பெண் ஆசன வாயில் தங்கக் கட்டி # திருட்டுக்களை தடுக்க நவீன யுக்தி

ரயில்களில் செயின் பறிப்பு மற்றும் திருட்டுக்களை தடுக்கும் வகையில், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில் பயணிகளை போன்று பயணித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பர் என, மண்டல ரயில்வே ஐ.ஜி.வினோத்குமார் டாக்கா தெரிவித்துள்ளார்.
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தென் மண்டல ஐ.ஜி. வினோத்குமார் டாக்கா ஆய்வு செய்த பின் அவர் கூறியதாவது, ரயில்களில் செயின் பறிப்பு மற்றும் திருட்டுக்களை தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில் பயணிகளை போன்று பயணித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ரயில்களில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அது குறித்து தகவல்களை கட்டுப்பாட்டு அறைகளுக்கும் போன் மூலம் தெரிவிக்காலம். இதில் வரும் புகார்களை கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள், அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு தெரிவித்து, நடவடிக்கை எடுப்பர்.ரயில்வே பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் உட்பட பல பிரிவுகளில் 600 காலியிடங்கள் உள்ளன. விரைவில் அந்த காலியிடங்கள் நிரப்பப்படும். மதுரை ரயில்வே நிலையத்தில் 68 கண்காணிப்பு கேமிராக்கள், ஒரு பார்சல் ஸ்கேனர், 2 லக்கேஜ் ஸ்கேனர், 2 அன்டர்வெகிள் ஸ்கேனர் மூன்று மாதங்களுக்குள் நிறுவப்படும். பின்பு மற்ற நிலையங்களில் உள்ளது செயல்படும்,
என்றார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

இலங்கையிலிருந்து ஒரு பெண் தங்க கட்டிகளை தூத்துக்குடிக்கு கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை கொழும்பில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வந்த பயணிகள் கப்பலில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். சந்தேகத்தின் பேரில் இரு பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஒருவர் திருச்சி ஐயப்பன் நகரை சேர்ந்த சந்திரலிங்கம் மனைவி கோடீஸ்வரி என்பதும் அவருடன் வந்தவர் கொழும்புவை சேர்ந்த செல்வநாயகம் மனைவி பார்வதம் என்பதும் தெரிய வந்தது. இருவரின் உடமைகளையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். ஆனால் ஓன்றும் சிக்கவில்லை. இதையடுத்து கோடீஸ்வரியை பெண் அதிகாரிகள் மூலம் சோதனையிட்டனர். அப்போது ஆசன வாயில் அவர் 7 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

பின்னர் அவரை தூத்துக்குடி அழைத்து வந்து ஒரு தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே மூலம் சோதனை செய்தபோது அவரது உடலில் மேலும் 4 தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்து அகற்றினர்.தலா 116 கிராம் வீதம் மொத்தம் ஒரு கிலோ எடையுள்ள 276 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கோடீஸ்வரியை அதிகாரிகள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.பர்வதத்தை சோதனையிட்டதில் ஓன்றும் சிக்காததால் அவரை விடுவித்தனர். தங்க கட்டிகள் கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments