பெண் ஆசன வாயில் தங்கக் கட்டி # திருட்டுக்களை தடுக்க நவீன யுக்தி

ரயில்களில் செயின் பறிப்பு மற்றும் திருட்டுக்களை தடுக்கும் வகையில், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில் பயணிகளை போன்று பயணித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பர் என, மண்டல ரயில்வே ஐ.ஜி.வினோத்குமார் டாக்கா தெரிவித்துள்ளார்.
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தென் மண்டல ஐ.ஜி. வினோத்குமார் டாக்கா ஆய்வு செய்த பின் அவர் கூறியதாவது, ரயில்களில் செயின் பறிப்பு மற்றும் திருட்டுக்களை தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில் பயணிகளை போன்று பயணித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ரயில்களில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அது குறித்து தகவல்களை கட்டுப்பாட்டு அறைகளுக்கும் போன் மூலம் தெரிவிக்காலம். இதில் வரும் புகார்களை கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள், அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு தெரிவித்து, நடவடிக்கை எடுப்பர்.ரயில்வே பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் உட்பட பல பிரிவுகளில் 600 காலியிடங்கள் உள்ளன. விரைவில் அந்த காலியிடங்கள் நிரப்பப்படும். மதுரை ரயில்வே நிலையத்தில் 68 கண்காணிப்பு கேமிராக்கள், ஒரு பார்சல் ஸ்கேனர், 2 லக்கேஜ் ஸ்கேனர், 2 அன்டர்வெகிள் ஸ்கேனர் மூன்று மாதங்களுக்குள் நிறுவப்படும். பின்பு மற்ற நிலையங்களில் உள்ளது செயல்படும்,
என்றார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

இலங்கையிலிருந்து ஒரு பெண் தங்க கட்டிகளை தூத்துக்குடிக்கு கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை கொழும்பில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வந்த பயணிகள் கப்பலில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். சந்தேகத்தின் பேரில் இரு பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஒருவர் திருச்சி ஐயப்பன் நகரை சேர்ந்த சந்திரலிங்கம் மனைவி கோடீஸ்வரி என்பதும் அவருடன் வந்தவர் கொழும்புவை சேர்ந்த செல்வநாயகம் மனைவி பார்வதம் என்பதும் தெரிய வந்தது. இருவரின் உடமைகளையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். ஆனால் ஓன்றும் சிக்கவில்லை. இதையடுத்து கோடீஸ்வரியை பெண் அதிகாரிகள் மூலம் சோதனையிட்டனர். அப்போது ஆசன வாயில் அவர் 7 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

பின்னர் அவரை தூத்துக்குடி அழைத்து வந்து ஒரு தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே மூலம் சோதனை செய்தபோது அவரது உடலில் மேலும் 4 தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்து அகற்றினர்.தலா 116 கிராம் வீதம் மொத்தம் ஒரு கிலோ எடையுள்ள 276 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கோடீஸ்வரியை அதிகாரிகள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.பர்வதத்தை சோதனையிட்டதில் ஓன்றும் சிக்காததால் அவரை விடுவித்தனர். தங்க கட்டிகள் கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்கள்
அழகிய இயற்கை காட்சிகள் HD வால் பேப்பர்கள்


மக்களுக்கு 90 சேனல்கள் ரூ 70-க்கே கிடைக்கும்

சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த ஆட்சியில் துவக்கப்பட்ட அரசு "கேபிள் டிவி' நிறுவனம், 50 ஆயிரத்திற்கும் அதிகமான இணைப்புகளை வழங்கியது. முந்தைய ஆட்சியாளர்களின் சுயநலம் காரணமாக, அரசு "கேபிள் டிவி' நிறுவன இணைப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, 432 இணைப்புகளாக சுருங்கிவிட்டது.தி.மு.க., அரசால் துவக்கப்பட்ட அரசு "கேபிள் டிவி' நிறுவனம், அந்த அரசாலேயே முடக்கப்பட்டு விட்டது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தின் நடவடிக்கைகளை புனரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், என் அரசு தீவிரமாக மேற்கொண்டது. இந்நிறுவனத்திற்கு ஒரு முழுநேர தலைவர் மற்றும் ஒரு நிர்வாக இயக்குனர் நியமிக்கப்பட்டனர்.

தஞ்சாவூர், திருநெல்வேலி, கோவை மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் தலைமுனைகள், பராமரிப்பு செய்யப்பட்டன. மீதமுள்ள 27 மாவட்டங்களில், தனியார் வசம் உள்ள தலைமுனைகள் வாடகைக்கு பெறப்பட்டும், புதிதாக அனலாக் தொழில்நுட்ப "கேபிள் டிவி' கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டும், அரசு "கேபிள் டிவி' புனரமைக்கப்பட்டது. மேலும், இந்த நிறுவனம், "தமிழ்நாடு அரசு "கேபிள் டிவி' நிறுவனம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை நீங்கலாக, அனைத்து மாவட்டங்களிலும்,"கேபிள் டிவி' சேவையைத் தொடங்கும் வகையில், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.,க்களை, அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள, 34 ஆயிரத்து 344 கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.,க்கள், மிகுந்த ஆர்வத்துடன், அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இவர்களிடம், ஒரு கோடியே 45 லட்சம் இணைப்புகள் உள்ளன. 31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஒளிபரப்பு மையங்களை, 24 மணி நேரமும் பராமரிக்கவும், ஒளிபரப்பு சேவையை தங்குதடையின்றி மக்களுக்கு வழங்கவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அரசு "கேபிள் டிவி' ஒளிபரப்பின் மூலம், கட்டணச் சேனல்கள் உட்பட 90 சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படும். கட்டணச் சேனல்களை பெற, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விரைவில், கட்டணச் சேனல்களும், அரசு "கேபிள் டிவி' மூலம் வழங்கப்படும்.
செப்டம்பர் 2ம் தேதி முதல் ஒளிபரப்புச் சேவைகள் துவங்கப்பட்டு, குறைந்த செலவில் நிறைவான சேவையை, அரசு "கேபிள் டிவி' நிறுவனம், தமிழக மக்களுக்கு வழங்கும். அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தில் சேர்ந்துள்ள கேபிள் ஆபரேட்டர்கள் மூலம், "டிவி' சேவையை பெறும் சந்தாதாரர்களிடமிருந்து மாதச் சந்தாவாக 70 ரூபாய் மட்டுமே "கேபிள் டிவி' ஆபரேட்டர்களால் வசூலிக்கப்படும்.

இந்த ஒளிபரப்பை வழங்கும், "கேபிள் டிவி' ஆபரேட்டர்களிடமிருந்து கட்டணமாக, ஒரு இணைப்பிற்கு 20 ரூபாய், அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தால் வசூலிக்கப்படும். மிகக் குறைந்த கட்டணத்தில், "கேபிள் டிவி' இணைப்பை, தமிழக மக்கள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கேபிள் இணைப்பு பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சேமிப்பு ஏற்படும்
.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

என்ன செய்ய வேண்டும்!""அரசு, "கேபிள் டிவி' ஒளிபரப்பைப் பெற, பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்ற கேள்விக்கு, அரசு "கேபிள் டிவி' நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:"கேபிள்' ஆபரேட்டர்கள் அரசுடன் இணைந்துள்ளதால், தற்போது, "கேபிள்' இணைப்பு பெற்றுள்ள பொதுமக்கள், அந்த இணைப்பிலேயே, அரசு "கேபிள் டிவி' இணைப்பை பெற முடியும். அரசு, "கேபிள் டிவி'யைப் பெற, அவர்கள் தனியாக யாரையும் அணுக தேவையில்லை.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னைக்கு?கடந்த 2002ம் ஆண்டு, "கண்டிஷனல் அக்சஸ் சிஸ்டம்' என்ற சட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு, சென்னை, டில்லி, மும்பை, கோல்கட்டா ஆகிய நான்கு நகரங்களில் இந்த சட்டம் முன் மாதிரியாக அமல்படுத்தப்பட்டது. இதன்படி, இந்த நகரங்களில் உள்ளவர்கள், கட்டண சேனல்களை பெறுவது என்றால், "செட் - டாப் பாக்ஸ்' உதவியுடன் மட்டுமே பெற முடியும். இதற்கு எதிராக பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டதால், கடந்த 2006ம் ஆண்டு முதல், சென்னை தவிர மற்ற மூன்று பெருநகரங்களிலும், இந்த நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டது. "சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு, இன்னும் மூன்று மாதங்களுக்குள் சென்னையிலும் அரசு, "கேபிள் டிவி' கால் பதிக்கும்' என, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3 பேரை தூக்கில் போட 8 வாரம் தடை; ஐகோர்ட்டு உத்தரவு


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு வரும் 9-ந் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் அவர்களைத் தூக்கில் போட தமிழக சிறைத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

மத்திய அரசின் உத்தரவின் பேரில் அவர்கள் மூவரும் 10க்கு 10 பரப்பளவுள்ள தனித் தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வருக்கும் தலா 20 பேர் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த நிலையில் தூக்கு கயிற்றில் இருந்து அவர்களை மீட்க பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் இன உணர்வாளர்களும் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் 3 பேரின்தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுக்கள், சென்னை ஐகோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை நீதிபதி என்.பால் வசந்தகுமார் ஏற்றுக் கொண்டார். அவசர சூழல் கருதி மனுக்கள் மீது உடனடியாக விசாரணை தொடங்கவும், அவர் ஒத்துக்கொண்டார்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் தங்கள் மனுவில், தங்களுக்கான தண்டனையை ஏன் ரத்து செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களை தொகுத்து கூறி உள்ளனர். 11 ஆண்டுகள் கழித்து கருணை மனு மீது முடிவு எடுத்ததும், 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் தண்டனை கொடுப்பதும் சட்ட விரோதமானது. எனவே தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மற்றும் தமிழ் இன ஆதரவாளர்கள் ஏராளமானவர்கள் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முருகன், சாந்தன், பேரறிவாளன் சார்பில் மூத்த வக்கீல்கள் ராம்ஜெத்மலானி மோகித் சவுத்திரி, காலின் கான்சாலிஸ் ஆஜரானார்கள். தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி அவர்கள் வாதாடினார்கள். இடைக்கால தடை விதிக்க வேண்டியதற்கான காரணத்தையும், அதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள உட்பிரிவுகளையும் வக்கீல்கள் வாதத்தின் போது எடுத்து வைத்தனர்.

மூத்த வக்கீல்களின் கோரிக்கையை நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணன் இருவரும் ஏற்றுக் கொண்டனர். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை 8 வாரத்துக்கு நிறுத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கு விசாரணை தமிழ் உணர்வாளர்களுக்கு நிம்மதி பெருமூச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மூவரின் தூக்கை குறைக்க சட்டசபையில் தீர்மானம்-முதல்வர் ஜெயலலிதா


ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது என்றார்.
இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர்.இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்றால் 3 பேரின் தூக்குத் தண்டனையும் ரத்தாகும் வாய்ப்புள்ளது.முன்னதாக நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறியிருந்தார். மேலும் குடியரசுத் தலைவர்தான் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது அதிரடியாக அவர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவரின் விடுதலைக்காக கடுமையாக போராடி வருவோருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.


***************

நேற்று தான் ஸ்டாலின் கூட ராஜபக்ஷவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்கள் , இதற்கும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியது தானே என்று கூறியிருந்தார் ,

இன்று தீர்மானம் நிறைவேற்றியிருகிரார்கள் , அரசியல் காழ்புணர்ச்சி பார்க்காமல் , அகந்தை கொள்ளாமல் உடனே தீர்மானம் நிறைவேற்றிய முதல்வரின் செயல் பாராட்டுக்குரியது .

அனைவர்க்கும் நம்பிக்கை பிறந்துள்ளது மூவரும் காப்பாற்ற படுவார்கள் என்று .

**********************
karurkirukkan.blogspot.com

மனிதன் இன்டர்நெட்டுக்கு அடிமை

சிகரெட், மது போல இன்டர்நெட்டும் ஒரு போதை என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், அதனைப் பார்க்க முடியவில்லை என்றால், என்ன பதை பதைப்பு ஏற்படுகிறது. மெயில் பார்க்க முடியவில்லை, என் பேஸ்புக் நண்பர் களுடன் செய்தி பரிமாற முடியவில்லை என்று அத்தனை பேரும் பதற்றம் அடைகின்றனர். பித்துப் பிடித்தவர் போல மாறுகின்றனர். இங்கிலாந்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள ஆயிரம் பேரை இது குறித்து கருத்து கேட்ட போது, சிகரெட்டுக்கு எப்படி, அதனைப் பயன்படுத்துபவர்கள் அடிமையாகி றார்களோ, அதே போலத்தான் இன்டர் நெட்டுக்கும் என கருத்து தெரிவித்துள் ளனர். இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், ஒருவர், அது என் ஒரு கையை வெட்டியது போல இருக்கும் என்றார்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் பேஸ்புக், ட்விட்டர், மெயில் -- ஆகியன வற்றின் தொடர்பு கிடைக்காமல் போவதே இந்த மனநிலைக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர். இரவு படுக்கப் போகும்போது பேஸ்புக், ட்விட்டர் அப்டேட் செய்து படுக்கைக்குச் செல்வதைப் பழக்கமாகப் பலர் கொண்டு ள்ளனர். எனவே இது தடை படுகையில், தூக்கம் வராமல் தவிக்கின்றனர்.

ஆனால், இந்த கணக்கெடுப்பில் 21% பேர், இன்டர்நெட் இல்லை என்றால், ஆஹா! இன்று விடுதலை; சுதந்திரமாக இருப்பேன் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.


!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பதிவர்கள் ஜாக்கிரதை
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ரஜினி நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்கிறார்கள்பெங்களூர் கவிபுரத்தில் கங்காதீஸ்வரா சுவாமி கோயிலுக்கு அருகில் உள்ளது அந்த அரசு உதவி பெறும் மாதிரி தொடக்கப் பள்ளி. இங்குதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்து படித்தார். அவரோடு இந்தப் பள்ளியில் படித்த பல நண்பர்கள் இன்று வெவ்வேறு துறைகளில் உள்ளனர். சிலர் ரஜினியை நீண்ட வருடங்களாக பார்க்கக் கூட இல்லை. சிலர் வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிட்டனர். ஆனால் ரஜினியுடன் படித்த அந்த நாட்களின் நினைவுகளை பொக்கிஷமாய் சுமந்து வருபவர்கள்.

ரஜினியுடன் பணியாற்றி, அவரது சினிமா வாழ்க்கைக்கே முதல் சுழி போட்ட அவரது உயிர் நண்பர் ராஜ் பகதூர் தலைமையில் ரஜினியின் நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு நல்ல விஷயத்தை ஆரம்பித்துள்ளனர். ரஜினி படித்த இந்த கவிபுரம் அரசு உதவிபெறும் மாதிரி தொடக்கப் பள்ளியை அனைத்துவிதங்களிலும் முன் மாதிரிப் பள்ளியாக உயர்த்த இந்த நண்பர்களும் சில ரஜினி ரசிகர்களும் கரம் கோர்த்துள்ளனர்.பள்ளிக் கட்டடங்களை சீரமைத்தல், கம்ப்யூட்டர் பற்றி பெரிதாக தெரியாத அந்தப் பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் உபகரணங்கள் வாங்கித் தருதல் என பெரிய அளவில் இப்பள்ளியைப் புணரமைக்கிறார்கள்.

பள்ளி சீரமைப்பு பணிகளை நேற்று கவிபுரம் மாதிரிப் பள்ளியில் நடந்த ஒரு விழாவில் ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் முறைப்படி தொடங்கி வைத்தார்."வெவ்வேறு இடங்கள், துறைகளில் உள்ள ரஜினியின் நண்பர்களும் அவரது ரசிகர்களும் மேற்கொண்டுள்ள ஒரு அரிய முயற்சி இது. கண்ணுக்கு தெரியாமல், விளம்பரமில்லாமல் ரஜினி செய்யும் பல்வேறு நற்பணிகளை, உதவிகளைச் சிறப்பிக்கும் பொருட்டு, அவரது நண்பர்கள் இந்த முயற்சியை தொடங்கியுள்ளனர். இந்தப் பள்ளி பெங்களூரின் முதன்மைப் பள்ளியாகத் திகழும்," என்றார் ராஜ்பகதூர். இதில் ரஜினியின் பங்களிப்பு என்ன என்பது குறித்து ராஜ் பகதூரிடம் கேட்டபோது, அதுகுறித்து எதுவும் இப்போது சொல்வதற்கில்லை என்றார் அவர்.

யூடியுப் மூலம் ஊழலை ஒழிக்க பிஹார் அரசு முடிவு


இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றான பிஹாரில் ஊழலைக் களைய தொழில்நுட்பத்தின் உதவியை நாடும் புதிய திட்டம் வகுக்கப்பட்டுவருகிறது.
லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு எதிரான மக்களின் புகார்களை வீடியோ பதிவுசெய்து யூடியூப் இணையதளத்தில்போடப்போவதாக அம்மாநிலத்தின் கிராம அபிவிருத்தி அமைச்சர் நிதிஷ் மிஷ்ரா கூறுகிறார்.

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அன்னா ஹஸாரே நடத்திவருகின்ற பட்டினிப் போராட்டம், ஊழலைக் களைவதற்கான வழிவகைகள் பற்றிய ஒரு பெரும் விவாதத்தை இந்தியாவெங்கும் தோற்றுவித்துள்ளது.
சட்டம் கொண்டுவருவதன் மூலம் ஊழலைக் களைய முடியுமா என்பது பற்றி நாட்டின் நாடாளுமன்றம் விவாதித்துக்கொண்டிருக்க, ஒரு காலத்தில் ஊழலுக்குப் பேர்போன பீஹார் மாநிலத்தின் அரசாங்கமோ, இந்த வித்தியாசமான திட்டத்தைக் கொண்டுவர இருக்கிறது.

ஏழை மக்கள் சுமார் பத்து லட்சம் பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான அபிவிருத்தித் திட்டத்தில் தமது இந்த புதிய ஊழல் ஒழிப்பு வழிமுறையை அரசாங்கம் கையாளவிருக்கிறது.
இந்த வீட்டுத் திட்டத்தை நிறைவேற்றும் அதிகாரிகள் எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கிறார்கள் என்று புகார்கள் வந்ததை அடுத்து இந்த புதிய வழிமுறையை கொண்டுவர முதல்வர் நிதிஷ் குமார் அரசாங்கம் நினைக்கிறது.இந்த புதிய வழிமுறையின் கீழ் அரசாங்கம் மாநிலமெங்கும் பல மையங்களில் வீடியோ கெமராக்களை நிறுவும். மக்கள் அங்கு வந்து லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் பற்றி புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு பதிவுசெய்யப்படும் புகார் வீடியோக்கள் யூடியூப் வீடியோ இணையதளத்தில் பிரசுரிக்கப்படும்.இந்த வீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறக்கூடிய ஏழை மக்கள் யூடியூப் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்ககூட மாட்டார்கள். அதனை அவர்கள் பார்ப்பார்கள் என்பதற்கும் வாய்ப்பு மிகக் குறைவே.ஆனால் லஞ்சம் வாங்குகின்ற அதிகாரிகளை இவ்வகையாக வெளிச்சம் போட்டுக் காட்டி அவமானப்படுத்தினால், லஞ்சம் ஒழியும் என்று மாநில நிர்வாகம் கருதுகிறது.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
நாட்ல நல்லது நடந்த சரி !

நாம் யார் யாருக்கு என்ன செய்தோம்-ரஜினி


மருத்துவமனையில் பணம் நினைவுக்கு வரவில்லை; உடலும் உயிரும் மட்டுமே நினைவுக்கு வந்தது - ரஜினி சொன்னதாக வைரமுத்து தகவல்

மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சைப் பெற்று வந்தபோது எனக்கு பணமோ புகழோ நினைவுக்கு வரவில்லை. உயிரும் உடலும்தான் நினைவுக்கு வந்தது என சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். கோவையில், நேற்று நடந்த 'ஓர் அன்னையின் கனவு' என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வைரமுத்து, தனது சிறப்புரையில், "வெளிநாட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ரஜினிகந்த் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன், "உண்மையை சொல்லுங்கள், நீங்கள் மருத்துவமனையில் இருந்த 'அந்த நிமிடத்தில்' என்ன நினைத்தீர்கள்" என்று கேட்டேன்.அதற்க்கு ரஜினி அவர்கள், "நான் ரஜினிகாந்த் என்பதையே மறந்துவிட்டேன். பணம், புகழ், உற்றார், உறவினர்கள் யாரும் நினைவுக்கு வரவில்லை. என் உடல், உயிர் என இரண்டு மட்டுமே நினைவுக்கு வந்தது.

பிறகுதான், நாம் யார் யாருக்கு என்ன செய்தோம், யார் யாருக்கு உதவி செய்யாமல் மறந்து விட்டோம் என்று எண்ணத்தோன்றியது," என்று கூறினார்.அவர் யார் யாருக்கு என்று குறிப்பிட்டு கூறியது, நம்மை சுற்றியிருக்கும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களைத்தான். நம் உடம்பில் தெம்பிருக்கும் போதே நம்மால் முடிந்த உதவிகளையும், நன்மைகளையும் அவர்களுக்கு செய்து விடவேண்டும். ஒழுக்கம், நேர்மை, உழைப்பு மூன்று மட்டுமே மனித குல மேம்பாட்டுக்கு ஏற்ற மிகமுக்கியமான பண்புகள் ஆகும் என்பது ரஜினி அவர்கள் கூறிய உண்மை," என்றார் வைரமுத்து.

மரணத்திலிருந்து காப்பாற்ற மரணத்தை விலையாக கொடுத்த செங்கொடிராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடக் கூடாது என்று கோரி காஞ்சிபுரம் தாலூகா அலுவலகம் எதிரே செங்கொடி (21) என்ற பெண் ஞாயிற்றுக்கிழமை தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரிக்கையை சேர்ந்தவர் பரசுராமன். இவரது மகள் செங்கொடி (21). இவர் அப்பகுதியில் உள்ள மக்கள் மன்றம் என்ற அமைப்பில் பணியாற்றி வருகிறார்.பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் தமிழகம் எங்கும் பல்வேறு பேராட்டங்கள் நடத்து வருகின்றன.

இதே போன்று காஞ்சிபுரத்தில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் மக்கள் மன்றம் அமைப்பின் சார்பில் செங்கொடி பங்கேற்றார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் வந்தார். கைப்பையுடன் வந்த செங்கொடி, பையில் வைத்திருந்த பெட்ரோல் கேன்களை வெளியே எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

உடல் முழுவதும் தீ பரவி அதே இடத்தில் கருகி உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. மனோகரன் சடலத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். காஞ்சிபுரம் சிவகாஞ்சி போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

********************************************************************************

குற்றவாளிக்கு மனிதாபிமான அடிப்படையில் தூக்கு தண்டணையில் இருந்து விடுதலை வாங்கி தருவதற்கு தமிழ்நாடே முயற்சி செய்து கொண்டிருகிறது , இளம் பெண் தீக்குளித்து தனது உயிரை விட்டு இருக்கிறார் , இதனை படிக்கும்போது ஒரு பக்கம் பயங்கர கோபமும் , அழுகையும் ,தாங்கமுடியா சோகமும் வருகிறது , இன்னொரு பக்கம் யாரோ ஒருவர்க்காக அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவது இன்னும் நம் மக்களிடையே,மனிதம் செத்து விடவில்லை என்று திரும்பவும் ஒரு முறை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள் நம் மக்கள் , நம் யாரும் வேறு வேறு அல்ல , நம் எல்லோரும் ஒரே குடும்பம் என்ற நிம்மதியும் ,செங்கொடியின் மரணமும் மனதை அறுக்கிறது .

**********************************************************************************


தோழி செங்கோடியே நீ உனது உயிரை
கொடுத்துள்ளாய் , நீ கொடுத்த உயிரை
காப்பாற்ற தானே அனைவரின் போராட்டமும் ,
மனிதனின் உயிரை எடுக்கும் பொறுப்பு
மனிதனுக்கு கிடையாது என்றுதானே நம்
போராட்டம் ,பிறகு நீ
எப்படி உன் உயிரை கொடுத்தாய் போரட்டத்தின்
தீவிரத்தை அதிகப் படுத்த காந்தி தனது
உயிரை கொடுத்து இருந்தால் என்ன
ஆயிருக்கும் யோசித்து பார்த்தாயா !?
இனி யோசித்து என்ன செய்வது சகோதரியே !

தயவு செய்து யாரும் தனது உயிரை விலையாக வைத்து போராட வேண்டாம் !.........

கண்ணீருடன்
karurkirukkan.blogspot.com
????????????????????????

குழந்தைகள்
கரூரில் மீண்டும் மணல் கொள்ளை & பள்ளி மாணவி சாதனை

கரூரில் மீண்டும் மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் மணல் லாரி மோதி ஒரு கல்லூரி மாணவி இறந்ததைத் தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் பொது மக்களால் சேதப்படுத்தப்பட்டன. அப்போது தேர்தல் பிரசாரத்திற்கு வந்த ஜெயலலிதா, அ.தி.முக., ஆட்சிக்கு வந்தால் மணல் கொள்ளை முற்றிலும் தடுக்கப்படும் என்று கூறினார். அதேபோல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் ஒரு மாத காலம் நின்றிருந்த மணல் கொள்ளை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. அரசு உ‌டனே நடவடிக்கை எடுத்து இதைத் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மணல் கொள்ளை தடுத்து கரூர் மக்களின் உயிரை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கரூரை சேர்ந்த நான்கு வயது பள்ளி மாணவி தொட ர்ந்து நான்கு மணி நேரம் நேற்று சிலம்பாட்டம் ஆடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெ ற்று சாதனை படைத்துள்ளார். கரூரை அடுத்த ராமேஸ்வரப்பட்டி பகுதியை சேர்ந்த ரவீந்திரன்- சங்கீதா தம்பதியினரின் மகள் ரக்ஷனா (4) இவர் பரணி பார்க் மெட்ரிக் பள்ளியில் யு.கே.ஜி., படிக்கிறார். இரண்டு வயது முதல் சிலம்பம் கற்று கொண்ட ரக்ஷனா, நேற்று காலை 6.30 மணியில் இருந்து தொடர்ந்து நான்கு மணி நேரம் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி பரணி பார்க் பள்ளி வளாகத்தில் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 10.30 மணி வரை இடைவிடாமல் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் முன்னிலையில் சிலம்பம் சுற்றி இந்திய சாதனை புத்தகத்தில் மாணவி ரக்ஷனா இடம் பெற்றார். அப்போது இந்திய சாதனை புத்தக நடுவர் டிராகன் ஜெட்லீ உடனிருந்தார். மாணவி ரக்ஷனாவுக்கு நட ந்த பாராட்டு விழாவில் மா வட்ட விளையாட்டு அலுவலர் புண்ணிய மூர்த்தி பேசியதாவது: கடந்த காலங்களில் உலக சாத னை செய்தவர்கள் பட்டியலில் பள்ளி மற்றும் கல்லூரி மாண வ, மாணவியர்கள் தான் இடம் பெற்றுள்ளனர். முதன் முதலாக நான்கு வயது சிறுமி ரக்ஷனா, நடுவர் கொடுத்த 10 நிமிட ஓ ய்வை கூட எடுக்காமல் நான்கு மணி நேரம் தொடர்ந்து சிலம்ப ம் சுற்றியது வியப்பாக உள்ளது. சிறுமி ரக்ஷனாவின் சாதனை எதிர்காலத்தில் உலக சாதனை பட்டியலில் இடம் பெற நாம் வாழ்த்த வேண்டும். இங்குள்ள மாணவ, மாணவியர் ஏதோ நிகழ்ச்சிக்கு வந்தோம், சென்றோம் என இருக்க கூடாது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பிரிவில் சாதனை படைக்க பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

பெற்றோர் அவர்களது விருப்பங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளதை தெரிந்து கொண்டு, அதற்கேற்ற பயிற்சியை முறையாக கற்றுகொடுக்க வேண்டும். மாணவி ரக்ஷனாவுக்கு இரண்டு வயது முதல் சிலம்பம் கற்று கொடுத்து, சாதனை படைக்க காரணமாக இருந்த பெற்றோரை நாம் கைதட்டி உற்சாக படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கரூர் பரணிபார்க் கல்வி நிறுவன தாளாளர் மோகனரங்கன், செயலாளர் பத்மாவதி, முதன்மை முதல்வர் ராம சுப்ரமணியன், கரூர் அரசு மருத்துவமனை டாக்டர் செல்வம், நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வாழ்த்துக்கள் ரக்ஷனா ,
சிறிய வயதில் நல்ல முயற்சி , இந்த சாதனைக்கு உதவிய அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஞானத்தை அடைய விரும்புபவனுக்கு


ஞானத்தை அடைய விரும்புபவனுக்கு உள்ள ஒரே எதிரி அவனுடைய சொந்த மனமே. தன்னையே வென்றவன் தனக்குத் தானே நண்பனாகிறான். உன்னைக் காட்டிலும் உனக்கு சிறந்த நட்பு ஒருவனும் கிடையாது. உனக்கு கொடிய பகைவனும் நீயே. இந்த இரு தன்மைகளும் நம் மனத்திடையே உள்ளன. மனம் நமக்கு நட்பாகும் போது.
உலகமே நட்பாகத் தோன்றும். நம்மை நாமே வெறுக்கும் போது அது பகையாக தெரியும். கற்புடைய மனைவியைக் காதலித்து அறவழியில் நடந்தால் இப்பூமியிலேயே சுவர்க்கத்தைக் காணலாம். ஒருவனுக்கு தன் வீடே சிறந்த வாசஸ்தலம். மலை, காடு என்று சுற்றித் திரியத் தேவையில்லை. வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைச்சிகரத்திற்குச் சென்றாலும் கடவுளைக் காணமுடியாது.உயிர்களுக்கு தீங்கிழைப்போர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த உயிரையும் வெறுப்போரும் கடவுளின் தொண்டர் அல்ல. மாமிசம் புசிப்போரும் கடவுளை நெருங்க முடியாது. ஜீவஹிம்சை செய்பவரை கடவுள் மன்னிக்க மாட்டார். உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையை கீதை ஆதாரமாகக் கொண்டது. தீமைகளை எதிர்த்து போராடி, நன்மையை நிலைநாட்ட வேண்டும். கடவுளிடம் சரணாகதி அடைதலே யோகம்.

தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள பேரறிவாளன் பேட்டிகேள்வி:- எந்த நேரத்திலும் தூக்கு அறிவிப்பு வரலாம் என்கிற நிலையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

பதில்:- முதலில் எங்களுக்காக போராடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மரணத்தின் நிழலில்தான் நிற்கிறோம். மக்களின் ஒருமித்த கை கோப்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது.

19 வயதில் உள்ளே வந்தவன். 21 வருடங்கள் இந்தச் சிறையிலேயே பெருவலியோடு கழிகிறது. தூக்கு அறிவிப்பை இந்த வலியில் இருந்து விடுபடும் நாளாக எண்ணி என்னைத் தேற்றிக் கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்.

கேள்வி:- தமிழக மக்களிடம் நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்து:-

பதில்:- அரசியல் பாகுபாடு பார்க்காமல் அனைவரும் எங்களுக்காக போராடுவது எங்களின் கண்ணீரைத் துடைத்து இருக்கிறது. இன உணர்வு மட்டும் அல்லாது, மனித நேயமும் ஒன்று சேர்ந்த போராட்டம் எங்களை சிலிர்க்க வைத்திருக்கிறது. அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த உணர்வோடு திரண்டு தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தால், நிச்சயம் அவர் எங்களின் விடிவுக்கு வழி செய்வார். அவருடைய குரல் எங்களுக்காக காத்திருக்கும் கயிறை நிச்சயம் அறுத் தெரியும்.

கேள்வி:- தமிழக முதல்வரிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

பதில்:- மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அம்மா, மரணம் கோரப்பசியோடு துரத்தும் இந்த நேரத்தில் மட்டும் அல்ல 20.7.07 அன்றே உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் இத்தனை நாள் மரணத்தின் மடியில் படுத்துக் கிடப்பவனாகக் கேட்கிறேன்.

தயவு செய்து தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுங்கள் என அந்த கடிதத்தில் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன். பிறருக்கு முன்னுதாரணமான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருகிற சக்தி உங்களுக்கு மட்டுமே இருக்கிறது.

மனசாட்சியின் கண்ணீர் குரலாக சொல்கிறேன். எங்களுக்கு தெரிந்து எதுவும் நடக்கவில்லை. சித்திரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக இத்தனை வருடங்கள் வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும்.

கேள்வி:- கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் மரணம் நெருங்கி விட்டதாக நினைக்கிறீர்களா?

பதில்:- 99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன் என்னைப் பார்க்க வந்தார். வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்? எனக் கேட்டார். தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவேன் எனச் சொன்னேன். காரணம், தூக்கு அறிவிக்கப்பட்ட ஒருவனின் ஒவ்வொரு நிமிடமும் எத்தகைய கொடூரமானது என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான்.

வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க இப்போது ஆசையாக இருக்கிறது. சிறு குழந்தையின் தவிப்பாக மனது ஏங்குகிறது. எங்களுக்காக போராடும் மக்களை நேரில் பார்த்து கைகூப்ப தோன்றுகிறது. ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஒரு வேளை மரணம் எங்களை வென்று விட்டால், கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது தூக்குக்கு பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பூகம்பத்தை விட வேகமாக வரும் ட்விட்டர்இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல ?

அண்ணா ஹசாரே பற்றி எனக்கு வந்த ஈமெயில்


To show your support for Anna Hazare and Janlokpal Bill – employees of various organizations have decided to Wear Black Dress on 19th August at work. Please spread the message to your colleagues and wear black dress on 19th August when you come to work. You may also wear a black arm band if you wish. Show your support against Corruption.
This is the least you can do even if you can join the protest because of your office work. Let us make it successful.

