கறுப்புப் பணம் யார் யார் வைத்து இருக்கிறார்கள் மொரீஷியஸ்,ஜெர்மன் அரசு தகவல் தர சம்மதம்


தங்கள் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களைப் பற்றிய தகவல் அளிக்க, மொரீஷியஸ் அரசு முன்வந்துள்ளது.

சமீபகாலமாக பரபரப்பாக பேசப்படும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட சில நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளனர். பங்கு வர்த்தகத்தில் கிடைக்கும் லாபத்தை, சிலர் மொரீஷியஸ் நாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்துள்ளனர். இதன் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு வரி கிடையாது என்பதால், பலர் அந்நாட்டு வங்கிகளில் பணத்தை போட்டு வைத்துள்ளனர்.

இது குறித்து மொரீஷியஸ் நாட்டு நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் குறிப்பிடுகையில், "கடந்த மூன்றாண்டுகளில் இந்தியாவிடமிருந்து கறுப்புப் பணம் தொடர்பான தகவல் அளிக்கும்படி 64 கோரிக்கைகள் வந்துள்ளன. சர்வதேச சட்டத்துக்குட்பட்டு தேவையான தகவல்களை இந்தியாவுக்கு அளித்து வருகிறோம். 2009ம் ஆண்டு" செபி ' மற்றும் இந்திய சந்தை கட்டுப்பாட்டுத் துறையிடமிருந்து வங்கியில் உள்ள இந்திய பணம் குறித்து 17 கோரிக்கைகள் வந்தன. 2007ம் ஆண்டு இந்தியாவின் நிதி புலனாய்வு அதிகாரிகள் வாயிலாக 10 கோரிக்கைகள் வந்தன. அதே போல எங்கள் தரப்பிலிருந்து 15 கோரிக்கைகளை, இந்தியாவின் நிதி புலனாய்வு அமைப்பிடம் வைத்தோம். வங்கி தொடர்பான தகவல் தொடர்புகளை பரிமாறிக் கொள்ள, ஏற்கனவே இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொரீஷியஸ் துணை பிரதமர் ஜக்நாத் குறிப்பிடுகையில், " நிதி முறைகேடு, கறுப்புப் பணம் உள்ளிட்டவற்றை நாங்கள் ஆதரிக்கவில்லை' என்றார்.

***********

கருப்பு பண ரகசிய கணக்கு விவரம் : ஜெர்மன் வெளியிட சம்மதம்


வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்து இருக்கின்ற கருப்புபணம் குறித்த ரகசிய கணக்கு விவரங்களை ஜெர்மன் நாடும் இந்தியாவுக்கு தெரிவிக்க சம்மதம் அளித்துள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் பெரும்பாலான இந்தியர்கள் சட்டவிரோதமாக கருப்புபணம் பதுக்கி வைத்திருப்பதாகவும் அது குறித்து விவரங்களை வெளியிடக்க‌ோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பாக மத்திய அரசும் முதலில் வெளியிட முடியாது என ‌தெரிவித்து. பின்னர் சிலநிபந்தனைகளுடன் வெளியிடுவதாகவும் இது குறித்து ‌சம்மந்தப்பட்ட வெளிநாட்டுகளுடன் பேச்சுநடத்தி வருவதாகவும் கூறியது. இந்நிலையில் ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாடு பிரான்ஸின் பாரீசில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் ,ஜெர்மன் நிதி அமைச்சர் ஒல்ப்காங்க்சச்சாயூ, ஜெர்மன் மத்திய வங்கியின் கவர்னர் ஆகியோர் கடந்த சனிக்கிழமையன்று சந்தித்து பேசினர். அப்போது ஜெர்மனியின் முக்கிய வங்கியான லெச்டென்சியன்ஸ் நகரில் எல்.ஜி.டி, வங்கியின் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் பற்றிய ரகசிய கணக்கு விவரங்களையும், இந்தியர்கள் யார் என்ப‌தையும் வெளியிட சம்மதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக இரு நாடுகளிடையே எரிசக்தி, அனுசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடந்தன.



$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஒட்டு போடுவது நமது உரிமை , நாம் அதை (சோம்பேறிதனத்தினால்) யாருக்காகவும் விடுத்தார கூடாது ,மறக்காமல் ஒட்டு போடுவோம் .

ஒட்டு போட்டு விட்டு உங்களது கருத்துக்களை ஒட்டு சாவடியில் சொல்ல முடியாது , ஆனால் இங்கே நீங்கள் உங்களது கருத்துக்களை சொல்வதை யாராலும் தடுக்க முடியாது !

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Post a Comment

2 Comments

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....
see.,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_22.html
calmmen said…
thanks sakthi welcome