NEWS

*** !! ***BEST VIEW IN THIS BLOG PLEASE USE MOZILLA FIREFOX AND GOOGLE CHROME - THANK YOU***

Subscribe Now

Tuesday, November 30, 2010

கேரளாவில் விஜய்க்கு சிலை


நடிகர்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டுவது, சிலை வைப்பது புதிதல்ல என்றாலும், அதில் ஒரு புதிய அம்சத்தை புகுத்தியிருக்கிறார்கள் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள். விஜய்க்கு சிலை வைத்திருக்கும் இவர்கள் அந்த சிலைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு அந்த சிலை தனது கை, கால்களை அசைக்குதாம்.

தமிழகத்தை போலவே கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்களுக்கு பஞ்சமில்லை. ரசிகர் மன்றங்களும் இருக்கின்றன. விஜயின் புது பட ரிலிஸின்போது அங்குள்ள ரசிகர்களும் பாலபிஷேகம், கட்அவுட் என அசத்துவார்கள். அப்படி அசத்திய ரசிகர்கள் இப்போது விஜய்க்கு சிலை வைத்து அசத்தியிருக்கிறார்கள்.

தற்போது காவலன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் கேரளாவிலுள்ள சொர்ணுர் விஜய் ரசிகர்கள் விஜயின் உருவ சிலையை வைத்திருக்கிறார்கள். இந்த சிலையின் சிறப்பு என்னவென்றால் கைகள், கால்கள், கண்கள் அனைத்தும் அசையுமாமம். அதுமட்டும் இல்லாமல் விஜயின் படப்பாடலுக்கு ஆடவும் செய்யுமாம். இப்படி பட்ட சிலையை பார்த்து விஜயும் மனதில் ஒரு சந்தோஷ ஆட்டத்தை போட்டுவிட்டாராம்.

இனி விஜயை கூட ரோபோ என்று சொல்லலாம் போலிருக்கிறது.

COURTESY.tamil.chennaionline

Post Comment

Mullen - Boston HQ offices













Post Comment

500 கோடி ஆண்டு தான் சூரியனுக்கு ஆயுள்

பூமியில் உள்ள உயிர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் சூரியன், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் தனது ஆயுளை முடித்துக் கொள்ளும் என்றும், அதே காலகட்டத்தில், பூமியின் வாழ்நாளும் முடிவுக்கு வரும் என்று தற்போதைய புதிய ஆய்வில் அனுமானிக்கப்பட்டுள்ளது.

பால்வெளி மண்டலத்தில் ஒரு பகுதி பிரபஞ்சம், ஒரு காலகட்டத்தில் சுருங்கத் தொடங்கி, பின் அழிந்து விடும் என்றும், எல்லை இல்லா பிரபஞ்சம் குறித்த கோட்பாடு குறிப்பிடுகிறது. பால்வெளி மண்டலத்தின் எல்லை கள் குறித்து அறிந்து கொள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து, வடிவியல் முறை கணிதப்படி கணக்கிட்டு வருகின்றனர். ஆனால், அதன் எல்லைகள் குறித்த உண்மைகள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. பெருவெடிப்பு கொள்கையின் படி, பிரபஞ்சம் இயற்கையாகவே எல்லையில்லாமல் விரிவடைந்து செல்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். "லட்சக்கணக்கானவர்கள் லாட்டரி சீட்டு வாங்கினாலும், அதில் ஒருவருக்குத் தான் முதல் பரிசு கிடைக்கிறது. அதுபோல, பிரபஞ்சத்தை விஞ்ஞானிகள் பலர் அதிகளவில் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவருக்குத்தான் விண்வெளி குறித்த ரகசியங்கள் தெரிய வருகின்றன.

