சிங்கப்பூரைத் தாக்கிய திடீர் வெள்ளம்




சிங்கப்பூரில் நேற்று அதிகாலையில் 4-40 மணி முதல் 6-40 மணி வரை விடாமல் இரண்டு மணிநேரம் பெய்த பலத்த மழை காரணமாக கடைக்காரர்கள் பலருக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் ஒருவர் திரு இக்பால் (55). அப்பர் தாம்சன் ரோட்டில் 24 மணி புரோட்டா கடை நடத்திவரும் இவருக்கு நேற்று $30,000க்கும் அதிக சேதம் ஏற்பட்டுவிட்டது.

“என் கடைக்குள் வெள்ளம் புகுந்து தொடை அளவுக்குத் தண்ணீர் ஏறிவிட்டது.

“கடையில் இருந்த 1,000 முட்டைகள் உடைந்து சேதமடைந்தன. மூன்று குளிர் சாதனப் பெட்டிகள் கெட்டுப் போய்விட்டன.
“முப்பது மூட்டை மாவு போய் விட்டது. இவ்வளவு சேதத்தையும் ஏற்படுத்திவிட்டு வெள்ளம் 30 நிமிடங்களில் வடிந்து விட்டது,” என்று சொன்னார் திரு இக்பால்.

என்றாலும் நேற்று கடையை நடத்த முடியாமல் மூடி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே சிங்கப்பூர் முழுவதும் நேற்று அதிகாலையில் பெருத்த மழை பெய்ததில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
பிராடல் ரோடு, சாங்கி ரோடு, புக்கிட் தீமா, ஆர்ச்சர்ட் ரோட்டின் சில பகுதிகள் முதலானவை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வட்டாரங்கள்.சில பகுதிகளில் 300 மிமி அளவுக்கு வெள்ளம் ஏறியது, பொதுவாக 30 நிமிடங்களில் வெள்ளம் வடிந்தது என்று தேசியச் சுற்றுச் சூழல் முகவையின் வானிலைச் சேவை தெரிவித்தது.அங்கெல்லாம் பல வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன. புக்கிட் தீமா பகுதியில் இருக்கும் டெசாரினா கூட்டு நிர்வாக அடுக்குமாடி கட்டடத்தில் குதிகால் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்தது. அடித்தள கார்ப்பேட்டைகள் வெள்ளக்காடாயின. சில வாகனங்கள் கிட்டதட்ட முழுவதும் மூழ்கிவிட்டன.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை மிகவும் விரைவாகச் செயல்பட்டு 20 பகுதிகளில் சிக்கிக்கொண்ட 60 பேரை பத்திரமாக மீட்டது. யாருக்கும் காயம் எதுவும் இல்லை.அப்பர் தாம்சன் ரோட்டில் வெள்ளத்தில் எஸ்பிஎஸ் பஸ்ஸில் சிக்கிக்கொண்ட பயணிகளும் மீட்கப் பட்டனர். மரம் விழுந்ததால் டோர்செட் ரோட்டில் போக்கு வரத்து தேக்கம் ஏற்பட்டது.அப்பர் தாம்சன் ரோட்டில் கடைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்று தெரிவிக்கப் பட்டது. அங்கு பெரிய குளிர் சாதனப் பெட்டிகள் கவிழ்ந்தன. நொறுங்கின.டெல்பி ஆர்ச்சர்ட்டில் இருக்கும் கார்ப் பேட்டை சென்ற மாதம் பெய்த பலத்த மழையால் 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பாதிக்கப்பட்டது.அந்தப் பேட்டையில் நேற்று மீண்டும் வெள்ளம் ஏற்பட்டது.

காலாங், தஞ்சோங் காத்தோங் வட்டாரங் களின் சில பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.இதற்கிடையே இந்த வட்டாரத்தில் நிலவும் நிலையற்ற பருவ நிலையே நேற்றைய மழைக்கு காரணம் என்று வானிலைச் சேவை தெரிவித்தது.சிங்கப்பூரின் மத்திய, கிழக்குப் பகுதிகளில் மழை கடுமையாக இருந்தது என்று கூறிய அந்தச் சேவை, இந்த வட்டாரத்தில் நிலை யில்லா பருவநிலை நிலவு வதற்கு ‘கோன்சூன்’ சூறாவளியே காரணம் என்றும் விளக்கியது.

சிங்கபூருக்கு பிழைப்புக்காக போயிருக்கும் மக்களே பத்திரமா இருந்துக்குங்க !
courtesy:tamilmurasu

Post a Comment

0 Comments