ரயில் பயணக் கட்டணம் உயர்வு

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2012 - 2013 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், ரயில் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார். பயணிகள் கட்டணம் கி.மீ.க்கு 2 காசு முதல் 30 காசு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் நிதிநிலை சிரமதசையில் உள்ளதாகவும், கட்டண உயர்வைக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த கட்டண உயர்வால் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.4,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும்.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரûஸச் சேர்ந்த அமைச்சர் தினேஷ் திரிவேதி தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

கட்டண உயர்வு: புறநகர் ரயில்கள், சாதாரண வகுப்புகளில் தற்போதைய கட்டணத்தைவிட கி.மீ.க்கு 2 காசு உயர்த்தப்படுகிறது. மெயில், எக்ஸ்பிரஸ் இரண்டாம் வகுப்புக்கு 3 காசு; ஸ்லீப்பர் வகுப்புக்கு 5 காசு அதிகரிக்கப்படும்.

ஏ.சி. சேர் கார், 3 அடுக்கு ஏ.சி.க்கு 10 காசு, 2 அடுக்கு ஏ.சி. பெட்டிக்கு 15 காசு, ஏ.சி. முதல் வகுப்புக்கு 30 காசு அதிகரிக்கப்படும். பிளாட்பார கட்டணம் ரூ. 5 ஆக அதிகரிக்கப்படும்.

