HAPPY NEW YEAR

சீனத் தயாரிப்புகள் என்றால் முன்பெல்லாம் மட்டமாகப் பார்ப்பார்கள். ஆனால் இன்று

மொபைல் போன்களில் சீனத் தயாரிப்புகள் என்றால் முன்பெல்லாம் மட்டமாகப் பார்ப்பார்கள். ஆனால் இன்று அந்த மனோபாவம் அடியோடு மாறியிருக்கிறது.அது மட்டுமல்ல, பெரிய பிராண்டட் மொபைல் நிறுவனங்களே சீனத் தயாரிப்புகளைப் பார்த்து தங்கள் மாடல்களை மறுவடிவம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.முதல் முதலாக இந்திய மொபைல் சந்தையில் இரட்டை சிம் கார்ட் வசதி கொண்ட போன்கள் வந்த சீனாவிலிருந்துதான். அதன் பிறகு சாம்சங்கும் நோக்கியாவும் போட்டிபோட்டுக் கொண்டு இரட்டை சிம் வசதி கொண்ட போன்களை அறிமுகப்படுத்த ஆரம்பித்தன.பொதுவாக பிராண்டட் மொபைல்களில் ஹை எண்ட் மாடல்கள் என்று போனால் குறைந்தபட்சம் ரூ 10000-க்கு மேல் செலவழிக்க வேண்டும். அப்போதுதான் ஜிபிஆர்எஸ், பிராட்பேண்ட், ஃபேஸ்புக் அக்ஸஸ் என பல பல வசதிகள் கிடைக்கும். ஆனால் இத்தனை வசதிகளையும் ரூ 2000 -லேயே பெற முடியும் ஜி பைவ் உள்ளிட்ட சீன மாடல்களில்.இதன் விளைவு, இந்திய மொபைல் மார்க்கெட்டில் அசைக்க முடியாத பிராண்டுகளாகத் திகழ்ந்த நோக்கியா, சாம்சங் இரண்டுமே ஆட்டங்கண்டு போயுள்ளன. சமீபத்திய சந்தை கணக்கெடுப்புகளின்படி இந்திய மொபைல் சந்தையில் இரண்டாம் இடம் வகிப்பது ஒரு சீனத் தயாரிப்பு மொபைல்தான். அது ஜி பைவ்.இந்த அந்தஸ்தில் இதுவரை கோலோச்சி வந்தது கொரிய நிறுவனமான சாம்சங். இப்போது சாம்சங்கை பின்னுக்குத் தள்ளிவிட்டது ஜி பைவ்.

2010- காலண்டர் ஆண்டில் மொபைல் போன் கருவிகள் விற்பனை விவரங்களின் அடிப்படையில், இந்திய சந்தையில் நோக்கியா முதலிடத்தில் உள்ளது. அதன் மார்க்கெட் அளவு 31.5 சதவீதம். ஆனால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 5 சதவீதம் குறைவாகும். இந்த 5 சதவீதத்தைக் கைப்பற்றி இருப்பது ஜிபைவ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இரண்டாம் இடத்திலிருந்த சாம்சங் 8 சதவீதத்துடன் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது. இப்போதைய நிலவரப்படி 10.6 சதவீத மார்க்கெட் ஷேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது ஜி பைவ்.

மிகக் குறைந்த விலையில் ப்ளாக்பெரி மாடலில் உள்ள அத்தனை வசதிகளோடும் ஜிபைவ் மொபைல்கள் கிடைப்பதால், மக்கள் நோக்கியா, சாம்சங் போன்ற மொபைல்களை விட்டு, ஜி பைவுக்குத் தாவி விடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜிபைவ் மாடலில், அனைத்து வசதிகளும் கொண்ட மொபைல் போனின் அதிகபட்ச விலையே ரூ 3000 தான் என்பது குறிப்பிடத்தக்கது

