குத்தகைக்கு குட்டித் தீவுகள்.சிறந்த வங்கியாக எச்டிஎப்சி தேர்வு


இலங்கையின் வடமேற்குக் கரையோரமாக புத்தளம் மாவட்டம் கற்பிட்டிப் பகுதியில் இரு தீவுகளை வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்ட சுற்றுலா நிருவனங்களுக்கு 30 வருட குத்தகைக்கு விட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெள்ளைத்தீவு மற்றும் இன்பத்தீவு ஆகியன இலங்கை, சுவிட்சர்லாந்து, இந்தியா மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளை தளமாகக் கொண்ட சுற்றுலா நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த இலங்கை பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சரான லக்ஷ்மன் யாப்ப அபயவர்த்தன அறிவித்துள்ளார்.

ஆனால் இந்த தீவுகள் தம்மால் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறுகின்ற அப்பகுதி மீனவர்கள், இவ்வாறு தனியாருக்கு குத்தகைக்கு விடுவத்டு தமது வாழ்வியலைப் பாதிக்கும் என்று கூறுகின்றனர்.

இது தொடர்பாக தமிழோசையுடன் பேசிய தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பு என்னும் அரச சார்பற்ற நிறுவனத்தின் கற்பிட்டிப் பிராந்திய இணைப்பாளரான ஜே. பத்மநாதன், சுமார் 600 மீனவ குடும்பங்கள் வரை இந்தத் திட்டத்தினால் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்றும் கூறுகிறார்.

*************************************************************

சிறந்த வங்கியாக எச்டிஎப்சி தேர்வு

இந்தியாவின் சிறந்த சில்லறை வணிக வங்கியாக எச்டிஎப்சி வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தனியார் துறையில் மிகப் பெரிய வங்கியாகக் கருதப்படுகிறது எச்டிஎப்சி வங்கி. ஆசியன் பேங்கர்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் சிறந் வங்கிகளைக் கண்டறிந்து அறிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஆசியா பசிபிக், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் ஆப்ரிக்க பகுதிகளின் சிறந்த வங்கிகளைத் தேர்வு செய்து அறிவித்தது ஆசியன் பேங்கர்ஸ்.

இதில் இந்தியாவின் சிறந்த சில்லறை வர்த்தக வங்கியாக எச்டிஎப்சி தேர்வு பெற்றுள்ளது. 29 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 150 நிதி அமைப்புகளை இதற்காக பரிசீலனை செய்தது ஆசியன் பேங்கர்ஸ் அமைப்பு.

Post a Comment

0 Comments