இந்தக் கட்டண உயர்வு, பொதுமக்களுக்கு குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கொண்டு வரப்படுகிறது. எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்துள்ளதால், வேறுவழியின்றி கட்டணத்தை உயர்த்த வேண்டியதாகிவிட்டது என்றார் தினேஷ் திரிவேதி.
ரயில்வே துறை கடினமான காலகட்டத்தில் உள்ளதாக தெரிவித்த அவர், ""சம்பள கமிஷனின் அறிவுறுத்தலின்படி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது உள்ளிட்ட கூடுதல் செலவினங்களால் தாங்க முடியாத சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தவிர்க்க இயலாத காரணத்தால்தான் இப்போது இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரயில் கட்டண ஒழங்குமுறை ஆணையம் ஒன்றை அமைப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம்'' என்றார் அமைச்சர்.
புதிய ரயில்கள்: 75 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், 21 புதிய பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படும். இவை தவிர, மெயின் லைனில் ஓடும் மின்சார ரயில்கள் 8, டீசலில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் 9 இயக்கப்படும். 39 ரயில் பாதைகள் விரிவுபடுத்தப்படும். இப்போதுள்ள 23 ரயில்களின் சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
ரயில் நிலையங்களை மேம்படுத்த... ரயில் நிலைய மேம்பாட்டு கார்ப்பரேஷன் மூலம் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக 19 ஆயிரம் கி.மீ. தூரம் இருப்புப் பாதையை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரையில்லாத வகையில் 2012-2013 நிதியாண்டுக்கு ரூ. 60,100 கோடி மதிப்பீட்டுக்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ரூ. 1,112 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது (கடந்த நிதியாண்டில் ரூ. 762 கோடி).
12-வது ஐந்தாண்டு திட்டக் கால வரையறைக்குள் அனைத்து இருப்புப் பாதைகளையும், அகல ரயில்பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 800 கி.மீ. அகல ரயில்பாதையாக மாற்ற ரூ. 1,950 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர புதிய இருப்புப் பாதைகளை அமைக்க ரூ. 6,725 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்துறையில் 2012 - 2013 நிதியாண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும்.
ரயில்களில் பசுமைக் கழிவறைகள் அமைக்கப்படும். ஆளற்ற ரயில் கேட்டுகள் அடுத்த 5 ஆண்டுகளில் ஒழிக்கப்படும்.
ஒடிசாவின் சீதாபள்ளியில் சரக்கு ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலை, கேரளத்தின் பாலக்காட்டில் பயணிகள் ரயில் பெட்டித் தொழிற்சாலை நிறுவப்படும்.
மேற்குவங்கத்தின் ஷியாம்நகரில் உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையும், நய்ஹத்தியில் சரக்கு முனையம் ஏற்படுத்தப்படும்.
திரிபுரா மாநிலம், அகர்தலாவிலிருந்து வங்கதேசத்தின் அகுரா வரை ரயில்களை இயக்க புதிய இருப்புப் பாதை அமைக்கப்படும்.
ஆண்டுதோறும் ரயில்வே துறையின் சார்பில் விளையாடும் வீரர்கள் 10 பேருக்கு ரயில் கேல் ரத்னா விருது வழங்கப்படும்.
12-வது ஐந்தாண்டு திட்டம், மம்தா பானர்ஜியின் தொலைநோக்குத் திட்டம் - 2020 ஆவணத்துடன் தொடர்புடையதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்றார் தினேஷ் திரிவேதி.
நிதி நிலைமை:பொது பட்ஜெட்டிலிருந்து ரயில்வே துறைக்கு ரூ.45,000 கோடி ஒதுக்க வேண்டும். ஆனால், இப்போது ஒதுக்கப்படுவது ரூ. 24,000 கோடி மட்டுமே.
வரும் நிதியாண்டில் 1,025 மெட்ரிக் டன் அளவுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2011-2012 நிதியாண்டைவிட 55 மெட்ரிக் டன் அதிகமாகும்.
பயணிகள் ரயில் கட்டண உயர்வுக்குப் பின், அந்த வகையில் கிடைக்கும் வருவாய் ரூ. 36,200 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் ரூ.1,03,917 கோடியாக இருந்தது. இது எதிர்பார்த்ததைவிட ரூ. 2,322 கோடி குறைவாகும்.
வரும் நிதியாண்டில் கட்டண வருவாய் 27.6 சதவீதம் அதிகரிக்கும் என்பதால் ரூ.1,32,552 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ரயில்வே நலனுக்காகத்தான்...கட்டண உயர்வுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து தினேஷ் திரிவேதி கூறியது: ரயில்வேயின் நலனுக்காகத்தான் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு குறித்து திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதுவும் தெரியாது. பலர் நினைப்பதுபோல, இந்த பட்ஜெட் ஒன்றும் ரைட்டர்ஸ் மாளிகையிலிருந்து (மேற்கு வங்க முதல்வர் அலுவலகம்) தயாரிக்கப்படவில்லை. இப்போது "ஐ.சி.யூ'வில் (அவசர சிகிச்சைப் பிரிவு) இருப்பதுபோன்று சிரமமான நிலையில் ரயில்வே துறை இருப்பதால்தான் இந்நடவடிக்கை எடுக்கவேண்டியதாகிவிட்டது என்றார் தினேஷ் திரிவேதி.
முக்கிய அம்சங்கள்
புறநகர் ரயில், சாதாரண வகுப்பு ரயில்களில்
கி.மீ.க்கு 2 காசு உயர்வு.
மெயில், எக்ஸ்பிரஸ்களில் கி.மீ.க்கு 3 காசு உயர்வு.
ஸ்லீப்பர் வகுப்புக்கு கி.மீ.க்கு 5 காசு அதிகரிப்பு.
ஏசி சேர் கார், 3 டயர் ஏசி, முதல் வகுப்புக்கு கி.மீ.க்கு 10 காசு உயர்வு.
2 டயர் ஏசி ரயிலுக்கு கி.மீ.க்கு 15 காசும், ஏசி முதல் வகுப்புக்கு 30 காசும் உயர்வு.
பிளாட்பார டிக்கெட் ரூ. 5.
75 புதிய எக்ஸ்பிரஸ்கள்; 21 புதிய பாசஞ்சர்கள்.
இ.எம்.யூ. ரயில்கள் 8, டி.இ.எம்.யு. ரயில்கள் 9.
39 ரயில் பாதை விரிவாக்க திட்டங்கள்.
23 ரயில்களின் சேவை அதிகரிப்பு.
2012- 2013 நிதியாண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலை.
ரயில் நிலைய மேம்பாட்டுக்கு அமைப்பு.
ரயில் பாதுகாப்புக்கு ஆணையம்.
ரயில்களில் பசுமைக் கழிவறைகள்.
ஆளில்லா ரயில் கேட்டுகள் 5 ஆண்டுகளில் ஒழிப்பு.
2 அடுக்கு கன்டெய்னர் ரயில் அறிமுகம்.
பெரிய ரயில் நிலையங்களில் "எஸ்கலேட்டர்' வசதி.
காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு மாற்று ரயில்களில் இடவசதி.
ரயிலில் டிஜிட்டல் போர்டில் அடுத்த நிறுத்தம் பற்றி அறிவிப்பு.
ரயில்கள் சென்றுகொண்டிருக்கும் பகுதி குறித்த தகவல் எஸ்.எம்.எஸ். இன்டெர்நெட் மூலம் அளிப்பு.
உணவுக்கான ஆர்டரை செல்போன் எஸ்.எம்.எஸ். அல்லது மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கும் வசதி.
மாற்றுத்திறனாளிப் பயணிகளின் வசதிக்கேற்ப ரயில் பெட்டி வடிவமைப்பு.
ரயில்வே துறை விளையாட்டு வீரர்கள் 10 பேருக்கு ""ரயில் கேல் ரத்னா'' விருது.
எலும்பு மஜ்ஜை, ரத்த சோகையால் பாதிக்கப்பட்டோருக்கு 50% கட்டணம் சலுகை.
"ஏழைகள் ரதம்' ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி பெட்டி.  மார்ச் 14:மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2012 - 2013 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், ரயில் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

இந்தக் கட்டண உயர்வு, பொதுமக்களுக்கு குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கொண்டு வரப்படுகிறது. எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அத��கரித்துள்ளதால், வேறுவழியின்றி கட்டணத்தை உயர்த்த வேண்டியதாகிவிட்டது என்றார் தினேஷ் திரிவேதி.

"ஏழைகள் ரதம்' ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி பெட்டி.

Post a Comment

0 Comments