14 வயது முகமது சுகைல் எம்.சி.ஏ படிப்பிற்கு தேர்ச்சி பெற்று சாதனை


தகவல் தொழில்நுட்பம் மற்றும் சார்பு துறைகளில் மாணவர்களின் திறமை களையும் வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு பயிற்சிகளை சிறந்த முறையில் அளித்து வரும் மேஸ்நெட் பயிற்சி நிறுவனத்தின் எம்.சி.ஐ.டி.பி படிப்பில் பயிற்சி பெற்ற 9வது வகுப்பு படித்துள்ள 14வயது மாணவன் பாரதியார் பல்கலைக் கழகத்தில் எம்.சி.ஏ., படிப்பிற்கு தேர்வாகியுள்ளார். இது குறித்து மாணவர் முகமது சுகைல் கூறியதாவது :
எனக்கு சிறு வயதிலேயே கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். சிறிய சிறிய புரோக்ராம்களை செய்ய தொடங்கினேன். இராமநாதபுரத்தில் உள்ள கார்மல் கார்டன் பள்ளியில் சேர்ந்து படித்து கொண்டே மேஸ்நெட் நிறுவனத்தில் பகுதிநேரமாக டி.சி.ஏ.(டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேசன்) படித்தேன். தொடர்ந்து மைக்ரோசாப்டில் புரபஷனல், டெக்னாலஜி ஸ்பெஷலிஸ்ட், புரபஷனல் டெவலப்பர், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர், ஐ.டி. புரபஷனல் போன்ற சான்றிதழ் படிப்புகளும், சிஸ்கோவில் நெட்வொர்க் அசோசியேட், நெட்வொர்க் புரபஷனல், இண்டர்நெட்வொர்க் எக்ஸ்பெர்ட், டாட் நெட் என்பது உள்ளிட்ட 13 டிப்ளமோ படிப்புகள் படித்து முடித்தேன். எனக்கு மேஸ்நெட் நிறுவனத்தார் சிறப்பாக பயிற்சி அளித்தார்கள். தொடர்ந்து பாரதியார் பல்கலைக்கழக தொலைமுறை கல்விக்கூடத்தில் எம்.சி.ஏ.படிக்க விண்ணப்பித்தேன். என்னுடைய விண்ணப்பத்தை சரிபார்த்து நேர் காணலுக்கு அழைத்தார்கள். அங்கு ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் 20 பேர் என்னுடைய திறமையை பரிசோதனை செய்தனர். அவர்கள் அனைவரும் துறை சார்ந்த அனுபவம் மிக்கவர்கள். என்னுடைய பதில் அவர்களுக்கு திருப்தி அளித்ததால் நேர்காணலை தொடர்ந்து என்னுடைய திறமையின் அடிப்படையில் எம்.சி.ஏ. படிக்க அனுமதித்தார்கள். மேஸ்நெட் கல்வி நிறுவனம் அளித்த பயிற்சியும், எனது தாத்தா உள்ளிட்ட குடும்பத்தினர் அளித்த ஊக்கத்தின் விளைவாகத்தான் நான் குறைந்த வயதில் 13 சான்றிதழ்களை பெற்றேன். அதன் பயனாக தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ., பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளேன். எம்.சி.ஏ.,வுக்கு பிடிப்பிற்கு பிறகு அதில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்குவதை அடுத்த குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்


