யுவராஜ் சிங்கை நேரில் சந்தித்து நலன் விசாரித்தார் கெவின் பீட்டர்சன்


அமெரிக்காவில் புற்றுநோய் கட்டிக்கான சிகிச்சை முடித்து நாடு திரும்பியுள்ள இந்திய மிடில் ஆடர் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங்கை, இங்கிலாந்து பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்திய மிடில் ஆடர் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங்கிற்கு, கடந்த ஆண்டு புற்றுநோய் கட்டி ஏற்பட்டது. இதனையடுத்து அமெரிக்கா சென்ற யுவராஜ் சிங்கிற்கு 3 நிலைகளை கொண்ட கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடித்து கடந்த 9ம் தேதி இந்தியா திரும்பிய, யுவராஜ் சிங் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்வில்ஸ் அணியில் விளையாடி வரும் இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன், யுவராஜ் சிங்கை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இருவரின் சந்திப்பு குறித்து பீட்டர்சன், ட்விட்டர் இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். இதில், பெய் சுக்கரை(யுவராஜ் சிங்) நேரில் சந்தித்து பேசியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் இணையதளத்தில் கடந்த வாரம் பீட்டர்சன் வெளியிட்ட செய்தியில் அவர் கூறியிருந்ததாவது

லண்டனில் இருந்து யுவராஜ் சிங் இந்தியா செல்லும் முன் சந்தித்து அவருடன் பேசியதை அதிஷ்டமாக கருதுகிறேன். வரும் வாரம் (இந்த வாரம்) அவரை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன். ஒரு விளையாட்டு வீரரின் இக்கட்டான சூழ்நிலையில் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் அளிப்பது விளையாட்டு வீரரான எனது கடமையாக நினைக்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

கடந்த 2008ல் இந்தியாவில் நடைபெற்ற இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ள வந்த கெவின் பீட்டர்சனுக்கு, யுவராஜ் சிங் உடன் நட்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments