தற்போதைய பரபரப்பு நிலவரம்- ஜே- சசி உறவு

சி தரப்பை மீண்டும் ஜெ.’ கார்டனுக்கு கூப்பிட்டுக்கொள்வாரோ என்ற யோசனையில் இருந்த ர.ர.க்கள் கூட இப்போது ஜெ.’வின் மன உறுதிகண்டு மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள். இனி தங்கள் கருத்துக்களை எந்தவித தடையும் இல்லாமல் கார்டனின் பார்வைக்குக் கொண்டு செல்லமுடியும் என்ற நம்பிக்கை ர.ர.க்கள் மத்தியில் நிலவுகிறது. மன்னார்குடி தரப்பால் பாதிக்கப்பட்ட பலரும் இப்போது தைரியம் பெற்று தங்கள் அனுபவங்களை கார்டனுக்கு கடிதம் கடிதமாய் எழுதிக் குவித்து வருகின்றனர்.


முப்பது வருடங்களாக உடனிருந்த உயிர்த் தோழி சசிகலாவை வெளியேற்றி 10 நாட்கள் கடந்த நிலையிலும் ஜெ., உறுதிகுலையாமல் இருக்கிறார். தான் எடுத்த முடிவில் இருந்து அவர் கொஞ்சம்கூட மாறவில்லை. சசி உறவினர்கள் நடத்திய பல்வேறு லீலைகள் குறித்த புகார்களும் குமுறல்களும் ஜெ.’வின் மேஜை மீது வந்து குவிந்தபடியே இருக்கிறது. 

ஜெ.’வின் இன லாபியில் இருப்பவர்கள் ஜெ.’விடம் "உங்களுக்கும் குழந்தையில்லை. சசிகலாவிற்கும் குழந்தையில்லை. அப்படியிருக்க மக்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டு யாருக்காக கோடிகோடியாய்ப் பணத்தை சேர்க்கவேண்டும்? எம்.ஜி.ஆர். போல் சாகும்வரை நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இல்லையா?' என திரும்பத் திரும்பக் கேட்டதுதான் ஜெ.வை அதிகம் யோசிக்க வைத்தது. இந்த யோசனையில் ஆரம்பித்த தீப்பொறிதான் சசி தரப்பை வெளியேற்றும் அளவிற்கு ஜெ.வை கொதி நிலைக்குக் கொண்டுபோனது.


சசியோடு தான் பங்குதாரராக இருக்கும் சொத்துக்கள் குறித்தும் சசி உறவினர்கள் பெயரில் பினாமியாக பெருமளவில் வாங் கிப்போட்ட சொத்துக்கள் குறித்தும் தனது இனத்தைச் சேர்ந்த ஆடிட்டரோடு தொடர்ந்து ஆலோசித்து வருகிறார் ஜெ. சசி குடும்பத்தார் பெயரில் இருக்கும் தனது சொத்துக்களை எப்படி மீட்பது  என்பதுதான் ஜெ.’வின் தற்போதைய தீராத சிந்தனை. 

ஜெ.’வின் கொடநாடு எஸ்டேட்டில் சசிகலா, இளவரசிக்கும் பங்குகள் இருக்கிறது. அந்த பங்குகளையெல்லாம் தனது பெயருக்கு மாற்று வதற்கான ஏற்பாடுகளையும் பரபரப்பாக முடுக்கிவிட்டிருக்கிறார் ஜெ. இதேபோல் பெரிய மதுபான நிறுவனமான மிடாஸ் டிஸ்டில்லரீ         ஸின் முழு உரிமையும் சசி குடும்பத்தார் பெயரிலேயே இருக்கிறது. 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த நிறுவனத்தின் இட மதிப்பே 200 கோடி ரூபாய்க்கும் மேலாகிறது. அதோடு அதற்குள் இருக்கும் அதி நவீன கருவிகள், தளவாடப் பொருட்கள் மற்றும் லைசென்ஸ் வேல்யூ என்று கணக்கிட்டால் இவை 150 கோடி ரூபாய்க்குமேல் இருக்கும். ஆக ஏறத்தாழ 350 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த மதுபான நிறுவனத்தை தன் பெயருக்கு மாற்றினால், மக்களிடம் கெட்டபெயர் ஏற்படுமோ என யோசிக்கும் ஜெ., வேறு பினாமி பெயர்களில் மாற்றலாமா அல்லது சட்டச் சிக்கல் உண்டாகும் பட்சத்தில் சசி தரப்பிடமே கொஞ்சநாள் விட்டுவைக்கலாமா? இல்லையென்றால் யாரிடமாவது விற்றுவிடலாமா? என்றெல்லாம் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.




எம்.ஜி.ஆர் நினைவு நாளான 24-ந் தேதி அவரது நினைவிடத்திற்கு ஜெ.’ போன போது திரண்டிருந்த ர.ரக்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டது. கூட்டத்தோடு கூட்டமாய் சசியால் எம்.எல்.ஏ.வான ஒருவர் ஜெ.’வின் அருகே சென்று கும்பிடுபோட, இதைக் கண்ட ர.ர.க்கள் சிலர், "சசி கும்பல் நடிக்குது. நம்பாதீங்க'’என சத்தம் போட்டனர். இதை கவனித்த ஜெ.’ தொண்டர்கள் முழுக்க முழுக்க தன் பக்கம்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் புன்ன கைத்தார். அங்கிருந்து கார்டன் திரும்பிய ஜெ.’வின் கண்கள், வாசலில் கூடியிருந்த கூட்டத்தைத் துழாவத் தவறவில்லை. உள்ளே சென்ற ஜெ. வாசலில் கூட்டத்தோடு கூட்டமாய்க் காத்திருந்த புதுக்கோட்டை மாவட்ட கட்சி சீனியர் குழ.செல்லையாவை...




source:nakkeeran

Post a Comment

0 Comments