பூங்கா கேட்டு 10 வயது சிறுமி வழக்கு

ஹிமாச்சல் பிரதேசத்தில் , சிம்லா நகருக்கு பொழுது போக்குபூங்கா அமைத்து தர நடவடிக்கை எடுக்க கோரி 10 வயது சிறுமி ஐகோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக ஹிமாச்சல் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்‌ளார். ஹிமாச்சல்பிரதேச மாநிலம் சிம்லாவைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி விபாசாஸ்ரீவத்சாவ என்ற 11 வயது சிறுமி , ஐகோர்ட் நீதிபதி குரியன் ஜோசப் என்பருக்கு கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில் சிம்லா நகரில் 2 லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்பு வீடுகள் உள்ளன. 16 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன, முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது. வானுயர கட்டடங்கள் உள்ளன. இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களை போன்று வளரும் குழந்தைகளுக்கான ‌பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட விளையாட்டு மைதானங்கள் இல்லாமல் இருந்து வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி சிம்லா நகராட்சி கடிதம் எழுதினேன். அதில் பூங்கா அமைக்க போதிய நிதி வசதி இல்லை என்ற தகவல் வந்தது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உருக்கமாக எழுதியிருந்தார். கடித்தையே புகார் மனுவாக ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்குரியன் ஜோசப் , வி.கே. அஹூஜா ஆகியோர், ஹிமாச்சல் மாநில தலைமை செயலர், சிம்லா நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பி வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி பதில் மனு தாக்‌கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

1 Comments