உலகின் மிகவும் இளம் வயது யோகா ஆசிரியை

உலகிலேயே மிகவும் இளம் வயது யோகா ஆசிரியை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் உ.பியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஸ்ருதி பாண்டே.உ.பி. மாநிலம் ஜன்சி நகரைச் சேர்ந்தவர் இந்த குட்டி யோகா ஆசிரியை. 6 வயதே ஆகும் ஸ்ருதி, உலகிலேயே மிகவும் இளம் வயது யோகா ஆசிரியை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு யோகா சொல்லிக் கொடுத்த மாஸ்டர் ஹரி சேத்தன். இவருக்கு வயது 67 என்பது குறிப்பிடத்தக்கது.ஜன்சி நகரில் உள்ள பிரமானந்த் சரஸ்தி தாம் என்ற ஆசிரமத்தில் தினசரி காலை 5.30 மணிக்கு தனது யோகா வகுப்பை தொடங்கி சொல்லிக் கொடுக்கிறார் இந்த குட்டி ஆசிரியை.


கடந்த 2 வருடங்களாக யோகா சொல்லிக் கொடுத்து வருகிறார் ஸ்ருதி. அதாவது தனது 4 வயது முதலே அவர் யோகா ஆசிரியையாக மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆசிரமத்தை ஹரி சேத்தன் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தார். அன்று முதல் இன்று வரை இவ்வளவு இளம் வயதில் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு யோகாவில் கரை கண்டது ஸ்ருதி மட்டும்தான் என்கிறார் ஹரி பெருமையுடன்.வர்த்தகப் பிரமுகர்கள், ஆசிரியர்கள், இல்லத்தரசிகள், பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் என கிட்டத்தட்ட 30 பேர் புடை சூழ வெள்ளை நிற கால்சட்டை, சிவப்பு நிற டி சர்ட் அணிந்து அழகாக யோகா சொல்லிக் கொடுக்கிறார் ஸ்ருதி.

இதுகுறித்து ஸ்ருதி கூறுகையில், நான் சொல்லித் தருவதை மற்றவர்கள் கேட்டு நடப்பது பெருமையாக இருக்கிறது. என்னை விட வயதில் பல மடங்குப் பெரியவர்கள் நான் சொல்வதை ஆர்வத்துடன் கேட்கும்போது உண்மையாகவே எனக்கு ஆசிரியை என்ற உணர்வு வருகிறது. எனது சகோதரர் யோகா செய்வார்.அதைப் பார்த்துதான் எனக்கும் ஆர்வம் வந்தது. பின்னர் நானாகவே செய்ய ஆரம்பித்தேன். ஆனால் அதில் சிரமம் இருந்தாதல் என்னை எனது பெற்றோர் யோகா வகுப்புக்கு அனுப்பி கற்கச் செய்தனர் என்கிறார் ஸ்ருதி.

ஸ்ருதியின் சகோதரர் ஹர்ஷ் குமாருக்கு இப்போது 11 வயதாகிறது. இவர் ஏற்கனவே 5 வயதில் யோகாவின் 84 நிலைகளையும் கற்று லிம்கா சாதனை படைத்தவர் ஆவார். இருப்பினும் யோகா ஆசிரியராக செயல்படும் எண்ணம் இவரிடம் இல்லை. ஆனால் தனது தங்கையின் திறமையை வெகுவாக பாராட்டுகிறார் ஹர்ஷ்.


கற்க வந்த 6 மாதத்திலேயே சிறப்பான பயிற்சி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் ஸ்ருதி என்று கூறும் ஹர்ஷ், ஸ்ருதிக்கு இயல்பிலேயே யோகா கை கூடி வந்தது என்றும் பாராட்டுகிறார்.
ஸ்ருதியின் ரசிகர்களில் ஒருவர் ஸ்வாமி பானு. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு வயது 90 என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

1 Comments

அருமையான பதிவு.
Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...