அதன் மூலம் தகவல் தொழில்நுட்ப துறையில் மிக இளவயதில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்ற பெறுமையை பெற விரும்புகிறேன் என்றார். இது குறுத்து மேஸ்நெட் நிறுவனத்தின் இயக்குனர் மணி கூறியதாவது : முகமத சுகையல் என்ற அந்த மாணவனுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை அவனது 12வது வயதிலேயே மேஸ்நெட் அடையாளம் கண்டு கொண்டது. கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் அவனுக்குள்ள அபார ஆர்வமும் பெற்றிருந்த அறிவும் வெளிப்பட்டது. குடும்பத்தினர் கொடுத்த ஊக்கத்தின் விளைவாக 12வயதிலேயே ஆன்லைன் குளோபல் சான்றிதழ் பெற்றான். மைக்ரோசாப்ட் அளிக்கும் சமீபத்திய பயிற்சியான எம்சிஐடிபி உட்பட மேஸ்நெட் அளிக்கும் பல்வேறு சான்றிதழ் படிப்புகளில் இதுவரை 13 சான்றிதழ்கள் பெற்றுள்ளான். முகமது சுகைல் பெற்றுள்ள இந்த அபார ஆற்றலின் பலனாக பாரதியார் பல்கலைக்கழகம் அவன் 9வது படித்து முடித்தவுடன் 14வயதில் எம்.சி.ஏ., படிப்பில் சேர்த்துக் கொண்டது. பாரதியார் பல்கலைகழகத்தில் எம்.சி.ஏ., மாணவர் களின் மிக இளவயதுக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மெஸ்நெட் கல்வி நிறுவனம் உலக அளவில் அங்கீகரிக்கப்படும் பலவித தகவல் தொழில்நுட்ப பயிற்சிகளை மாணவர்களுக்கு அளித்து வருகிறது. இதுவரை 10, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மேஸ்நெட்டில் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் 7 இடங்களில் கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மைக்ரோசாப்ட், சிஸ்கோ, ரெட் ஹேட், ஈசி கவுன்சில், புரோமெட்ரிக், பியர்சன் முதலான முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து தொழிற்துறையின் தேவை களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அதி நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய பயிற்சிகளை அளித்து வருகிறது என்றார். மாணவர் முகமது சுகைல் சத்தி ரோட்டில் உள்ள அலமு நகரை சேர்ந்தவர் பாதுஷா மொய்தீன்நிஷாத் ஆகியோர் மகனாவார். இவரது தாத்தா சலீமின் ஊக்கமும் மேஸ்நெட் நிறுவனத்தின் பயிற்சியும் முகமது சுகைலின் இந்த கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் காரணம் என்று மாணவனின் பெற்றறோர் தெரிவித்தனர்.

குடும்ப உறவுகள் சீரழியும் ஆபத்து-INTERNET-TV

"குழந்தைகளிடம் உள்ள நற்பண்புகளை சீரழிப்பதில் "டிவி' மற்றும் இன்டர்நெட் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள குறைவான நேரமே செலவிடுகின்றனர்' என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் உள்ள சவுத் கலிபோர்னியா பல்கலை சார்பில், "நவீன தொழில்நுட்ப காலத்தில் குடும்ப உறவுகளின் நிலை' குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 57 சதவீத வீடுகளில் இன்டர்நெட் பயன்படுத்தவும், 60 சதவீத வீடுகளில் "டிவி' பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிந்தது. ஆய்வுக்குழுத் தலைவர் மைக்கேல் கில்பர்ட் இதுகுறித்து கூறியதாவது: தொலைபேசி வழியாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள் என இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது, பெரும்பாலான பெற்றோர்கள் "டிவி' மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு தடைவிதிப்பதும், அமெரிக்க சிறுவர்கள் உண்மையான நண்பர்களை விட, ஆன்-லைன் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளவே ஆர்வம் காட்டுகின்றனர் என்பதும் தெரிந்தது.

"டிவி' மற்றும் இன்டர்நெட் காரணமாக, சிறுவர்கள் தங்கள் நண்பர்களுடன் போதிய நேரம் செலவிடுவதில்லை. அவர்களின் விளையாட்டு நேரமும் குறைகிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் நேரடியாக தங்களுக்குள் பேசிக்கொள்வதும் குறைந்து வருகிறது. கடந்த 2000ம் ஆண்டுகளில், சிறுவர் சிறுமியர் ஒரு நாளில் நான்கு மணிநேரம் தங்கள் பெற்றோருடன் செலவிட்டனர். இப்போது, இரண்டு மணிக்கும் குறைவான நேரமே ஒதுக்குகின்றனர். இதனால், குடும்ப உறவுகள் பலவீனமடைகின்றன; தேவையற்ற மன அழுத்தமும் ஏற்படுகிறது. ஆன்-லைன் வீடியோ கேம்ஸ் மற்றும் சமூக வலைதளங்கள் தான் இதற்கு முக்கிய காரணம். நவீன தொழில்நுட்பத்தால், குடும்ப உறவுகள் பலப்படுவதற்கு மாறாக, பலவீனமடைந்து வருகின்றன. அதேசமயம், செல்போன் போன்ற தொலைத்தொடர்பு வசதிகள் தங்களுக்கு பெரும் உதவிபுரிவதாகவும் ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறினர். இவ்வாறு மைக்கேல் கில்பர்ட் கூறினார்.

உலகின் மிகவும் இளம் வயது யோகா ஆசிரியை

உலகிலேயே மிகவும் இளம் வயது யோகா ஆசிரியை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் உ.பியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஸ்ருதி பாண்டே.உ.பி. மாநிலம் ஜன்சி நகரைச் சேர்ந்தவர் இந்த குட்டி யோகா ஆசிரியை. 6 வயதே ஆகும் ஸ்ருதி, உலகிலேயே மிகவும் இளம் வயது யோகா ஆசிரியை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு யோகா சொல்லிக் கொடுத்த மாஸ்டர் ஹரி சேத்தன். இவருக்கு வயது 67 என்பது குறிப்பிடத்தக்கது.ஜன்சி நகரில் உள்ள பிரமானந்த் சரஸ்தி தாம் என்ற ஆசிரமத்தில் தினசரி காலை 5.30 மணிக்கு தனது யோகா வகுப்பை தொடங்கி சொல்லிக் கொடுக்கிறார் இந்த குட்டி ஆசிரியை.


கடந்த 2 வருடங்களாக யோகா சொல்லிக் கொடுத்து வருகிறார் ஸ்ருதி. அதாவது தனது 4 வயது முதலே அவர் யோகா ஆசிரியையாக மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆசிரமத்தை ஹரி சேத்தன் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தார். அன்று முதல் இன்று வரை இவ்வளவு இளம் வயதில் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு யோகாவில் கரை கண்டது ஸ்ருதி மட்டும்தான் என்கிறார் ஹரி பெருமையுடன்.வர்த்தகப் பிரமுகர்கள், ஆசிரியர்கள், இல்லத்தரசிகள், பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் என கிட்டத்தட்ட 30 பேர் புடை சூழ வெள்ளை நிற கால்சட்டை, சிவப்பு நிற டி சர்ட் அணிந்து அழகாக யோகா சொல்லிக் கொடுக்கிறார் ஸ்ருதி.

இதுகுறித்து ஸ்ருதி கூறுகையில், நான் சொல்லித் தருவதை மற்றவர்கள் கேட்டு நடப்பது பெருமையாக இருக்கிறது. என்னை விட வயதில் பல மடங்குப் பெரியவர்கள் நான் சொல்வதை ஆர்வத்துடன் கேட்கும்போது உண்மையாகவே எனக்கு ஆசிரியை என்ற உணர்வு வருகிறது. எனது சகோதரர் யோகா செய்வார்.அதைப் பார்த்துதான் எனக்கும் ஆர்வம் வந்தது. பின்னர் நானாகவே செய்ய ஆரம்பித்தேன். ஆனால் அதில் சிரமம் இருந்தாதல் என்னை எனது பெற்றோர் யோகா வகுப்புக்கு அனுப்பி கற்கச் செய்தனர் என்கிறார் ஸ்ருதி.

ஸ்ருதியின் சகோதரர் ஹர்ஷ் குமாருக்கு இப்போது 11 வயதாகிறது. இவர் ஏற்கனவே 5 வயதில் யோகாவின் 84 நிலைகளையும் கற்று லிம்கா சாதனை படைத்தவர் ஆவார். இருப்பினும் யோகா ஆசிரியராக செயல்படும் எண்ணம் இவரிடம் இல்லை. ஆனால் தனது தங்கையின் திறமையை வெகுவாக பாராட்டுகிறார் ஹர்ஷ்.


கற்க வந்த 6 மாதத்திலேயே சிறப்பான பயிற்சி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் ஸ்ருதி என்று கூறும் ஹர்ஷ், ஸ்ருதிக்கு இயல்பிலேயே யோகா கை கூடி வந்தது என்றும் பாராட்டுகிறார்.
ஸ்ருதியின் ரசிகர்களில் ஒருவர் ஸ்வாமி பானு. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு வயது 90 என்பது குறிப்பிடத்தக்கது.


கரூர் மாவட்டம் காந்திகிராமத்தில் போக்குவரத்துபுறக்காவல் நிலையம் துவக்கம்

கரூர் அருகே போக்குவரத்து புறக்காவல் நிலையம் துவக்க விழா நடந்தது.கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை காந்திகிராமம் பகுதியில் கடந்தாண்டுகளில் சட்டம் ஒழு ங்கு புறக்காவல் நிலையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. காந்திகிராமம் பகுதியில் தொ டர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் விபத்துகள் நடப்பதால் அப்பகுதியில் புதிய போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.சட்டம் ஒழுங்கு புறக்காவல் நிலையத்தில் ஒரு பகுதியாக போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் துவங்கப்பட்டது. புறக்காவல் நிலையத்தை துவக்கி வைத்து கரூர் எஸ்.பி., மகேஸ்வரி கூறியதாவது:பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எ ல்லைக்கு உட்பட்ட காந்திகிராமம் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் இரவு நேரங்களில் வழிபறி, கொலை, கொள்ளை போ ன்ற குற்றசெயல் நடந்து வருவதால், அப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வை த்திருந்தனர். அதனடிப்படையில் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சா லை காந்திகிராமம் பகுதியில் புற க்காவல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.நாளுக்குநாள் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் மக்கள் கோரிக்கை வைத்தனர். சட்டம் ஒழுங்கு புறகாவல் நிலையத்தின் ஒருபகுதியில் போக்குவரத்து புறகாவல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.இந்த ஸ்டேஷனில் ஒரு இன் ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ., எட்டு போலீஸார் என மொத்தம் 10 பேர் சுழற்சி முறையில் பணிபுரிவர். வரும்காலங்களில் அரசின் அனுமதிபெற்று தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பாங்க் ஆஃப் அமெரிக்கா கலக்கம் (விக்கிலீக்ஸின் அடுத்த இலக்கு)விக்கிலீக்ஸின் அடுத்த இலக்கு, தனது கணக்குகளை முடக்கியதோடு, இதர நிதி ஆதாரங்களையும் தடுத்து வைத்துள்ள பாங்க் ஆஃப் அமெரிக்கா எனத் தெரிய வந்துள்ளது.
இந்த வங்கி குறித்து ஏற்கெனவே விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கூறுகையில், 'எங்களிடம் அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கியுடைய 5 ஜிபி ஆவணங்கள் உள்ளன', என்றார்.அமெரிக்காவின் இந்த வங்கியின் வாடிக்கையாளர்களாக இருப்பவை மிகப் பெரிய நிறுவனங்கள் மற்றும் விவிஐபிக்களாகும். இவர்களைப் பற்றி அந்த வங்கி என்ன கருத்து தெரிவித்துள்ளது என்பதை இப்போது வெளியிடப்போவதாக விக்கிலீக்ஸ் கூறியிருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது பாங்க் ஆஃப் அமெரிக்காவுக்கு.

மேலும், இந்த வங்கி இதுவரை வசூலாகாத நிலுவைக் கடன்கள், ரகசியமாய் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள் போன்றவை குறித்தெல்லாம் விக்கிலீக்ஸ் வசம் ஆவணங்கள் உள்ளதாகத் தெரிகிறது.மேலும் சமீபத்திய நெருக்கடியின்போது, கடன் செலுத்த முடியாத நிறைய வாடிக்கையாளர்களின் வீடுகளை திரும்ப எடுத்துக் கொண்டன அமெரிக்க வங்கிகள். சட்டப்படி, இப்படி எடுத்துக் கொள்ள அமெரிக்க வங்கிகளுக்கு அனுமதி இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பும் ஆவணங்களையும் வெளியிடப்போகிறார்களாம்.இந்த தகவலை மட்டும் வெளியிட்டால், அமெரிக்க வங்கித் துறை மீண்டும் பெரும் நெருக்கடிக்குள்ளாகும் என்று அச்சம் தெரிவித்துள்ளன பல்வேறு வங்கிகளும்.

ஆனால் பாங்க் ஆப் அமெரிக்காவோ இதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், 'விக்கிலீக்ஸ் எங்களைப் பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. இந்த வங்கியின் ஆவணங்களை யாரும் களவாட முடியாது', என்று கூறியுள்ளது.சிட்டி குழுமம், ஜேபி மார்கன், கோல்ட்மென் சாஷ், மெரில் லிஞ்ச் மற்றும் ஏஜி போன்ற நிறுவனங்கள் திவாலானது, அவற்றை மீட்க அளிக்கப்பட்ட நிதி உதவிகள் ஆகியவற்றின் பின்னணி குறித்த ரகசியங்களையும் விக்கிலீக்ஸ் வெளியிடக் கூடும் என்று தெரிகிறது.

Inside Facebook Offices