14 வயது முகமது சுகைல் எம்.சி.ஏ படிப்பிற்கு தேர்ச்சி பெற்று சாதனை


தகவல் தொழில்நுட்பம் மற்றும் சார்பு துறைகளில் மாணவர்களின் திறமை களையும் வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு பயிற்சிகளை சிறந்த முறையில் அளித்து வரும் மேஸ்நெட் பயிற்சி நிறுவனத்தின் எம்.சி.ஐ.டி.பி படிப்பில் பயிற்சி பெற்ற 9வது வகுப்பு படித்துள்ள 14வயது மாணவன் பாரதியார் பல்கலைக் கழகத்தில் எம்.சி.ஏ., படிப்பிற்கு தேர்வாகியுள்ளார். இது குறித்து மாணவர் முகமது சுகைல் கூறியதாவது :
எனக்கு சிறு வயதிலேயே கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். சிறிய சிறிய புரோக்ராம்களை செய்ய தொடங்கினேன். இராமநாதபுரத்தில் உள்ள கார்மல் கார்டன் பள்ளியில் சேர்ந்து படித்து கொண்டே மேஸ்நெட் நிறுவனத்தில் பகுதிநேரமாக டி.சி.ஏ.(டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேசன்) படித்தேன். தொடர்ந்து மைக்ரோசாப்டில் புரபஷனல், டெக்னாலஜி ஸ்பெஷலிஸ்ட், புரபஷனல் டெவலப்பர், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர், ஐ.டி. புரபஷனல் போன்ற சான்றிதழ் படிப்புகளும், சிஸ்கோவில் நெட்வொர்க் அசோசியேட், நெட்வொர்க் புரபஷனல், இண்டர்நெட்வொர்க் எக்ஸ்பெர்ட், டாட் நெட் என்பது உள்ளிட்ட 13 டிப்ளமோ படிப்புகள் படித்து முடித்தேன். எனக்கு மேஸ்நெட் நிறுவனத்தார் சிறப்பாக பயிற்சி அளித்தார்கள். தொடர்ந்து பாரதியார் பல்கலைக்கழக தொலைமுறை கல்விக்கூடத்தில் எம்.சி.ஏ.படிக்க விண்ணப்பித்தேன். என்னுடைய விண்ணப்பத்தை சரிபார்த்து நேர் காணலுக்கு அழைத்தார்கள். அங்கு ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் 20 பேர் என்னுடைய திறமையை பரிசோதனை செய்தனர். அவர்கள் அனைவரும் துறை சார்ந்த அனுபவம் மிக்கவர்கள். என்னுடைய பதில் அவர்களுக்கு திருப்தி அளித்ததால் நேர்காணலை தொடர்ந்து என்னுடைய திறமையின் அடிப்படையில் எம்.சி.ஏ. படிக்க அனுமதித்தார்கள். மேஸ்நெட் கல்வி நிறுவனம் அளித்த பயிற்சியும், எனது தாத்தா உள்ளிட்ட குடும்பத்தினர் அளித்த ஊக்கத்தின் விளைவாகத்தான் நான் குறைந்த வயதில் 13 சான்றிதழ்களை பெற்றேன். அதன் பயனாக தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ., பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளேன். எம்.சி.ஏ.,வுக்கு பிடிப்பிற்கு பிறகு அதில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்குவதை அடுத்த குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்


அதன் மூலம் தகவல் தொழில்நுட்ப துறையில் மிக இளவயதில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்ற பெறுமையை பெற விரும்புகிறேன் என்றார். இது குறுத்து மேஸ்நெட் நிறுவனத்தின் இயக்குனர் மணி கூறியதாவது : முகமத சுகையல் என்ற அந்த மாணவனுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை அவனது 12வது வயதிலேயே மேஸ்நெட் அடையாளம் கண்டு கொண்டது. கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் அவனுக்குள்ள அபார ஆர்வமும் பெற்றிருந்த அறிவும் வெளிப்பட்டது. குடும்பத்தினர் கொடுத்த ஊக்கத்தின் விளைவாக 12வயதிலேயே ஆன்லைன் குளோபல் சான்றிதழ் பெற்றான். மைக்ரோசாப்ட் அளிக்கும் சமீபத்திய பயிற்சியான எம்சிஐடிபி உட்பட மேஸ்நெட் அளிக்கும் பல்வேறு சான்றிதழ் படிப்புகளில் இதுவரை 13 சான்றிதழ்கள் பெற்றுள்ளான். முகமது சுகைல் பெற்றுள்ள இந்த அபார ஆற்றலின் பலனாக பாரதியார் பல்கலைக்கழகம் அவன் 9வது படித்து முடித்தவுடன் 14வயதில் எம்.சி.ஏ., படிப்பில் சேர்த்துக் கொண்டது. பாரதியார் பல்கலைகழகத்தில் எம்.சி.ஏ., மாணவர் களின் மிக இளவயதுக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மெஸ்நெட் கல்வி நிறுவனம் உலக அளவில் அங்கீகரிக்கப்படும் பலவித தகவல் தொழில்நுட்ப பயிற்சிகளை மாணவர்களுக்கு அளித்து வருகிறது. இதுவரை 10, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மேஸ்நெட்டில் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் 7 இடங்களில் கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மைக்ரோசாப்ட், சிஸ்கோ, ரெட் ஹேட், ஈசி கவுன்சில், புரோமெட்ரிக், பியர்சன் முதலான முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து தொழிற்துறையின் தேவை களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அதி நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய பயிற்சிகளை அளித்து வருகிறது என்றார். மாணவர் முகமது சுகைல் சத்தி ரோட்டில் உள்ள அலமு நகரை சேர்ந்தவர் பாதுஷா மொய்தீன்நிஷாத் ஆகியோர் மகனாவார். இவரது தாத்தா சலீமின் ஊக்கமும் மேஸ்நெட் நிறுவனத்தின் பயிற்சியும் முகமது சுகைலின் இந்த கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் காரணம் என்று மாணவனின் பெற்றறோர் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments