நாம் யார் யாருக்கு என்ன செய்தோம்-ரஜினி


மருத்துவமனையில் பணம் நினைவுக்கு வரவில்லை; உடலும் உயிரும் மட்டுமே நினைவுக்கு வந்தது - ரஜினி சொன்னதாக வைரமுத்து தகவல்

மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சைப் பெற்று வந்தபோது எனக்கு பணமோ புகழோ நினைவுக்கு வரவில்லை. உயிரும் உடலும்தான் நினைவுக்கு வந்தது என சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். கோவையில், நேற்று நடந்த 'ஓர் அன்னையின் கனவு' என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வைரமுத்து, தனது சிறப்புரையில், "வெளிநாட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ரஜினிகந்த் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன், "உண்மையை சொல்லுங்கள், நீங்கள் மருத்துவமனையில் இருந்த 'அந்த நிமிடத்தில்' என்ன நினைத்தீர்கள்" என்று கேட்டேன்.அதற்க்கு ரஜினி அவர்கள், "நான் ரஜினிகாந்த் என்பதையே மறந்துவிட்டேன். பணம், புகழ், உற்றார், உறவினர்கள் யாரும் நினைவுக்கு வரவில்லை. என் உடல், உயிர் என இரண்டு மட்டுமே நினைவுக்கு வந்தது.

பிறகுதான், நாம் யார் யாருக்கு என்ன செய்தோம், யார் யாருக்கு உதவி செய்யாமல் மறந்து விட்டோம் என்று எண்ணத்தோன்றியது," என்று கூறினார்.அவர் யார் யாருக்கு என்று குறிப்பிட்டு கூறியது, நம்மை சுற்றியிருக்கும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களைத்தான். நம் உடம்பில் தெம்பிருக்கும் போதே நம்மால் முடிந்த உதவிகளையும், நன்மைகளையும் அவர்களுக்கு செய்து விடவேண்டும். ஒழுக்கம், நேர்மை, உழைப்பு மூன்று மட்டுமே மனித குல மேம்பாட்டுக்கு ஏற்ற மிகமுக்கியமான பண்புகள் ஆகும் என்பது ரஜினி அவர்கள் கூறிய உண்மை," என்றார் வைரமுத்து.

Post a Comment

1 Comments

உண்மை தான் இறக்குமுன் நாம் செய்த நல்லவை மட்டுமே நம் நினைவிற்கு வர வேண்டும்... அதற்கு வாழும்போதே நல்லது செய்ய பழகிகொள்ள வேண்டும்... பகிர்வுக்கு நன்றி நண்பரே