2,000 புத்தகங்களை எடைக்கு போட்டுவிட்டு பட்டினி கிடந்தேன்


விண்ணை முட்டும் கட்டடங்கள், கோடிகளில் புரளும் வியாபாரங்கள் நிறைந்த தி.நகரில் 1,400 சதுர அடிகட்டடத்தில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களுடன், கடந்த 48 வருடங்களாக வாடகை நூலகம் நடத்துகிறார் ரவிராஜ். அறவியில் வளர்ச்சியில் வீட்டுக்குள் வந்து அமர்ந்துள்ள சாத்தான் என்கிறார் தொலைக்காட்சிப் பெட்டியை. கடந்த காலத்தில் மக்களுக்கு படிப்பைத் தவிர வேறொன்றும் தெரியாது. புத்தக விற்பனை அமோகமாக இருந்தது. இப்போது படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக ஆதங்கப்படுகிறார். அவரிடம் உரையாடியதிலிருந்து... என்ன படித்திருக்கிறீர்கள்?
பி.யூ.சி., படித்திருக்கிறேன்.இந்த தொழிலுக்கு எப்படி வந்தீர்கள்?மூர் மார்க்கெட்டில் நண்பர் ஒருவர் வாடகை நூலகம் நடத்தி வந்தார். புத்தகம் வாசிக்க கடைக்குச் செல்வேன். காலப்போக்கில் நானும் கடை நடத்த தொடங்கினேன்.தி.நகரில் எத்தனை ஆண்டுகள்? 48 ஆண்டுகள் கடந்து விட்டன. பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?பிள்ளைகள் நன்றாகப் படித்து நல்ல சம்பளம் வாங்குகிறார்கள். 
ஒரு மகன் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். மற்றொரு மகனும், மகளும் புகழ்பெற்ற கணிப்பொறி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள்.
வாடகை நூலகத்தில் கிடைத்த வருமானம் கொண்டு தான் படிக்க வைத்தீர்களா?பழைய புத்தகங்கள் தான் எங்களை வாழவைத்தன.வாசிப்பவர்களின் எண்ணிக்கை எப்படி உள்ளது?
புத்தகம் படிப்பவர்கள் குறைந்து விட்டனர். கடந்த 20 வருடங்களுக்கு முன் மக்களுக்கு படிப்பைத் தவிர வேறொன்றும் தெரியாது. வாசகர்களில் யார் அதிகம்? பெண்கள் அதிகமாக புத்தகம் வாங்குகிறார்கள். ஏதோ அழகு குறிப்பு, சமையல் புத்தகங்கள் வாங்குகிறார்கள் என, நினைக்க வேண்டாம். தலை சிறந்த புத்தகங்களை வாசிக்கிறார்கள். ஆண்களுக்கு பெரிதாக ஆர்வமில்லை.பிரபலங்கள் வந்ததுண்டா?
இந்தக் கடையில் கால் வைக்காத பிரபலங்களே இல்லை. தமிழகத்தில் இருந்த தலைசிறந்த எழுத்தாளர்கள், அரசியல் பிரபலங்கள், சினிமாத் துறையினர் அனைவரும் வந்துள்ளனர். பெயர் பட்டியல் மிக நீளமானது.

அடிக்கடி வரும் பிரபலங்கள் யார்?பாக்கியராஜ், ஜி.ஆர்.டி., மனோரமா, ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயச்சந்திரன் இன்னும் பலர்...ஆளை விழுங்கும் தி.நகரில் இத்தனை ஆண்டுகள் வாடகை நூலகம் நடத்துவதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டுமே?உழைப்பைத் தவிர வேறொன்றும் தெரியாது. கையும் காலும் தான் உதவி; கொண்ட கடமை தான் பதவி என்பது போல, யாரிடமும் 10 பைசா கூட வாங்குவதில்லை.
பிள்ளைகள் உதவி செய்கிறார்களா?அடுத்தவர் உழைப்பில் வாழக் கூடாது என்பது என் கொள்கை. உயிர் இருக்கும் வரை நூலகம் நடத்துவேன்.வாடகை புத்தகம் எந்தளவுக்கு செல்கிறது?
புத்தக வாசிப்பு குறைந்து போனதால், வியாபாரம் பாதித்து, 2,000 புத்தகங்களை எடைக்குப் போட்டு விட்டு ஒரு வாரம் சாப்பிடாமல் கிடந்தேன். அப்புறம் இயல்பு நிலைக்கு வந்துவிட்டேன்.
நூல்களை வாடகைக்கு எடுப்போர் பத்திரமாகக் கொண்டு வருகிறார்களா?பச்சிளம் குழந்தைபோல் பாதுகாப்புடன் கொண்டு வருவார்கள்.எதிர்கால சந்ததிக்கு தெரிவிப்பது...
இளம் வயதில் தமிழா படி, தமிழா படி என்று தெருத்தெருவாக குரல் எழுப்பியிருக்கிறேன். படித்தால் மட்டுமே தன்மானத்துடன் வாழ முடியும். சட்டம் இயற்றியாவது நூல்களைப் படிக்க வைக்க வேண்டும்.இவ்வாறு ரவிராஜ் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments