்தைகள் என்ற பெருமையைப் பெறுகின்றன.

ரஜினிகாந்த் வேகம் - கமல் தொப்பை

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் சங்கர ரத்னா விருது பெற்றுள்ளார். இதற்கான விழா சென்னை ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென வருகை தந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். படு டிரி்ம்மாக, ஆரோக்கியமாக, உற்சாகமாக காணப்பட்டார். அவரைப் பார்த்து அனைவரும் உற்சாகமடைந்தனர்.ரஜினிகாந்த் நிகழ்ச்சியில் பேசும்போது எனது உடலில் வேகம் இருக்கும் வரை நான் ஓய்வ பெற மாட்டேன் என்று கூறி அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

ரஜினியின் பேச்சு:


சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். எனக்கு சங்கர ரத்னா விருது வழங்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் நீ கலந்து கொள்ளாவிட்டாலும், உன் வாழ்த்து மடலையாவது அனுப்ப வேண்டும் என்றும், அதை மேடையில் மகிழ்ச்சியுடன் படிப்பேன் என்றும் கூறினார். அதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன்.

பின்புதான் யோசித்தேன், உடல் நிலை சரியான பிறகு, ஏதாவது ஒரு நல்ல நிகழ்ச்சியில்தான் கலந்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன். அப்படி பார்த்தால், என்னை சினிமாவில் வளர்த்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியை விட வேறு நல்ல நிகழ்ச்சி எதுவும் கிடையாது.

நான் முழுமையாக குணம் அடைய மக்களின் அன்பும், ரசிகர்களின் வேண்டுதலும்தான் காரணம். நான் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது வீட்டோடு இருந்து ரெஸ்ட் எடுக்கத்தான் விரும்பினேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. என்னை உருவாக்கிய ஜாம்பவான்கள் இருக்கிற இந்த மேடையில், நான் அதிகம் பேசினால், அது அதிக பிரசங்கித்தனம் ஆகிவிடும்.

எனக்கு வெற்றிப் படங்களை கொடுத்தார் என்பதால் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 25 படங்களில் நடிக்கவில்லை. அவர் மீது கொண்ட அன்பினால் தான் 25 படங்களில் நடித்தேன்.

என்னை உருவாக்கியவர்கள் என்னிடம் பேசும்போது, நீ தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்க வேண்டும், தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நான் சிவாஜியோ, கமல்ஹாசனோ கிடையாது. அவர்களை போல் நடிப்பாற்றல் எனக்கு கிடையாது. அவர்களைப் போல என்னால் நடிக்கவும் முடியாது. நான் ஒரு ஹீரோவாக மட்டுமே இருக்க முடியும். சினிமா துறையில் என் மூலதனம் என் உடலின் வேகம்தான். எனவே, என் உடலில் வேகம் இருக்கும் வரை நடிப்பேன் என்றார் ரஜினி.

நிகழ்ச்சியில் பேசிய எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பேசுகையில், எஸ்.பி.முத்துராமனின் தந்தை ராமசுப்பையா எனக்கு அரசியல் தந்தை. ஆகவே அவரை எனக்கு 70 ஆண்டுகளாக தெரியும். ஒரே நேரத்தில் ரஜினியையும், கமல்ஹாசனையும் இயக்கியவர். எஸ்.பி.முத்துராமனை பார்த்து உழைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


உலக நாயகன் கமல் தன் தொப்பையைக் குறைக்க ஒரு 'டெக்னிக்' வைத்துள்ளார்.உலக நாயகன் கமல் ஹாசனுக்கு 56 வயதாகிறது. ஆனால் இந்த வயதிலும் தொப்பையும், தொந்தியுமாக இல்லாமல் உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அவர் மட்டும் எப்படி தொப்பை இல்லாமல் இருக்கிறார் ஒரு வேளை கடுமையான உடற்பயிற்சி செய்கிறாரோ என்று நினைக்கலாம்.

அதெல்லாம் இல்லை. தனக்கு தொப்பை வைத்துவிட்டதா இல்லையா என்பதை அறிய ஒரு படு சூப்பரான டெக்னிக் வைத்துள்ளாராம். இத்தனை வயதானாலும் ஷூ லேசை முட்டியை மடக்காமல் குனிந்து தான் கட்டுவாராம். அப்படி குனிந்து ஷூ லேசை மாட்ட சிரமமாக இருந்தாலோ அல்லது மூச்சு வாங்கினாலோ உடனே அடுத்த 2 நாட்களுக்கு பட்டினிதானாம்.

டயட்டில் இருந்து வயிற்றில் தேங்கிய தேவையில்லாத கொழுப்பைக் குறைத்து மறுபடியும் டிரிம்மாகி விடுவாராம். தொப்பையைக் குறைக்க ஒவ்வொருத்தரும் குண்டக்க மண்டக்க பாடுபாடுகின்றனர். உலக நாயகன் இப்படி ஒரு சூப்பரான டெக்னிக்கை கையாளுகிறார். 


திண்டுக்கல் நகராட்சி கவுன்சிலர்களின் போன் நம்பர்கள்1. முத்துலட்சுமி (அ.தி.மு.க.,) 96294 71147


2. திருமாறன் (அ.தி.மு.க.,) 89036 12340

3. சாந்தா (அ.தி.மு.க.,) 98428 09298

4. சுருளிவேல் (அ.தி.மு.க.,) 98657 58492

5. சுப்பிரமணி (அ.தி.மு.க.,) 98428 43452

6. நாகலட்சுமி (தி.மு.க.,) 98421 21218

7. சக்திவேல் (அ.தி.மு.க.,) 98428 09281

8. ராமலிங்கம் (அ.தி.மு.க.,) 93450 70338

9. ராஜூ (காங்.,) 98425 61996

10. மாரியம்மாள் (மார்க்சிஸ்ட்) 98402 76744

11. குருநாதன் (தி.மு.க.,) 98428 32325

12. ஆனந்த் (தி.மு.க.,) 95009 09019

13. சரோஜா (அ.தி.மு.க.,) 99944 47975

14. தனபாலன் (பா.ஜ.,) 98942 70676

15. நாகராஜன் (அ.தி.மு.க.,) 98421 23148

16. முகமது சித்திக் (தி.மு.க.,) 94430 42787

17. ராஜப்பா (தி.மு.க.,) 98421 42478

18. ஜெயந்தி (தி.மு.க.,) 98429 79982

19. சந்திரமோகன் (அ.தி.மு.க.,) 94434 47201

20. தண்டபாணி (அ.தி.மு.க.,) 93454 78066

21. வசந்தா (அ.தி.மு.க.,) 97919 91639

22. செல்வமணி (அ.தி.மு.க.,) 98424 77977

23. ஜான்பீட்டர் (அ.தி.மு.க.,) 94420 59985

24. வகிதா பானு (அ.தி.மு.க.,) 91506 81253

25. சியாமளா தேவி (அ.தி.மு.க.,) 99425 36000

26. ரமேஷ் குமார் (அ.தி.மு.க.,) 98421 88444

27. இளையகுமார் (அ.தி.மு.க.,) 93679 23349

28. ராமமூர்த்தி (தி.மு.க.,) 97902 93951

29. சாவித்திரி (அ.தி.மு.க.,) 99659 49648

30. விஜயகுமார் (தி.மு.க.,) 98946 70530

31. ராஜன் (அ.தி.மு.க.,) 98421 81051

32. ஜான்பீட்டர் (தி.மு.க.,) 99948 94354

33. அழகர்சாமி (தி.மு.க.,) 94420 30722

34. தனலட்சுமி (அ.தி.மு.க.,) 87600 56060

35. முகமது ரபீக் (தி.மு.க.,) 99658 12535

36. துளசிராம் (அ.தி.மு.க.,) 94430 70371

37. வசந்தி (சுயே.,) 97865 58999

38. முகமது இஸ்மாயில்

(அ.தி.மு.க.,) 98944 13667

39. முகமது இப்ராஹிம் (தி.மு.க.,) 94430 64754

40. ராஜேந்திரன் (அ.தி.மு.க.,) 98654 95965

41. அப்துல் ரஹிம் (அ.தி.மு.க.,) 98943 17772

42. பாத்திமா (அ.தி.மு.க.,) 97506 76292

43. ரோணிக்கம் (அ.தி.மு.க.,) 98947 31165

44. விஜயா (தி.மு.க.,) 99651 11603

45. மார்த்தாண்டம் (தி.மு.க.,) 97881 64223

46. சேவியர் (அ.தி.மு.க.,) 96290 86516

47. குலோத்துங்கன் (சுயே) 86750 52435

48. சேகர் (அ.தி.மு.க.,) 96003 27355

ஒட்டன்சத்திரம் நகராட்சி கவுன்சிலர்கள்

1. கணேஷ் (சுயே) 93454 13480

2. ஆனந்தன் (தி.மு.க.,) 94436 79192

3. பாண்டியராஜன் (தி.மு.க.,) 98423 32299

4. ஜமால்தீன் (அ.தி.மு.க.,) 98421 40317

5. கிருஷ்ணமூர்த்தி (சுயே) 94439 29229

6. தங்கம்மாள் (சுயே) 94439 29229

7. முருகன் (அ.தி.மு.க.,) 98430 88510

8. ரவிச்சந்திரன் (தி.மு.க.,) 94438 29917

9. வனிதா (தி.மு.க.,) 98425 86621

10. மனோகரன் (அ.தி.மு.க.,) 94424 49227

11. உமாமகேஸ்வரி (தி.மு.க.,) 98421 52777

12. முத்துராமகிருஷ்ணன் (சுயே) 98423 19002

13. கணேசன் (சுயே) 93445 12184

14. சரஸ்வதி(அ.தி.மு.க.,) 96550 66774

15. திருமூர்த்தி(அ.தி.மு.க.,) 97151 34757

16. முருகம்மாள் (அ.தி.மு.க.,) 98655 43060

17. கமலம் (அ.தி.மு.க.,) 99658 47888

18. கருப்பாத்தாள் (தி.மு.க.,) 97510 95335

source.dinamalar