'பணத்தை அறவழியில் செலவிடுங்கள்'- பில்கேட்ஸ்


மைக்ரோ சாப்ட் ஸ்தாபகர் பில் கேட்ஸ், பெரும் முதலீட்டாளர் வாரன் பஃபெட் ஆகியோர் இந்தியாவிலுள்ள பெரும் செல்வந்தர்கள் சிலரை சந்தித்து நற்பணிகளில் ஈடுபடுமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர்.மற்றவர்கள் இந்தப்பணிகளில் போதுமானளவு ஈடுபடுவதில்லையென குற்ற உணர்வு கொள்ள வைப்பது தமது நோக்கமல்ல என்று பில்கேட்ஸ் கூறுகிறார்.

பில் கேட்ஸூம், வாரன் பஃப்பெட்டும் அமெரிக்காவிலும் சீனாவிலும் உள்ள பல கோடீஸ்வரர்களை ஈர்த்து அவர்கள் தமது சொத்தில் பெரும்பகுதியை நல்ல காரியங்களுக்காக பயன்படுத்தச் செய்யும் முயற்சில் வெற்றியடைந்துள்ளார்கள் என்று தான் கூற வேண்டும்.

ஆனால் இந்தியாவில் நூறு கோடி டொலர்களை தாண்டிய பெறுமதியில் சொத்துக்களை வைத்திருக்கும் 55 பேரில் மிகச் சொற்பமானவர்களே இந்தப்பணிகளில் தமது ஆர்வத்தைக் காட்டியுள்ளனர்.

அண்மையில் விப்ரோ நிறுவன அதிபர் அசீம் பிரேம்ஜீ, 2 பில்லியன் டொலர் பெறுமதியான நன்கொடை நிதியொன்றை உருவாக்கி கிராமப்புற இந்தியாவில் கல்வியை முன்னேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இன்னும் பல இந்திய செல்வந்தர்கள் இந்த வழியைத் தொடர்வார்கள் என்று பில்கேட்ஸூம் வாரன் பஃப்பெட்டும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இவர்கள் இருவரும் தமது சொத்துக்களில் கணிசமான அளவை பொதுப் பணிகளில் செலவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments