துபாயில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி மாபெரும் ரத்ததான முகாம்


துபாயில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி மாபெரும் ரத்ததான முகாம் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

துபாயில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி பிரண்ட்ஸ் ஆப் இந்தியா ( Friends of India ) எனும் இந்திய சமூக மைய அதரவுடன் செயல்பட்டு வரும் அமைப்பின் சார்பில் கடந்த 12-ம் தேதி மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இதற்கு இந்திய சமூக மைய கன்வீனர் கே. குமார் தலைமை வகித்தார். பிரண்ட்ஸ் ஆப் இந்தியாவின் தலைவர் என். மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா ரத்ததான முகாமினை துவக்கி வைத்து தானும் ரத்ததானம் செய்தார். அவர் தனது உரையில் பிரண்டஸ் ஆப் இந்தியா மேற்கொண்டு வரும் ரத்ததான சேவையினைப் பாராட்டினார்.

அல் வாஸல் மருத்துவமனையின் டாக்டர் ரீம் காமிஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில் இந்திய கன்சல் ஜெனரலின் ஆதரவுடன் ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு வருவதையும், அதற்கு இந்திய மக்கள் பேராதரவு அளிப்பதையும் மிகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். இந்திய கன்சல் ஜெனரல் மற்றும் இந்திய சமூக நல மையத்தின் ஆதரவுடன் இம்முகாம் மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

Post a Comment

2 Comments

நான் கூட ரத்தம் கொடுக்க ஆசைப்படுகிறேன். ஆனால் வாய்ப்பு தான் அமையல. ரத்த தானம் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

www.panangoor.blogspot.com