The Government has put condition to get 25 crore people to support JanLokPal. To give your support call 02261550789 (as given by Kiran Bedi) from your mobile no. Your Call will disconnect after 1 ring and your no registered automatically. You will get an SMS confirming this. Do it along to all your friends. Forward to as many people as you know .. verbally, by mails, by messages. Support Anti-corruption campaign lead by Anna Hazare ...Jai Hind.

Please FORWARD to save ourselves

Anna Hazare says bring back the Black Money.

Do u know what will happen if 1,456 Lac Crores comes back.

1. India Financially No.1
2. Each district will get 60000 crores & each village will get 100 Crores
3. No need to pay taxes for next 20 yrs.
4. Petrol 25 Rs, Diesel 15 Rs, Milk 8 Rs.
5. No need to pay electricity bill.
6. Indian borders will become more stronger than the China Wall.
7. 1500 Oxford like Universities can be opened.
8. 28,000 kms Rubber road (like in Paris) can be made.
9. 2,000 hospitals (with all facilities) all medicine Free.
10. 95 crore people will have their own house.

Support Anna Hazare by forwarding this message to atleast 10 Indians.Please take time to read it, learn it and spread it.10 things to know about Anna Hazare 'n Jan Lok Pal Bill.. !

1. Who is Anna Hazare?

An ex-army man. Fought 1965 Indo-Pak War2. What's so special about him?

He built a village Ralegaon Siddhi in Ahamad Nagar district, Maharashtra3. So what?

This village is a self-sustained model village. Energy is produced in the village itself from solar power, biofuel and wind mills.

In 1975, it used to be a poverty clad village. Now it is one of the richest village in India. It has become a model for self-sustained, eco-friendly & harmonic village.4. Ok,...?

This guy, Anna Hazare was awarded Padma Bhushan and is a known figure for his social activities.5. Really, what is he fighting for?

He is supporting a cause, the amendment of a law to curb corruption in India.6. How that can be possible?

He is advocating for a Bil, The Jan Lokpal Bill (The Citizen Ombudsman Bill), that will form an autonomous authority who will make politicians (ministers), beurocrats (IAS/IPS) accountable for their deeds.8. It's an entirely new thing right..?

In 1972, the bill was proposed by then Law minister Mr. Shanti Bhushan. Since then it has been neglected by the politicians and some are trying to change the bill to suit thier theft (corruption).7. Oh.. He is going on a hunger strike for that whole thing of passing a Bill ! How can that be possible in such a short span of time?

The first thing he is asking for is: the government should come forward and announce that the bill is going to be passed.

Next, they make a joint committee to DRAFT the JAN LOKPAL BILL. 50% goverment participation and 50% public participation. Because you cant trust the government entirely for making such a bill which does not suit them.8. Fine, What will happen when this bill is passed?

A LokPal will be appointed at the centre. He will have an autonomous charge, say like the Election Commission of India. In each and every state, Lokayukta will be appointed. The job is to bring all alleged party to trial in case of corruptions within 1 year. Within 2 years, the guilty will be punished. Not like, Bofors scam or Bhopal Gas Tragedy case, that has been going for last 25 years without any result.9. Is he alone? Whoelse is there in the fight with Anna Hazare?

Baba Ramdev, Ex. IPS Kiran Bedi, Social Activist Swami Agnivesh, RTI activist Arvind Kejriwal and many more.

Prominent personalities like Aamir Khan is supporting his cause.10. Ok, got it. What can I do?
At least we can spread the message. How?
Putting status message, links, video, changing profile pics.


****************************************************************************
உங்களுக்கு வந்த ஈமெயில்களையும் இங்கே தெரிவிக்கவும் ,இதன் மூலம் பல நிறைய தவல்களை வாசகர்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்

தர்மபுரி மாவட்டத்தில் புகார் எண் 1077

"தர்மபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத சாயப்பட்டறைகள் நடப்பது குறித்து கட்டணமில்லாத டெலிஃபோன் எண் 1077ல் புகார் செய்யலாம்.கலெக்டர் லில்லி வெளியிட்ட அறிக்கை:

தர்மபுரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி சாயபட்டறைகள் இயக்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்ததை தெடார்ந்து ஜூலை மாதம் 19ம் தேதி அரூர் ஆர்.டி.ஓ., வேடகட்டமடுவு, தாம்பல் கிராமத்தில் தணிக்கை செய்து தென்பெண்ணையாற்றில் அனுமதியின்றி இருந்த இரு சாயப்பட்டறைகளை கண்டுபிடித்து அப்புறப்படுத்தினார்.

இதே போல் ஆகஸ்ட் 11ம் தேதி தர்மபுரி தாலுகா ஈசல்பட்டியில் 14ம், டொக்குபோதைனஅள்ளி கிராமத்தில் இரண்டு, பூவல்மடுவு கிராமத்தில் ஒரு குடோன் ஆகியவற்றை அனுமதியின்றி இயக்கப்பட்டது கண்டறியப்பட்டு, தாசில்தார் கமலநாதன் தலைமையில் ஆய்வு செய்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் மாசு கட்டுப்பாடு காரணமாக சாயப்பட்டறைகள் அரசு உரிமங்கள் ரத்து செய்துள்ளதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்கள் அனுமதியில்லாமல் தர்மபுரி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் ஆசை வார்த்தைகள் கூறி சாய பட்டறைகளை நிறுவி வருகின்றனர். இதனால், மாவட்டத்தில் தண்ணீர் மாசு அடைந்து விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரம் ஆகியவை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கும் நிலையுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் சாய பட்டறைகள் அமைக்க யாருக்கும் இது வரையில் உரிமம் வழங்கப்படவில்லை. எனவே இது போன்று அரசு அனுமதியில்லாமல், சட்டத்துக்கு புறம்பாக சாயப்பட்டறைகள் அமைத்து செயல்படுகிற இனங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிய வந்தால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டணம் இல்லாத டெலிஃபோன் எண் 1077ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

தமிழக பள்ளிகளில் 'Trimester' கல்வி முறை அறிமுகம்


பள்ளி்க் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை (Trimester pattern) அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக கல்வித் திட்டத்தில் சில மாற்றங்களை சட்டசபையில் ஜெயலலிதா இன்று அறிவித்தார். அதன் விவரம்:

அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவது என்ற இந்த அரசின் நோக்கத்தின் ஒரு அங்கமாக, மேலும் 65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும்; 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும்; ஆக மொத்தம் 775 பள்ளிகளை ரூ. 419.60 கோடி செலவில் நிலை உயர்த்த நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.பள்ளிகளைத் தரம் உயர்த்துவதினால் மட்டும் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியாது. தேவைக்கேற்ப ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என்பதை எனது அரசு உணர்ந்துள்ளது. எனவே, நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கும், ஆசிரியர்- மாணவர் விகிதத்தின் அடிப்படையில் கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவெடுத்து உள்ளது.அதன்படி, 9,735 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஆக மொத்தம் 13,300 ஆசிரியர் பணியிடங்களை, ரூ. 315.30 கோடி செலவில் இந்த ஆண்டிலேயே ஏற்படுத்த ஆணையிட்டுள்ளேன்.

உண்மையான சீரான கல்வி என்பது பாடப் புத்தகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல் கல்வி இணைச் செயல்பாடுகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதன் அடிப்படையில், உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆகியவற்றுக்காக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.
இதனால் இப்பள்ளிகளில் 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் பயன் அடைவர். இதற்கு, அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.99.29 கோடி செலவு ஏற்படும்.
முனைவர் முத்துக்குமரன் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, சமச்சீர் கல்விக்கு மிகவும் இன்றியமையாதது அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள். பொதுப் பாடத் திட்டம் மட்டும் சமச்சீர் கல்வி ஆகாது.

இதனை நன்கு உணர்ந்த எனது அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இந்தக் கல்வி ஆண்டில், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட உடனடி நடவடிக்கை எடுக்க உள்ளது என்பதை மிகவும் உவகையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கல்வி ஆண்டில் ரூ.1,082.71 கோடி மதிப்பீட்டில் இவை ஏற்படுத்தப்படும்.மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும்.

மேலும், நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 3,187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், முழுவதும் மாநில அரசின் நிதியில் இருந்து, ரூ. 90.70 கோடி செலவில், இந்தக் கல்வி ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.1985ம் ஆண்டிலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்களிடம் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் நல்லெண்ணத்துடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள்; கற்றலுக்குத் தேவையான ஜியோமென்ட்ரி பாக்ஸ், கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கு இதுவரை கிடைக்கப் பெறாத வண்ணப் பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் போன்றவை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக ரூ.119.48 கோடி செலவிடப்படும்.

சுத்தம் மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழல் பள்ளிக் கூடங்களில் அமையப் பெற வேண்டும் என்பது எனது திடமான எண்ணம் ஆகும். எனவே, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இதன் காரணமாக, அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 60 கோடி செலவு ஏற்படும்.அதிமுக தேர்தல் அறிக்கையில், குழந்தைகளின் புத்தகச் சுமை குறைக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைப் பருவத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் இப்புத்தகச் சுமையை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அதாவது, Trimester pattern அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும்.

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் தவறாகக் கையாளக் கூடிய வாய்ப்பு உள்ளதைத் தவிர்க்கும் பொருட்டு, அவர்களது புகைப்படம் மற்றும் ரகசிய குறியீட்டுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.எனவே, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மறைமுகக் குறியீட்டுடன் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கத்துடன், 7 முதல் 17 வயதுள்ள பள்ளி செல்லும் மாணவ, மாணவியருக்கு சதுரங்க விளையாட்டு வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.

கணினி மூலம் கற்பது பள்ளிகளில் தற்போது இன்றியமையாததாக உள்ளது. மாணவ, மாணவியர்கள் தமது பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, பற்பல குறிப்புகளையும் பாடத்திற்கு ஏற்ற மேற்கோள்களையும் மற்றும் தேவையான தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு கணினி முக்கியமான ஒன்று என்பதனை உணர்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் +1 மற்றும் +2 பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை அறிவித்துள்ளேன்.அதனைத் தொடர்ந்து, எல்லா வகுப்புகளிலும் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன் பெறும் விதத்திலும், தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்/ ஆசிரியைகளின் வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்தும் வகையிலும் ICT@Schools (Information and Communication Technology@Schools), Tamil Nadu என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்.

இத்திட்டத்தில் எல்லா வகுப்புகளுக்கும் ஆன பாடப் புத்தகங்களின் உட்பொருளை கணினிமயமாக மாற்றி மையக் கணினி மூலமாக வகுப்பறைகளில் வழங்க வழிவகை செய்யப்படும். எல்லா மாணவ, மாணவியர்களும் பயன் அடையும் பொருட்டு சிறந்த ஆசிரியர்களின் விரிவுரைகளின் தொகுப்புகள் கல்வி செயற்கைகோள் வாயிலாக வகுப்பறைகளுக்குச் சென்றடைய இத்திட்டத்தின் வாயிலாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை இந்த அவைக்கு பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக் கல்வித் துறை மூலம் எனது அரசு செயல்படுத்த இருக்கும் இந்தத் திட்டங்களால், மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள், உரிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பள்ளிகளில், மிகவும் உகந்த சூழலில், தரமான கல்வி கற்கும் நிலை உருவாகி, உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க வழி வகுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.


- அசத்தல் ஐடியா

இதுதான் இந்தியா

இமயமலை பயணத்தின்போது நம்ம ரஜினிகாந்த்