பால்வெளி மண்டலத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் செயல்கள், மற்ற பிரபஞ்சங்களில் நின்று விட வாய்ப்புள்ளது' என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராபீல் பவுசோ. விரிவடையும் கொள்கையின்படி, பிரபஞ்சம் குறித்த சில கேள்விகளை விஞ்ஞானிகள் தவிர்த்து விடுகின்றனர். உதாரணமாக, நமது பிரபஞ்சம் இதற்கு முன்பு எப்படி இருந்தது. நமது பூமியில் மட்டும் ஏன் உயிர்கள் வாழும் சூழல் ஏற்பட்டது என்ற கேள்விகள் எழுகின்றன. "நமது பிரபஞ்சம் குறித்த கோட்பாடுகளை நாம் முன்னதாக பெற்றிருக்கவில்லை. எந்த கோட்பாட்டை நாம் விரும்பு கிறோமோ அதற்கு ஏற்றாற்போல் நல்ல எண்ணங்களை பெற்றிருக்கிறோம். மற்ற பிரபஞ்சங்களிலும் இதேபோன்ற எண்ணங்கள் தோன்றுமா என்பது தெரியவில்லை' என்று ஆஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வான்இயற்பியல் விஞ்ஞானி சார்லஸ் லைன்வேவர் கூறுகிறார். பல்வேறு சூத்திரங்கள் மூலம் கணக்கிட்டதில் நமது பிரபஞ்சம் தோன்றிய 1,370 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்றும் இதன் இயக்கம் நின்று போக இன்னும் 500 கோடி ஆண்டுகள் ஆகும் என்றும் ராபீல் பவுசோ மற்றும் அவரது குழுவினர் முடிவுக்கு வருகின்றனர்.

தற்போது நமது சூரியனுக்கு 457 கோடி வயது ஆகிறது. நடுத்தர வயதுள்ள நட்சத்திரமாக சூரியன் திகழ்கின்றது. இன்னும் 500 கோடி ஆண்டுகளில் சூரியனின் ஆயுட்காலம் முடிந்து விடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அந்த கால கட்டத்தில், சூரியனில் உள்ள வாயுகள் தீர்ந்து போய், அதன் வெளிப்புறம் சிவப்பாக, அச்சப்படுத்தும் வகையில் காட்சியளிக்கும். இறுதியாக விண்மீன் படலமாக மாறி விடும். அந்த நேரத்தில் பூமியின் விதியும் முடிந்து விடும் என்று கருதப்படுகிறது. ஆனால், சூரியன் மறைந்தாலும் பூமியில் வாழ முடியும் என்ற சூழ்நிலை அப்போது உருவாகலாம் என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


courtesy.dinamalar

Post Comment

Monday, November 29, 2010

தேவையற்ற அழைப்புகளால் தொந்தரவா ? விடுபட விரைவில் புது வழி

செல் போன் வாடிக்கையாளர்கள் பலரையும் புலம்ப வைக்கும் ஒரு விஷயம் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள். நேரம், காலம் பார்க்காமல் வரும் இந்த தேவையற்ற அழைப்புகளால் எரிச்சலில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியளிக்கும் திட்டம் ஜனவரியில் இருந்து செயல்படவிருக்கிறது . 2011 ஜனவரி முதல் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் எல்லாம் 700 என்ற துவக்க எண்கள் கொண்ட நம்பர்களில் இருந்தே வரும். இதனால் வாடிக்கையாளர்கள் அந்த அழைப்புகளை ஏற்க வேண்டுமா இல்லை புறக்கணிக்க வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்யமுடியும். இதே போல் ஏற்கனவே அமலில் இருக்கும் நேஷனல் டூ நாட் கால் டைரக்டரியிலும் சில மேம்படுத்தப்பட்ட மாறுதல்கள் செய்யப்படுகின்றன. தற்போது நடைமுறையில் என்.டி.என்.சி.,யில் பதிவு செய்து 45 நாட்களுக்குப் பிறகு தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., கள் தடை செய்யப்படுகின்றன. ஆனால் புதிய நடைமுறையின் கீழ் , பதிவு செய்த 7வது நாளிலேயே தேவையற்ற அழைப்புகள், மெசேஜூகளை தடை செய்ய முடியும். மேலும் ‌டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்.டி.என்.சி., டைரக்டரியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் எண்களுக்கு விதிமுறையை மீறி அழைப்புகள் விடுத்தால், முதல் 5 அத்துமீறல்களுக்கு பைன் மட்டும் போடப்படும். ஆறாவது முறையாக அத்துமீறல் நடந்தால் எந்த எண்ணில் இருந்து அழைப்பு விடுக்கப்படுட்டதோ, அந்த எண்ணின் சேவை துண்டிக்கப்படும்.

Post Comment

Saturday, November 27, 2010

ஹன்ஸிகாவுடன் பிரபுதேவா புதுக் காதல்-பிரபு தேவாவை என்ன செய்வது ?


ஏற்கெனவே ரம்லத்தை காதலித்து திருமணம் செய்து, மூன்று குழந்தைகளையும் பெற்ற பிரபு தேவா, நயன்தாராவுடன் கள்ளக் காதல், திருமணத்துக்கு முயற்சி என வேறு ரூட்டில் பயணித்து வருகிறார்.

இதனை எதிர்த்து பிரபருதேவா மனைவி ரம்லத் நீதிமன்றத்தில் வழக்கு மேல் வழக்காக தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகளில் பிரபு தேவாவுக்கும் நயன்தாராவுக்கும் அனுப்பப்பட்ட சம்மனுக்கே இன்னும் பதில் தராமல் டிமிக்கி கொடுத்து வருகிறார் பிரபுதேவா. நயன்தாரா தனது சென்னை இருப்பிடத்தை ரகசியமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், நயன்தாராவுடனான காதலும் பிரபுதேவாவுக்கு சலித்துவிட்டது போலிருக்கிறது.

இப்போது தனது எங்கேயும் காதல் படத்தில் நாயகியாக நடிக்கும் ஹன்ஸிகா மோத்வானி மீது அவருக்கு புதிய காதல் பிறந்துள்ளதாம். இருவரும் இப்போது ஒன்றாகச் சுற்றத் தொடங்கியுள்ளார்களாம். ஹன்ஸிகாவை ஷாப்பிங் அழைத்துப்போனாராம் பிரபுதேவா. வெளியிடங்களில் இருவரும் தங்கும் அளவு முன்னேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நட்சத்திர ஹோட்டலில் பிரபு தேவாவிடம் கடுமையாக சண்டை போட்டாராம் நயன்தாரா.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே சண்டை முற்றியதால், பக்கத்திலிருந்தவர்கள் என்னவோ ஏதோவென்று வந்து விசாரிக்கும் அளவுக்கு விபரீதமாகப் போய்விட்டதாம் நிலைமை.

பிரபு தேவாவை என்ன செய்வது ?


courtesy.thatstamil

Post Comment

எல்லையில்லா கற்பனை - மகிழ்ச்சியே !

Post Comment

Friday, November 26, 2010

மோசமான சாலை விபத்துக்கள் , ரசிக்க அல்ல , சிந்திக்க

வெளிநாடுகளில் எவ்வளவு பாதுகாப்பு இருந்தும் எப்படி வாகனங்களை ஓட்டுகிறார்கள் ?








இது தான் இந்தியா




சாலையில் செல்லும் போது விழிப்புடன் இருப்போம் .முடிந்த வரை எப்பொழுதும் விழிப்புடன் இருப்போம்
http://karurkirukkan.blogspot.com.

Post Comment

கலைப்புலி தாணு இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார்






































































































courtesy.onlysuperstar.com

Post Comment

Thursday, November 25, 2010

Paris Hilton -29-year old beauty












Post Comment

Wednesday, November 24, 2010

உள்ளத்தை கொள்ளை கொள்ளும் புதிய மாடல் கார்கள்

























Post Comment

POPULAR

Followers

FOLLOW ME