2000 ஆண்டு பழமைமிக்கது கரூர்.கரூர் காலப்போக்கில் சேர,சோழ,பாண்டிய,கங்க மன்னர்கள்,விஜய நகர நாயக்கர்கள்,மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. கரூர் பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது.

Friday, April 13, 2012

நியூயார்க் விமான நிலையத்தில் 2 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டார் ஷாரூக்கான்!

7:49 PM Posted by karurkirukkan No comments
 இந்தி நடிகர் ஷாரூக்கானை அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகள் 2 மணிநேரம் நியூயார்க் விமானநிலையத்தில் தடுத்து வைத்தனர்.

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள், அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார். யேல் பல்கலைக் கழக நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்பதற்காக ஷாரூக்கானும் அவருடன் முகேஷ் அம்பானியின் மனைவி நீடாவும் நியூயார்க் சென்றிருந்தனர்.

நியூயார்க் விமான நிலையத்தில் இறங்கிய ஷாரூக்"கான்" என்ற பெயரைக் கேட்டதும் கிலி அடைந்தார்போல் அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் அவரை அப்படியே ஓரம்கட்டி உட்காரவைத்துவிட்டனர்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஒவ்வொருவராக வந்து ஷாரூக்கானிடம் விசாரணை நடத்திக் கொண்டே இருந்தனர். இப்படியே 2 மணிநேரம் ஓடிப்போய்விட்டது. இதன் பிறகே ஷாரூக்கான் விடுவிக்கப்பட்டார்.

யேல் பல்கலைக் கழகமும் பல்வேறு துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோதுதான் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ப்பது தெரியவந்தது.

இது பற்றி கருத்து தெரிவித்த அவர், அமெரிக்காவுக்கு வரும்போதெல்லாம் இதெல்லாம் சகஜம்... எப்பவுமே நடக்கிறதுதான் பாஸ் என்ற ரீதியில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். இப்படி ஷாரூக்கான் சோதனையில் சிக்குவது 3-வது முறை. காரணம் கான் என்ற பெயரைக் கேட்டாலே அமெரிக்காகாரர்களுக்கு குழப்பம் ஏற்படுவதே!. கமல்ஹாசனைக் கூட இப்படித்தான் ஒரு்முறை நிறுத்தி வைத்து சோதித்தனர் - காரணம் அவரது பெயரில் ஹாசன் என்ற பெயர் இருப்பதால்.
Reactions:

0 comments: