மும்பை வான்கடே மைதானத்தில் ஷாருக்கான் ரகளை

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் நடிகரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளருமான ஷாருக்கான் மோதலில் ஈடுபட்டார். இதனால் அவர் வான்கடே மைதானத்துக்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் கொல்கத்தா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் வெற்றிக் களப்பில் மிதந்த ஷாருக்கான் தமது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மும்பை கிரிக்க்ட் சங்கத் தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார். ஷாருக்கானின் பாதுகாவலர்கள் மைதான காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்த் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு ஷாருக்கான் மீது புகார் பதிவு செய்து எச்சரித்து அனுப்பினர்.

ஷாருக்கானின் இந்த அடாவடி நடவடிக்கையால் அனேகமாக மும்பை வான்கடே மைதானத்துக்குள் இனி வாழ்நாள் முழுவதும் நுழைய முடியாது என்று தடை விதிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.

மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். மும்பை கிரிக்கெட் சங்க பொருளாளர் ரவிஷாவந்த் இச்சம்பவம் பற்றி கூறுகையில், ஷாருக்கான் மும்பை கிரிக்க்ட் சங்க பாதுகாவலர்கள், நிர்வாகிகள், தலைவர் வ்லாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோரை அவதூறாகவும் அவமதித்துப் பேசினார். அவரை வாழ்நாள் முழுவதும் இந்த மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய தடை விதிக்க முடிவு செய்திருக்கிறோம் என்றார் அவர்.

Post a Comment

0 Comments